உலக இன்பம் அற்பமானது; அழியக்கூடியது. மறுமை இன்பம் நிரப்பமானது; நிலையானது


🔅அல்லாஹ் கூறுகிறான்: *“உங்களுக்கு வழங்கப்பட்ட எதுவானாலும், அது இவ்வுலக வாழ்வின் இன்பமும் அதன் அலங்காரமுமேயாகும். அல்லாஹ்விடம் இருப்பதோ மிகச்சிறந்ததும், நிலையானதுமாகும். நீங்கள் விளங்கிக்கொள்ளமாட்டீர்களா?”* (அல்குர்ஆன், 28:60)

         அல்குர்ஆன் விரிவுரையாளர் அல்லாமா அப்துர்ரஹ்மான் பின் நாஸிர் அஸ்ஸஃதீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:

          “உலகத்தில் பற்றின்மை, உலகத்தைக்கொண்டு ஏமாற்றப்படாதிருத்தல், மறுமை விடயத்தில் ஆர்வம் காட்டல் ஆகியவற்றை இவ்வசனத்தில் அல்லாஹ் தனது அடியார்களுக்குத் தூண்டுகிறான். இதுவே மனிதனின் நோக்கமாகவும், அவனிடம் வேண்டப்பட்டதாகவும் இருக்கிறது என்றும் அவன் ஆக்கிவைத்துள்ளான்.

         மனிதப் படைப்புக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்ற தங்கம், வெள்ளி, மிருகங்கள், உலகப் பொருட்கள், பெண்கள், பிள்ளைகள், உணவுகள், குடிபானங்கள், இன்பங்கள் என அனைத்துமே இவ்வுலக வாழ்வின் அற்ப சுகமும், அதன் அலங்காரமுமேயாகும் என்றும் தன் அடியார்களுக்கு அவன் தெரிவிக்கின்றான். அதாவது: 'குறுகிய இன்பத்தை குறுகிய காலம் இவ்வுலகில் மனிதன் அனுபவிக்கின்றான். பெருமைக்காகவும், முகஸ்துதிக்காகவும் சொற்ப காலம் இவற்றையெல்லாம் அலங்காரமாகவும் அவன் எடுத்துக்கொள்வான். பின்னர் அவை விரைவாக நீங்கி, அனைத்துமே முடிந்துபோய் விடும். அப்போது அவன் வருத்தத்தையும், கைசேதத்தையும், நஷ்டத்தையும், இறையருள் தடையையுமே பிரதிபலனாகப் பெற்றுக்கொள்வான்.

          'நிலையான இன்பமும், சீரான வாழ்வும் கிடைக்கிறது' என்பதுதான் *“அல்லாஹ்விடம் இருப்பதோ மிகச்சிறந்ததும், நிலையானதுமாகும்”* என்ற இவ்வாக்கியத்தின் பொருளாகும்.

*மிகச் சிறந்தது; நிலையானது!* என்றால், “அதன் தன்மையில், அதன் அளவில் அதிக சிறப்புக்குரியது; அது எப்போதும் தொடர்ந்திருக்கும்; முடிவுறாமல் நிலைத்திருக்கும்.

*🔅“நீங்கள் விளங்கிக்கொள்ளமாட்டீர்களா?”:* 

“(அழியும் உலக இன்பம், நிலையான மறுமை இன்பம் ஆகிய) இரு விடயங்களில் முதன்மைப்படுத்தி எடுக்க எது ஏற்றமானது? ஈருலகில், எதற்காக வேலை செய்வது மிகத் தகுதியானது? என்றெல்லாம் நிறுத்துப் பார்க்கும் அளவுக்கு உங்களுக்கு புத்திகள் இருக்கக்கூடாதா?” என்பதுதான் இதன் பொருளாகும். மனிதனுடைய புத்தியின்அளவுக்கேற்பவே இவ்வுலகைவிட மறுமையை அவன் முதன்மைப்படுத்துவது இருந்துகொண்டிருக்கும் என்றும், மந்த புத்தியுடையவனைத் தவிர வேறு யாருமே உலகத்தை முதன்மைப்படுத்தமாட்டான்” என்றும் இவ்வசனம் தெரிவிக்கிறது..”.

(நூல்: 'தய்சீருல் கரீமிர் ரஹ்மான் fபீ தfப்சீரி கலாமில் மன்னான்', பக்கம்: 571)


🔅قال الله تعالى: *{ وما أوتيتم من شيئ فمتاع الحياة الدنيا وزينتها وما عند الله خير وأبقى أفلا تعقلون }* « سورة القصص، الآية - ٦٠»

          قال العلاّمة المفسّر عبدالرحمن بن ناصر السعدي رحمه الله تعالى:-

          « هذا حضّ منه تعالى لعباده على الزهد في الدنيا، وعدم الإغترار بها، وعلى الرّغبة في الأخرى، وجعلها مقصود العبد ومطلوبه.

          ويخبرهم أن جميع ما أوتيه الخلق من الذهب، والفضة، والحيوانات، والأمتعة، والنساء، والبنين، والمآكل، والمشارب، والّلذّات، كلّها متاع الحياة الدنيا وزينتها. أي: يتمتّع به وقتا قصيرا، متاعا قاصرا. ويتزيّن به زمانا يسيرا للفخر والرّياء، ثم يزول ذلك سريعا، وينقضي جميعا، ولم يستفد صاحبه منه إلّا الحسرة والندم، والخيبة والحرمان.

*« وما عند الله خير وأبقى »:* من النعيم المقيم، والعيش السليم. *« خير وأبقى »*: أي: أفضل في وصفه وكمّيّته، وهو دائم أبدا، ومستمرّ سرمدا.

*« أفلا تعقلون »*: أي: افلا تكون لكم عقول، بها تزنون أيّ الأمرين أولى بالإيثار، وأيّ الدّارين أحق للعمل لها. فدلّ ذلك أنه بحسب عقل العبد، يؤثر الأخرى على الدّنيا؛ وأنه ما آثر أحد الدّنيا إلا لنقص في عقله ».

{ المصدر: ' تيسير الكريم الرحمن في تفسير كلام المنّان' للسّعدي ، ص - ٥٧١ }

📚➖➖➖➖➖➖➖➖📚

               *✍தமிழில்✍*

                 அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


Previous Post Next Post