உங்கள் தவறுகளைத் திருத்தும் உபகாரத்தைச் செய்வோரை நேசியுங்கள்


          இஸ்லாமியப் பேரறிஞர் இமாம் முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) கூறுகின்றார்கள்:

            “உனக்கு உபகாரம் செய்யும் ஒவ்வொருவர் விடயமும், குறிப்பாக மார்க்கத்தில், உபதேசத்தில், நன்மையை ஏவுதலில், தீமையைத் தடுத்தலில் உனக்கு உபகாரம் செய்யும் ஒவ்வொருவர் விடயமும் நீ அவருடன் நேசம் கொள்ள வேண்டும் என்பதையும், அவரோடு நீ அன்பாக நடந்து கொள்ள வேண்டும் என்பதையுமே வலியுறுத்துகிறது.

           இதற்கு மாற்றமாக, சில மனிதர்கள் இன்று செய்துகொண்டிருக்கும் விடயம் யாதெனில், அவர்களில் ஒருவருக்கு  நீ நன்மையைக்கொண்டு ஏவிவிட்டால், இன்னும் தீமையை விட்டும் அவரை நீ தடுத்துவிட்டால், அல்லது நன்மையொன்றின்பால் அவரை நீ அழைத்தால், அல்லது நேர்வழியொன்றின் பக்கம் அவருக்கு நீ வழிகாட்டினால் அது, அவருடைய உள்ளத்தில் உனக்கெதிரான கோபத்தையே சில வேளைகளில் தூண்டி விடுகிறது. இது புத்திக்கே மாற்றமானதாகும்; மார்க்கத்திற்கும் முரணானதாகும்!”.

{ நூல்: 'ஷர்ஹு இக்திழாயிஸ் ஸிராதில் முஸ்தகீம்' , பக்: 279 }

🍀➖➖➖➖➖➖➖➖🍀

           قال العلامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى: [ كل من أحسن إليك ولا سيّما فى الدين والنصيحة والأمر بالمعروف والنهي عن المنكر، فإن هذا يقتضي منك أن تحبّه وتودّه.

          خلافا لما يفعل بعض الناس الآن إذا أنت أمرته بالمعروف ونهيته عن المنكر، أو دعوته إلى خير، أو أرشدته إلى هدى فإنه قد يحمل في قلبه عليك بغضا. وهذا خلاف العقل وخلاف الدين! ]

{ شرح إقتضاء الصراط المستقيم،  ص -  ٢٧٩ }

🍀➖➖➖➖➖➖➖➖🍀

                ✍தமிழில்✍

                அஷ்ஷெய்க்

N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


Previous Post Next Post