பெற்றோருக்கு உபகாரம் செய்வதில் எம் முன்னோர் நிலையும்! எமது நிலையும்!


🎯 உமர் இப்னு து(ذ)ர் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் மகன் மரணித்தபோது அவரிடம்,  *“பெற்றோருக்கு உபகாரம் செய்வதில் உங்கள் மகனின் நிலை எப்படியிருந்தது?”* என்று வினவப்பட்டது. அதற்கவர்கள், *“எந்தப் பகல் பொழுதிலும் என்னுடன் அவர் எனக்குப் பின்னாலே தவிர நடந்து சென்றதில்லை; எந்த இரவிலும் எனக்கு முன்னாலே தவிர அவர் நடந்து சென்றதில்லை; மேலும், அவருக்குக் கீழே நான் இருந்த போது மேல் பகுதியில் அவர் ஏறியதும் இல்லை!”* எனக் கூறினார்கள்.

{ நூல்: 'அல்bபிர்ரு வஸ்ஸிலது' லிப்னில் ஜவ்ஸீ, 01/89 }


              عن عمر بن ذرّ: لمّا مات إبنه قيل له: *"كيف كان برّه؟"* ق: *« ما مشى معي نهارا قط إلا كان خلفي، ولا ليلا إلا كان أمامي، ولا رقى على سطح أنا تحته »*

{ البرّ والصلة لابن الجوزي، ١/٨٩ }

➖➖➖➖➖➖➖➖➖➖

🎯 இமாம் ஸுஹ்ரீ (ரஹிமஹுல்லாஹ்) சொல்லத் தான் கேட்டதாக, மூஸா பின் உக்பா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

        'அபுல்ஹசன் அலி இப்னுல் ஹுசைன் ஸைனுல் ஆப்தீன்' (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் தாபிஈன்களிலுள்ள தலைவர்களில் ஒருவராக இருந்தார்கள். அத்துடன், *“மனிதர்களில் உமது தாய்க்கு அதிகம் உபகாரம் செய்யக்கூடியவர்கள் நீங்கள்தான்!”* என்று சொல்லப்படும் அளவுக்கு தனது தாய்க்கு அதிகம் உபகாரம் செய்யக்கூடியவர்களாகவும் இவர்கள் இருந்தார்கள்.

{ நூல்: 'அல்bபிர்ரு வஸ்ஸிலது' லிப்னில் ஜவ்ஸீ, 01/86 }


             عن موسى بن عقبة قال: سمعت الزهري يقول: [ كان أبو الحسن علي بن الحسين زين العابدين رضي الله عنهم كان من سادات التابعين، وكان كثير البرّ بأمه حتى قيل له: *« إنك من أبرّ الناس بأمك »* ]

{ البرّ والصلة لابن الجوزي، ١/٨٦}

❇➖➖➖➖➖➖➖➖❇

               *✍தமிழில்✍*

                    அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


أحدث أقدم