எதற்கெல்லாமோ அழுகின்ற நாம்,குர்ஆன் ஓதக் கிடைக்கவில்லை என்பதற்காக அழுதிருக்கிறோமா


        இமாம் அபூதாவூத் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

         “கர்ஸ் அல்ஹாரிதீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்களிடம் நான் சென்றேன். அப்போது, அழுதுகொண்டிருப்பவராக அவரை எனக்குக் காணக் கிடைத்தது. உடனே நான், *'உம்மை அழ வைத்த காரணி எது?'* என்று கேட்டேன். அதற்கவர்கள், *(ஓதிக்கொள்வதற்கு வசதியாக, அல்குர்ஆனை பகுதி பகுதிகளாக பிரித்து வைத்துள்ள எனக்கு) எனது அப்பகுதியை அல்குர்ஆனிலிருந்து நேற்றிரவு  ஓதிக்கொள்ளக் கிடைக்கவில்லை. நான் செய்த பாவம் ஒன்றுக்காகத்தான் அதை எனக்கு ஓதிக்கொள்ள முடியாமல் போய்விட்டது என்று உறுதியாகவே நான் நினைக்கிறேன்!'* என்றார்கள்”.

{ நூல்: 'ஹில்யதுல் அவ்லியா', 05/79 }


            قال أبو داود رحمه الله تعالى: [ دخلت على كرز الحارثي فوجدته يبكي، فقلت: *« ما يبكيك؟ »* قال: *« لم أقرأ البارحة حزبي من القرآن؛ وما أظنه إلا بذنب فعلته! »* ]

{ حلية الأولياء ، ٥/٧٩ }

➖➖👇👇👇👇👇👇➖➖

🎯👉🏿 அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரழியழ்ழாஹு அன்ஹு) அவர்கள் கூறுகின்றார்கள்:

         “என்னிடம் இறைத்தூதர் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள், *'ஒவ்வொரு மாதமும் (ஒருமுறை குர்ஆனை) ஓதி நிறைவு செய்!'* என்று கூறினார்கள். அப்போது நான், *'(அதை விடவும் குறைந்த நாட்களில் குர்ஆனை முழுமையாக ஓதி முடிக்கும்) சக்தி எனக்கு உள்ளது!'* என்று கூறினேன். *'அப்படியானால், ஏழு நாட்களில் (ஒருமுறை) ஓதி நிறைவு செய்; அதைவிட (ஓதுவதை) அதிகமாக்கி விடாதே!'* என்று கூறினார்கள்.

{ நூல்: புகாரி - 5054 }

❇➖➖➖➖➖➖➖➖❇

               *✍தமிழில்✍*

                     அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா

                   

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

أحدث أقدم