தவறுகளைத் திருத்திக்கொள்ளத் தரப்பட்ட சந்தர்ப்பங்களைத் தவறவிடாதீர்கள்


🎯 அல்லாஹ் கூறுகிறான்: *“நம்பிக்கை கொண்டோருக்கு, அவர்களது உள்ளங்கள் அல்லாஹ்வை நினைவு கூர்வதற்கும், (அவனிடமிருந்து) இறங்கிய சத்தியத்திற்கும் அஞ்சி நடுங்கக்கூடிய நேரம் வரவில்லையா?.... 🔅பூமி இறந்த பின் அதை நிச்சயமாக அல்லாஹ்தான் உயிர்ப்பிக்கின்றான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்!”* (அல்குர்ஆன், 57:16,17)

            அஷ்ஷெய்க் முஹம்மத் பின் ஹுசைன் யஃகூப் (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:

       “உள்ளங்கள் மரணித்திருந்ததற்குப் பின்னால் அவற்றை அல்லாஹ் உயிர்ப்பிக்கின்றான். பூமியை உயிர்ப்பிப்பவனே உள்ளங்களையும் உயிர்ப்பிக்கின்றான்” என்பதை இவ்வசனம் உணர்த்துவதாக அல்குர்ஆன் விரிவுரையாளர்கள் கூறுகின்றனர்.

        எனவே, மனிதா! உனது ஈமானைப் புதுப்பிக்கும் தேவையில் நீ இருந்துகொண்டிருக்கிறாய். அதை நீ சரிப்படுத்திக்கொள்ளல்  வேண்டும்; உன் கொள்கையை நீ கட்டியெழுப்பவும் வேண்டும்; உன் வாழ்க்கைத் திட்ட அமைப்பை மற்றொரு தடவை, மூன்று, பத்து, நூறு, ஆயிரம் தடவைகள் என மரணிக்கின்ற வரைக்கும் நீ அமைத்துக்கொண்டிருக்க வேண்டும்.

         உனது ஆரம்பம் மோசமாகி இருந்ததால் விடயமே முடிந்து போய்விட்டது என்று நாம் கூறமாட்டோம். அப்படி இருக்கவும் முடியாது. சிமிட்டும் கண்களும், துடிக்கும் இதயமும், உன் உடல் உறுப்புகளிலுள்ள ஓர் உறுப்பு அசைந்துகொண்டிருக்கும் காலமெல்லாம் உனது  ஈமானைச் சீர்திருத்தி, உன் கொள்கையையும் சரிப்படுத்திக்கொள்வதற்கான சந்தர்ப்பம் ஒன்று உனக்கு முன்னால் இருந்துகொண்டே இருககிறது. மேற்கிலிருந்து சூரியன் உதிக்கின்ற வரைக்கும், உயிர் தொண்டைக்குழியை அடைகின்ற வரைக்கும் இந்த சந்தர்ப்பம் உனக்கு இருந்துகொண்டுதான் இருக்கிறது. மனிதன் தன் தவறை உணர்ந்து சரியானதன் பக்கம் மீண்டு வருவது குறை கிடையாது. குறை எதுவென்றால், தவறை அறிந்து அதிலே தொடர்ச்சியாக இருப்பதுதான்! 

       எங்கள் இரட்சகனே!  எமது குறைகளை எமக்குத் தெளிவாகக் காட்டித் தருவாயாக!!”.

( நூல்: 'மின் அஸ்பாபில் fபதூர்', பக்கம்:54,55 )


🎯 قال الله تعالى: *{ ألم يأن للّذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق ..... 🔅إعلموا أن الله يحيي الأرض بعد موتها.... }* « سورة الحديد، الآية : ١٦،١٧ »

       قال الشيخ محمد بن حسين يعقوب حفظه الله:- « يقول أهل التفسير: إن هذه إشارة إلى أنه سبحانه يحيي القلوب بعد موتها، فالّذي يحيي الأرض يحيي القلوب.

        فأنت تحتاج إلى تجديد إيمانك، أن تصححه، أن تبني عقيدتك، أن تؤسس منهجك مرة أخرى، وثالثة، وعاشرة، ومائة، وألف، إلى أن تموت.

       لا نقول إن كانت قد فسدت بدايتك فقد انتهت القضية، لا؛ طالما فيك عين تطرف، قلب ينبض، وعضوّ من أعضاء جسمك يتحرك، فما زال أمامك فرصة، ما لم تطلع الشمس من مغربها، ومآ لم تغرر. ما زالت أمامك فرصة لكي تصحح إيمانك، أن تصحح عقيدتك. وليس عيبا أن يرجع الإنسان عن خطئه، إنما العيب أن يعرف الخطأ ويصرّ عليه! اللهم بصّرنا بعيوبنا!! ».

( المصدر: 'من أسباب الفتور وعلاجه'، ٥٤،٥٥ )

🍑➖➖➖➖➖➖➖➖🍑

               *✍தமிழில்✍*

                  அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


أحدث أقدم