உச்சகட்ட மடமைத்தனம் இதைவிட வேறென்ன இருக்கிறது


           இஸ்லாமியப் பேரறிஞர் இமாம் இப்னுல் கைய்யிம் (ரஹ்) கூறுகின்றார்கள்:

           *பாவங்கள்:*இருக்கின்ற அருட்கொடைகளை இல்லாமலாக்கி, கிடைக்கின்ற அருட்கொடைகளைத் துண்டித்து விடுகின்றன! அதாவது, இருப்பதை நீக்கி கிடைப்பதைத் தடுக்கின்றன! *பெறுவதற்கான காரணி, அழித்து விடும் ஆபத்து*என்றவாறு ஒவ்வொன்றுக்கும் காரணியையும் ஆபத்தையும் அல்லாஹ் ஆக்கியே வைத்திருக்கின்றான். அவன்  அருட்கொடைகளைப் பெற்றுக்கொள்ளும் காரணிகளில் பிரதானமாக அவனுக்கு வழிபடுவதையும், அவற்றைத் தடுக்கும் ஆபத்துக்களில் முக்கியமானதாக அவனுக்கு மாறு செய்வதையும் அவன் ஏற்படுத்தியிருக்கின்றான். அல்லாஹ் தனது அடியான் மீது புரிந்துள்ள தனது அருட்கொடையைப் பாதுகாக்க நாடினால் அதில் அவனுக்கு வழிப்பட்டு நடப்பதன் மூலமே அதைப் பாதுகாக்கலாம் என்ற உணர்வை அம்மனிதனுக்கு அவன் உண்டாக்குவான். அருட்கொடையை அம்மனிதனை விட்டும் நீக்கி விட அல்லாஹ் நாடிவிட்டால், பாவத்தின் மூலம் அவனுக்கு மாறு செய்கின்ற வரைக்கும் அம்மனிதனை அவன் கேவலப்படுத்துவான்.

         தாம் செய்த பாவங்கள் மூலம் அல்லாஹ்வின் அருட்கொடைகள் அகற்றப்பட்ட மனிதர்களின் செய்திகளைக் கேள்விப்பட்டும்,  தன்னிலும், பிறரிலும் இது நடந்திருப்பதை அவன் நேரடியாகப் பார்த்திருந்தும் அல்லாஹ்வுக்கு மாறு செய்கின்ற விடயத்தில் அவன் நிலைத்திருப்பதுதான் ஆச்சரியமான விஷயமாகும்! இத்தகையவன்,மொத்தத்திலிருந்து தான் விதிவிலக்களிக்கப்பட்டவன் போலவும், அல்லது பொதுவானதிலிருந்து தான் குறிப்பானவன்  போலவும், மற்றவர்கள் விடயத்தில்தான் இது நடைமுறையாகுமே தவிர தன் விடயத்தில் அல்ல என்பதாகவும், பிற மக்களுக்குத்தான் இதெல்லாம் வந்து சேரும்; தனக்கல்ல! என்பது போன்றும் அவன் எண்ணிக்கொள்கிறான். இதை விட உச்சகட்ட மடமைத்தனம் வேறென்னதான் இருக்கிறது?! ஆன்மாவுக்குச் செய்யும் அநியாயம் இதற்கு மேலால் வேறென்னதான் இருக்கிறது?! தீர்ப்பு அல்லாஹ்விடமே உள்ளது!”

{ நூல்: 'அல்ஜவாபுbல் காபீf ',பக்கம்:159 }

🌷➖➖➖➖➖➖➖➖🌷

              قال العلامة إبن القيم الجوزية رحمه الله تعالى: [ المعاصي تزيل النعم الحاضرة، وتقطع النعم الواصلة، فتزيل الحاصل، وتمنع الواصل. وقد جعل الله سبحانه لكل شيئ سببا وآفة: سببا يجلبه، وآفة تبطله. فجعل أسباب نعمه الجالبة لها طاعته، وآفتها المانعة منها معصيته. فإذا أراد حفظ نعمته على عبده ألهمه رعايتها بطاعته فيها، وإذا أراد زوالها عنه خذله حتى عصاه بها.

           ومن العجيب علم العبد بذلك مشاهدة بنفسه وغيره، وسماعا لما غاب عنه من أخبار من أزيلت نعم الله عنهم بمعاصيه وهو مقيم على معصية الله، كأنه مستثنى من هذه الجملة أو مخصوص من هذا العموم. وكأن هذا أمر جار على الناس لا عليه، وواصل إلى الخلق لا إليه! فأي جهل أبلغ من هذا؟ وأي ظلم للنفس فوق هذا؟ فالحكم لله العلي الكبير ]

{ الجواب الكافي،  ص - ١٥٩ }

🌷➖➖➖➖➖➖➖➖🌷

                  ✍தமிழில்✍

                  அஷ்ஷெய்க்

N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா.         

Previous Post Next Post