குழப்பங்கள் நிறைந்த காலத்தில், உள உறுதியுடன் மார்க்கத்தில் ஸ்திரமாக இருப்பது எப்படி?


            சஃத் பின் அப்துல்லா அல்கஊத் (ஹபிfழஹுல்லாஹ்) அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் இவ்வாறு கூறுகிறார்கள்:-

           *“(உள உறுதியுடன் மார்க்கத்தில்) ஸ்திரமாக இருத்தல் என்பது, உபதேசங்களை அதிகம் செவிமடுத்தலைக்கொண்டு இருக்கக்கூடியது அல்ல! (மாறாக), நடைமுறை வாழ்க்கையில்  அவ்வுபதேசங்களைச் செயல்படுத்தி, அவற்றை நடைமுறைப்படுத்துவதன் மூலம்தான் ஸ்திரமாக இருக்க முடியும்!”*.அல்லாஹ் கூறுகிறான்: *“அவர்கள் தமக்கு உபதேசிக்கப்படுபவற்றைச் செயல்படுத்தியிருந்தால் அது அவர்களுக்கு மிகச் சிறந்ததாகவும், (அவர்களை) நன்கு உறுதிப்படுத்துவதாகவும் இருந்திருக்கும்!”* (அல்குர்ஆன், 04:66)

             எமக்கும், உங்களுக்கும் மரணம் வரைக்கும் அந்த ஸ்திரத்தன்மை கிடைக்க அல்லாஹுதஆலாவிடம் கேட்போமாக....!!

*🔅குழப்பங்கள் நிறைந்த காலத்தில் (மார்க்கத்தில்) ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் விடயங்கள் வருமாறு:*

*01) அல்குர்ஆன்:*

           அல்லாஹ் கூறுகிறான்: “உமது உள்ளத்தை (அல்குர்ஆனாகிய) இதன்மூலம் உறுதிப்படுத்துவதற்காக இவ்வாறுதான் இதை நாம் சிறிது சிறிதாக ஓதிக் காண்பித்தோம்” (அல்குர்ஆன், 25:32)

*02) நபிமார்களின் சம்பவங்களையும், வரலாற்றையும் படித்தல்:*

       அல்லாஹ் கூறுகிறான்: “உமது உள்ளத்தை உறுதிப்படுத்துவதாகவே தூதர்களின் செய்திகளிலிருந்து இவையனைத்தையும் உமக்கு நாம் கூறுகிறோம்”.(அல்குர்ஆன், 11:120)

*03) கற்றதைக்கொண்டு செயல்படுதல்:*

          அல்லாஹ் கூறுகிறான்: “அவர்கள் தமக்கு உபதேசிக்கப்படுபவற்றைச் செயல்படுத்தியிருந்தால் அது அவர்களுக்கு மிகச் சிறந்ததாகவும், (அவர்களை) நன்கு உறுதிப்படுத்துவதாகவும் இருந்திருக்கும்!”.(அல்குர்ஆன், 04:66)

*04) பிரார்த்தனை செய்தல்:*

          “ 'உள்ளங்களைப் புரட்டுபவனே! எனது உள்ளத்தை உனது மார்க்கத்தின் மீது ஸ்திர்படுத்துவாயாக!' என்று நபி (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் அதிகமாகப் பிரார்த்திப்பவர்களாக இருந்தார்கள்”. (நூல்: திர்மிதி - 2140)

*05) நல்ல நட்பு:*

         அல்லாஹ் கூறுகிறான்: “தங்களது இரட்சகனின் (சங்கையான) முகத்தை நாடி காலையிலும் மாலையிலும் அவனை அழைப்பவர்களுடன் (நபியே) நீர் உம்மைக் கட்டுப்படுத்திக்கொள்வீராக! இவ்வுலக வாழ்வின் அலங்காரத்தை நீர் விரும்பி, அவர்களை விட்டும் உம்மிரு கண்களையும் நீர் திருப்பி விடாதீர்!”.(அல்குர்ஆன், 18:28)

       *யா அல்லாஹ்! நேர்வழியில் எம்மைச் செலுத்தி, சத்தியத்தில்  ஸ்திரப்படுத்தி வைப்பாயாக!!!*

🔰➖➖➖➖➖➖➖➖🔰

             قال الشيخ سعد بن عبدالله القعود حفظه الله:-

         [ 'الثبات' لا يكون بكثرة الإستماع للمواعظ! إنما يكون بفعل هذه المواعظ وتطبيقها في واقع الحياة!! قال تعالى: *« ولو أنهم فعلوا ما يوعظون به لكان خيرا لهم وأشد تثبيتا »* (سورة النساء، الآية - ٦٦)

       نسأل الله تعالى لنا ولكم الثبات حتى الممات......

*🔅خمس مثبتات في عصر الفتن:*

*١/ القرآن الكريم:* 

     قال تعالى: « كذلك لنثبّت به فؤادك ورتّلناه ترتيلا» (سورة الفرقان، الآية - ٣٢)

*٢/ قراءة السيرة وقصص الأنبياء:*

      قال تعالى: « كلّا نقصّ عليك من أنباء الرّسل ما نثبّت به فؤادك » (سورة هود، الآية - ١٢٠)

*٣/ العمل بالعلم:*

     قال تعالى: « ولو أنهم فعلوا ما يوعظون به لكان خيرا لهم وأشد تثبيتا » (سورة النساء، الآية - ٦٦)

*٤/ الدعاء:*

        حديث « كان رسول الله صلّى الله عليه وسلم يكثر أن يقول: يا مقلّب القلوب ثبّت قلبي على دينك » (ترمذي - ٢١٤٠)

*٥/ الرفقة الصالحة:*

      قال تعالى: « واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا » (سورة الكهف، الآية - ٢٨)

       *اللهم اهدنا وثبّتنا على الحق!!!*


🔰➖➖➖➖➖➖➖➖🔰

               *✍தமிழில்✍*

                    அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா

                 💐🎉💐🎉🍂🍂💐🎉💐🎉

أحدث أقدم