மனிதர்களில் நல்லவர்களாக உள்ளவர்கள் மிக மிகக் குறைவானவர்களே


          அஷ்ஷெய்க் முஹம்மத் உமர் பாbஸ்மூல் (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

          *“நூறு ஒட்டகங்கள் இருந்தால் (பயணத்திற்கு) சரிவரக்கூடியதாக ஒன்று அவற்றில் கிடைப்பது அரிதாக இருப்பது போல, மனிதர்களில் நல்லவர்களாக இருப்பவர்கள் மிகக் குறைவானவர்களாகவே இருக்கின்றனர். (இதை) என் மார்க்கம் எனக்குக் கற்றுத் தந்திருக்கின்றது!”* 

          நபி ஸல்லழ்ழாஹு (அலைஹி வசல்லம்) அவர்கள் கூறினார்கள்: *“மனிதர்கள் (பொதி சுமக்கும்) நூறு ஒட்டகங்களைப் போன்றவர்கள். அவற்றில், பயணத்திற்குப் பயன்படும் ஒட்டகத்தை நீ காண்பது அரிதாகும்!”*

{ நூல்: புகாரி - 6498 / முஸ்லிம் - 4978 }

*{ فيس بوك:* قناة الكتاب والسنة بفهم سلف الأمة }


                 *“குறைபாடுகளுடைய மனிதர்கள் உலகத்தில் நிறையவே இருந்துகொண்டிருக்கின்றனர்; ஆனால், அவர்களில் சிறப்புக்குரியவர்களாகவும் திருப்திக்குரியவர்களாகவும் இருப்பவர்கள் மிகக் குறைவானவர்கள் ஆவார்கள்”!* என்று இமாம் ஹத்தாபீ, இமாம் இப்னு பbத்தால் (ரஹிமஹுமல்லாஹ்) போன்றோர் இந்த ஹதீஸுக்கு விளக்கம் அளித்துள்ளனர். { பார்க்க: 'fபத்ஹுல் பாரீ', 11/343 }


             قال الشيخ محمد عمر بازمول حفظه الله تعالى:-

             *[ علّمني ديني: أن الصالح من الناس قليل، كالإبل المئة لاتكاد فيها واحدة تصلح!*

            عن الزهري قال: أخبرني سالم بن عبدالله، أن عبدالله بن عمر رضي الله عنهما قال: سمعت رسول الله صلّى الله عليه وسلم يقول: *« إنّما الناس كالإبل المئة، لاتكاد تجد فيها راحلة»* ]

*{ فيس بوك:* قناة الكتاب من بفهم سلف الأمة }

➖➖➖➖➖➖➖➖➖➖

❇👉🏿 அல்லாஹ் கூறுகிறான்: *“எனது அடியார்களில் நன்றி செலுத்துவோர் மிகக் குறைவானவர்களே!”*

(அல்குர்ஆன், 34:13)

🔰➖➖➖➖➖➖➖➖🔰

               *✍தமிழில்✍*

                    அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


أحدث أقدم