யா அல்லாஹ்! இஸ்லாத்தின் மீதும், சுன்னாவின் மீதும் எம்மை நீ மரணிக்கச் செய்வாயாக!


          இமாம் தல்ஹா அல்பக்தாதீ (ரஹ்) கூறுகின்றார்கள்:- 

           இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்களுடன் கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்தேன். அப்போது அவர்கள், பேசாமல் நீண்ட நேரம்  மெளனமாகவே இருந்தார்கள். ஏதேனும் பேசினால் கூட, *“யா அல்லாஹ்! இஸ்லாத்தின் மீதும், சுன்னாவின் மீதும் எம்மை நீ மரணிக்கச் செய்வாயாக!”*என்றுதான் பேசுவார்கள்.

{ நூல்: 'தபbகாதுல் ஹனாபிbலா' , 1/179 }


قال طلحة البغدادي رحمه الله تعالى:- 

ركبت مع الإمام أحمد بن حنبل في سفينة، فكان يطيل السكوت، فإذا تكلم قال: *[ اللهم أمتنا على الإسلام والسنة ]*

{ طبقات الحنابلة، ١/١٧٩ }

➖➖➖➖➖➖➖➖➖➖

💥👉🏿 சவூதி அரேபிய  அறிஞர் அல்லாமா ஸாலிஹ் அல்பfவ்ஸான் அல்பfவ்ஸான் (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:

          “சுன்னாவைப் பற்றிப் பிடித்து வாழ்பவர் கஷ்டம், களைப்பு, இழிவு, பழிப்பு ஆகியவற்றையும், அல்லது மக்களிடமிருந்து அச்சுறுத்தலையும் சந்திக்கவே செய்வார்! என்றாலும், அதற்காக அவர் பொறுமையாக இருப்பதும், சத்தியத்தைப் பின்பற்றுவதை விட்டும்  பலவீனமடைந்து போகாதிருப்பதும்  அவசியமாகும்!”.

{ நூல்: 'ஷர்ஹுஸ் சுன்னா' ,பக்கம்: 306 }


قال العلامة صالح الفوزان الفوزان حفظه الله تعالى:- 

      [ من تمسك بالسنة سيلقى عنتا وتعبا واحتقارا وازدراء، أو تهديدا من الناس. لكن عليه أن يصبر ولا يتضعضع عن الحق ]

{ شرح السنة، ص _ ٣٠٦ }

🌿➖➖➖➖➖➖➖➖🌿

                ✍தமிழில்✍

                அஷ்ஷெய்க்

N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


Previous Post Next Post