மனோ இச்சையைக் கடவுளாக எடுத்துக் கொள்ளாதீர்கள்


            இஸ்லாமிய மார்க்க அறிஞர் அஷ்ஷெய்க் ஸாலிஹ் அல்பfவ்ஸான் (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- 

             “மனோ இச்சையும் இன்னொரு கடவுள்தான்! இணைவைத்தல் என்பது கற்கள், மரங்கள், ஏனைய பொருட்கள் போன்றவற்றினால் செய்யப்பட்ட சிலைகளை வணங்குவதோடு மாத்திரம் சுருக்கப்பட்டது அல்ல! மாற்றமாக, இங்கே வேறொரு கடவுளும் இருக்கிறது; அதுதான் *மனோ இச்சை*யாகும்.

            சிலைகளையோ, மரங்களையோ, கற்களையோ சில வேளைகளில் மனிதன் வணங்காமல் இருப்பான்; மண்ணறைகளையும் அவன் வணங்காமல் இருப்பான். என்றாலும் தனது மனோ இச்சையை அவன் பின்பற்றுவான்! இவன்தான் தனது மனோ இச்சை எனும் கடவுளின் அடிமையாவான்.

           எனவே, இது விடயத்தில் ஒரு மனிதன் எச்சரிக்கையாக இருந்து கொள்ள வேண்டும்; அல்குர்ஆனுக்கும், சுன்னாவுக்கும் உடன்பாடாக வரக்கூடியதைத் தவிர வேறு எதையும் அவன் பின்பற்றக் கூடாது!”

{ நூல்: 'ஷர்ஹுஸ்ஸுன்னா லில் பbர்பbஹாரீ ', 1/71}


            قال الشيخ صالح الفوزان حفظه الله تعالى: [ فالهوى إله آخر ... وليس الشرك مقصورا على عبادة الصنم أو الوثن، بل هناك شيئ آخر ؛ وهو الهوى.

       فقد لا يعبد الإنسان الأصنام والأشجار والأحجار ، ولا يعبد القبور . لكن يتبع هواه، فهذا عبد لهواه! فعلى الإنسان أن يحذر، ولا يتبع إلا ما وافق الكتاب والسنة ]

{ شرح السنة للبربهاري، ١/٧١ }

➖➖➖👇👇👇👇➖➖➖

👉🏿🌟 அல்லாஹ் கூறுகின்றான்: “(நபியே) *தன் மனோ இச்சையைத் தனது கடவுளாக எடுத்துக் கொண்டவனை நீர் பார்த்தீரா?* நன்கறிந்தே அல்லாஹ் அவனை வழிகேட்டில் விட்டு விட்டான். அவனது செவிப்புலனிலும் உள்ளத்திலும் முத்திரையிட்டு, அவனது பார்வையில் திரையையும் ஏற்படுத்தி விட்டான். அல்லாஹ்வுக்குப் பின்னர் அவனை நேர்வழியில் செலுத்துபவன் யார் இருக்கின்றான்? நீங்கள் நல்லுபதேசம் பெற மாட்டீர்களா? ”

{ அல்குர்ஆன்  45:23 }

👉🏿🌟 மேலும் அல்லாஹ் கூறுகின்றான்: “யார் தனது இரட்சகன் முன் நிற்பதைப் பயந்து, மனோ இச்சையை விட்டும் தன்னைத் தடுத்தும் காெண்டாரோ நிச்சயமாக சுவர்க்கம்தான் (அவரது) ஒதுங்குமிடமாகும்”.

{ அல்குர்ஆன் 80:40,41}

☘➖➖➖➖➖➖➖➖☘ 

                 ✍தமிழில்✍

                 அஷ்ஷெய்க் 

N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா

أحدث أقدم