மனோ இச்சைவாதியை அறிந்து கொள்வது எப்படி?


         சவூதி அரேபிய நாட்டு அறிஞர் அஷ்ஷெய்க் ஸாலிஹ் அல்பfவ்ஸான் (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:

             “சத்தியவாதி தவறிழைத்து விட்டால், 'ஆதாரத்தில் நீர் தவறிழைத்து வி்ட்டீர்; சுன்னாவில் நீர் தவறிழைத்து விட்டீர்!' என்று அவரிடம் நீ கூறும்போது அதை அவர் ஏற்றுக்கொள்வார். காரணம், அவருடைய நோக்கமே சத்தியம்தான். தனது கருத்துக்கு வலு சேர்க்க வேண்டும் என்பது அவருடைய நோக்கமே அல்ல!

          ஆனால், மனோ இச்சைவாதியிடம், 'நீ தவறிழைத்து விட்டாய்!' என்று நீ சொல்லிவிட்டால் நிச்சயமாக அவன் கோபப்படுவான்; கடுமையாகவும் நடந்து கொள்வான். இது மனோ இச்சைவாதிகளின் அடையாளமாகும். ஏனெனில், இவர்கள் ஒவ்வொருவரும் விரும்புவது தமது மனோ இச்சைக்கு வலு சேர்க்க வேண்டும் என்றுதான்!”.

{ நூல்: 'ஷர்ஹுஸ் ஸுன்னா லில்பbர்பbஹாரீ' , பக்கம்: 56 }

➖➖👇👇👇👇👇👇➖➖

👉🏿 அல்லாஹ் கூறுகின்றான்: “நிச்சயமாக காரூன் மூசாவின் சமூகத்தைச் சார்ந்தவனாக இருந்தான். அவன் அவர்கள் மீது வரம்பு மீறினான். மேலும், அவனுக்கு நாம் பல பொக்கிஷங்களை வழங்கியிருந்தோம். நிச்சயமாக, அவற்றின் திறவுகோல்கள் பலமான ஒரு குழுவினருக்கும் (சுமப்பதற்குப்) பளுவாக இருந்தன. 'நீ ஆணவம் கொள்ளாதே! ஆணவம் கொள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கமாட்டான்' என்று அவனது சமூகம் அவனுக்குக் கூறியதை (நபியே நீர் எண்ணிப்பார்ப்பீராக)

         மேலும், அல்லாஹ் உனக்கு வழங்கியவற்றில் நீ மறுமை வீட்டைத் தேடிக்கொள்! இன்னும் இவ்வுலகில் உனது பங்கை நீ மறந்து விடவும் வேண்டாம். அல்லாஹ் உனக்கு உபகாரம் செய்தது போன்று நீயும் உபகாரம் செய்வாயாக! மேலும், பூமியில் நீ குழப்பத்தை நாடாதே! நிச்சயமாக அல்லாஹ் குழப்பம் விளைவிப்பவர்களை நேசிக்கமாட்டான் (என்றும் கூறினர்).

           அதற்கவன், 'இது எனக்கு வழங்கப்பட்டதெல்லாம் என்னிடமுள்ள அறிவின் மூலமேயாகும்!' எனக் கூறினான்”.

(அல்குர்ஆன், 28:76 -78)

👉🏿 மேலும் அல்லாஹ் கூறுகிறான்: “ 'அல்லாஹ்வை அஞ்சிக்கொள்!' என அவனிடம் கூறப்பட்டால் (அவனது) வறட்டு கெளரவம் அவனைப் பாவத்தில் தள்ளி விடுகின்றது. அதனால் நரகமே அவனுக்குப் போதுமானதாகும். தங்குமிடத்தில் அது மிகக் கெட்டதாகும்”.

(அல்குர்ஆன், 2: 206)

🌿➖➖➖➖➖➖➖➖🌿

                  ✍தமிழில்✍

                  அஷ்ஷெய்க்

N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


Previous Post Next Post