இமாம் அபூ இஸ்ஹாக் இப்ராஹீம் பின் மூசா அஷ்ஷாதிபீb (ரஹ்) கூறுகின்றார்கள்:
அசத் இப்னு மூசா (ரஹ்) அவர்கள் அசத் இப்னுல் புfராத் (ரஹ்) அவர்களுக்கு இவ்வாறு கடிதம் எழுதினார்கள்:-
“எனதருமைச் சகோதரா! அல்லாஹ் உமக்கு வழங்கியிருக்கும் நல்லவற்றிலிருந்து நீர் செய்யும் மக்கள் பணியை உமது கிராம மக்கள் மறுப்பதும், சுன்னாவை நீர் வெளிப்படுத்தியதால் உமது நிலைமை சிறந்திருப்பதும், மார்க்கத்தில் இல்லாததை மார்க்கமாகப் புகுத்திச் செயல்படும் பித்அத்வாதிகளை நீர் பழிப்பதும், (சரியான விளக்கத்தை) அவர்களுக்கு அதிகமாக நீர் நினைவூட்டுவதும், (தவறுகளைத் திருத்தும் நோக்கில்) அவர்கள் மீது நீர் குறை காண்பதும் ஆகிய இக்காரணிகள்தான் இக்கடிதத்தையே உமக்கு நான் எழுத என்னைத் தூண்டியவைகளாகும்.
சகோதரா! உன் மூலம் அவர்களை அல்லாஹ் அடக்கிவிட்டான்; உன்னைக்கொண்டு அஹ்லுஸ்ஸுன்னாக்களின் முதுகை அவன் பலப்படுத்தி விட்டான்; அவர்களின் குறைகளை நீ வெளிப்படுத்தியதனால் அவர்களுக்கெதிராக உனக்கு அவன் பலத்தைத் தந்து விட்டான்; இதன்மூலம் அல்லாஹ் அவர்களை இழிவுபடுத்திவிட்டான்; இதனால் அவர்கள் தமது பித்அத்துகளை மறைத்துக்கொண்டு செய்பவர்களாக மாறிவிட்டார்கள்!
எனதருமைச் சகோதரா! அல்லாஹ்வின் நற்கூலியைக் கொண்டு நீ நன்மாராயம் பெற்றுக்கொள்! தொழுகை, நோன்பு, ஹஜ், ஜிஹாத் ஆகியவற்றுக்குக் கிடைக்கும் சிறந்த கூலிகளில் இதையும் நீ முக்கியத்துவப்படுத்தி கணக்கிட்டுக்கொள்!
அல்லாஹ்வின் வேதத்தை நிலைநாட்டி, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சுன்னாவை உயிர்ப்பிக்கும் இப்பணிகள் எங்கே போய் இருக்கப் போகின்றன தெரியுமா?!!”
{ நூல்: 'அல்இஃதிஸாம்', பக்கம்: 24 }
🍁➖➖➖➖➖➖➖➖🍁
قال الإمام أبو إسحاق إبراهيم بن موسى الشاطبي رحمه الله تعالى:
*[ أن أسد بن موسى كتب إلى أسد بن الفرات: إعلم يا أخي! أن ما حملني على الكتب إليك ما أنكر أهل بلادك من صالح ما أعطاك الله من إنصافك الناس، وحسن حالك ممّا أظهرت من السنة، وعيبك لأهل البدع، وكثرة ذكرك لهم وطعنك عليهم. فقمعهم الله بك، وشدّ بك ظهر أهل السنة، وقواك عليهم بإظهار عيبهم، وأذلّهم الله بذلك وصاروا ببدعتهم مستترين. فأبشر يا أخي بثواب الله، واعتد به من أفضل حسناتك من الصلاة والصيام والحج والجهاد. وأين تقع هذه الأعمال من إقامة كتاب الله وإحياء سنة رسول الله صلى الله عليه وسلم؟!!"*
{ الإعتصام للشاطبي، ص - ٢٤ }
🍁➖➖➖➖➖➖➖➖🍁
*✍தமிழில்✍*
அஷ்ஷெய்க்
N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா