இமாம் ஷாபிfஈ (ரஹ்) அவர்களின் புத்தகங்களை தன் வசம் வைத்திருந்த நிலையில் மரணித்துவிட்ட ஒருவரின் மனைவியை, ஹதீஸ் கலை அறிஞர், இமாம் இஸ்ஹாக் இப்னு ராஹவைஹி (ரஹ்) அவர்கள் மறுமணம் செய்து கொண்டார்கள். அப்பெண்ணிடம் இருந்த அப்புத்தகங்களுக்காகவே அவளை அவர்கள் மணந்துகொண்டார்கள்!
{ நூல் : 'சியரு அஃலாமின் நுபbலா' , 10/70 }
تزوج الإمام إسحاق بن راهويه رحمه الله تعالى بامرأة رجل مات وكان عنده كتب الشافعي، لم يتزوج بها إلا للكتب!
{ سير أعلام النبلاء، ١٠/٧٠ }
➖➖➖👇👇👇👇➖➖➖
🏉👉🏿 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:-
“நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்:
*1}*அவளுடைய செல்வத்திற்காக.
*2*அவளுடைய குடும்பப் பாரம்பரியத்திற்காக.
*3*அவளுடைய அழகிற்காக.
*4*அவளுடைய மார்க்க (நல்லொழுக்க)த்திற்காக. எனவே, மார்க்க(நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) நீ வெற்றியடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கைகளும் மண்ணாகட்டும்!!!
{ நூல்: புகாரி, ஹதீஸ் இலக்கம்: 5090 }
🍁➖➖➖➖➖➖➖➖🍁
✍தமிழில்✍
அஷ்ஷெய்க்
N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா