தான தர்மத்தின் பெறுமதி மரணத்தின் பின்னர் நன்றாகவே உணரப்படுகிறது!


🎯 அல்லாஹ் கூறுகிறான்: *“உங்களில் ஒருவருக்கு மரணம் வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்லறங்களில்) செலவு செய்யுங்கள்.  (மரண வேளையில் அவன்) 'என் இரட்சகனே! சிறிது காலம் என்னை நீ பிற்படுத்த வேண்டாமா? நான் தர்மம் செய்து நல்லவர்களில் ஆகிவிடுவேன்!' என்று கூறுவான்🔅எந்தவோர் ஆன்மாவுக்கும் அதன் தவணை வந்துவிட்டால் அல்லாஹ் பிற்படுத்தவேமாட்டான்”* (அல்குர்ஆன், 63: 10)

            மரணித்தவர் இவ்வுலகத்திற்கு திரும்பிவர எண்ணுகிறபோது தானதர்மம் செய்வதை ஏன் தேர்வு செய்கிறார்? நான் உம்ரா செய்வதற்காக..., நான் தொழுவதற்காக..., நான் நோன்பு நோற்பதற்காக இவ்வுலகிற்கு மீண்டுமொரு முறை என்னை நீ அனுப்பி வை! என்று ஏன் அவர் அல்லாஹ்விடம் கேட்கவில்லை?

         *“தானதர்மத்தின் தாக்கத்தை மரணத்தின் பின்னர் கண்டுவிட்டு, அதன் மகத்துவத்தை உணர்ந்துகொண்டதினாலேயே மரணித்தவர் இதைக் கூறுகிறார்!”* என்பதாக அறிஞர்கள் இதற்கு விளக்கம்  கூறுகின்றனர்.

        எனவே, தானதர்மம் செய்வதை நீங்கள் அதிகப்படுத்துங்கள்!

{ முகநூலில், سدرة المنتهى எனும் பக்கத்தில் }

☘➖➖➖➖➖➖➖➖☘

🎯 قال الله تبارك : *« وأنفقوا من مّا رزقناكم من قبل أن يّأتي أحدكم الموت فيقول ربّ لو لا أخّرتني إلى أجل قريب فأصّدّق وأكن من الصّالحين🔅ولن يّؤخّر الله نفسا إذا جاء أجلها »* (سورة المنافقون، الآية - ١٠)

       « لماذ يختار الميّت "الصدقة" لو رجع للدّنيا، ولم يقل: "لأعتمر...، أو لأصلّي...، أو لأصوم؟

           قال أهل العلم: ما ذكر الميّت الصّدقة إلاّ لعظيم ما رأى من أثرها بعد موته، فأكثروا من الصّدقة! »

[ فيس بوك: "سدرة المنتهى" ]

☘➖➖➖➖➖➖➖➖☘

               *✍தமிழில்✍*

                   அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா

              

أحدث أقدم