இமாம் ஸுஹைர் பின் அபீ நுஐம் (ரஹ்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, “அப்துர்ரஹ்மானின் தந்தை (ஸுஹைர்) அவர்களே! ஏதேனும் ஒரு விடயம் குறித்து எனக்கு நீங்கள் உபதேசிக்கமாட்டீர்களா?” என்று கேட்டார். “ஆம்; உபதேசிக்கிறேன்!” என்று சொல்லி விட்டு, *“நீ அலட்சியமாக இருக்கும் நிலையில் உன் உயிரை அல்லாஹ் கைப்பற்றி, உன்னை அவன் எடுத்து விடுவது குறித்து எச்சரிக்கையாக இருந்து கொள்!”* என்று கூறினார்கள்.
{ நூல்: 'ஸிபfதுஸ் ஸப்fவா' , 4/9 }
عن زهير بن أبي نعيم رحمه الله، أنه قال له رجل: يا أبا عبد الرحمن! اتوصي بشيء؟ قال: *"نعم، إحذر أن يأخذك الله وأنت على غفلة!"*
{ صفة الصفوة، ٤/٩ }
➖➖➖➖👇👇➖➖➖➖
🌻அல்லாஹ் கூறுகின்றான்: “இக்கிராமங்களில் உள்ளவர்கள் முற்பகல் வேளையில் விளையாடிக் கொண்டிருக்கும் போது, எமது தண்டனை அவர்களிடம் வந்து விடுவதைப் பற்றி அச்சமற்றிருக்கின்றனரா?” [அல்குர்ஆன் 7:98]
🌿➖➖➖➖➖➖➖➖🌿
✍தமிழில்✍
அஷ்ஷெய்க்
N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா