நற்காரியங்களுக்கு ஒத்துழைப்பு நல்கும் மனைவி கிடைத்தவன் பாக்கியசாலியாவான்


           *“அறிஞர்களின் அரசன்” (சுல்தானுல் உலமா) எனும் சிறப்புப் பெயர் கொண்டு அழைக்கப்பட்ட இமாம் 'இஸ் இப்னு அப்திஸ்ஸலாம் (ரஹ்)' அவர்கள் டமஸ்கஸ் நகரில் இருந்த போது அங்கே பொருட்களுக்கான கடும் விலையுயர்வு ஏற்பட்டது. இதனால் பெறுமதியான தோட்டங்கள் குறைந்த விலைக்கு விற்கப்படும் அளவுக்கும் நிலைமை மாறியிருந்தது.*

          *அந்நேரம், இமாம் இஸ் இப்னு அப்திஸ்ஸலாம் (ரஹ்) அவர்களிடம் அவர்களின் மனைவி தங்கம் ஒன்றைக் கொடுத்து, “கோடை காலத்தில் தங்கியிருந்து இளைப்பாறிக்கொள்வதற்கு எமக்காக தோட்டம் ஒன்றை வாங்குங்கள்!” என்று கூறினார்கள். அவரோ அத்தங்கத்தை எடுத்து, அதை விற்று விட்டு, அதன் பெறுமதிப் பணத்தை தர்மம் செய்து விட்டார்.*

         *அப்போது அவரிடம் அவரின் மனைவி, “கணவரே! எமக்காக வாங்கி விட்டீர்களா?” என்று கேட்டார். “ஆம்! சுவர்க்கத்தில் தோட்டம் ஒன்றை வாங்கி விட்டேன்” என்று சொல்லிய அவர், “மக்கள் கஷ்டத்தில் இருப்பதைக் கண்ட நான் அதன் பெறுமதிப் பணத்தை அவர்களுக்கு தர்மம் செய்து விட்டேன்!” என்றும் கூறினார். அப்போது அவரின் மனைவி, “ஜஸாகல்லாஹு ஹைரா!” என்று சொன்னார்கள்.*

{ நூல்: 'அத்தபbகாதுஷ் ஷாபிfஇய்யா', பக்கம்: 214 }

☘➖➖➖➖➖➖➖➖☘

                لما كان العزّ بن عبد السلام رحمه الله تعالى - الملقب بسلطان العلماء - في دمشق وقع فيها غلاء فاحش، حتى صارت البساتين تباع بالثمن القليل ....

فأعطته زوجته ذهبا وقالت: "أشر لنا بستانا نصيّف فيه!"

فأخذ الذهب وباعه وتصدّق بثمنه!!

فقالت: "يا سيدي إشتريت لنا؟"

قال: " نعم؛ بستانا فى الجنة! إني وجدت الناس في شدة فتصدقت بثمنه !!".

فقالت المرأة: " جزاك الله خيرا ".

 { الطبقات الشافعية ، ص - ٢١٤ }

☘➖➖➖➖➖➖➖➖☘


               *✍தமிழில்✍*

                 அஷ்ஷெய்க்

N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா

Previous Post Next Post