அல்லாஹ்வுக்காக வாழ்வோருக்கு அவன் கூறும் ஆறுதல்


🎯 அல்லாஹ் கூறுகிறான்: *“நிச்சயமாக நாம் நமது தூதர்களுக்கும் நம்பிக்கை கொண்டோருக்கும் இவ்வுலக வாழ்விலும், சாட்சிகள் எழுந்து நிற்கும் நாளிலும் உதவி செய்வோம்.🔅(அது) அநியாயக்காரர்களுக்கு அவர்களின் சாட்டுப்போக்கு பயனளிக்காத நாளாகும். மேலும், அவர்களுக்குச் சாபம் உண்டு; அவர்களுக்கு மோசமான வீடும் உண்டு”*. (அல்குர்ஆன், 40: 51,52)

           அல்லாமா அஷ்ஷெய்க் ஸைத் அல்மத்ஹலீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

           “அல்லாஹு அக்பர்! அல்லாஹ்வின் வேத நூலான அல்குர்ஆனையும், அவனின் தூதருடைய சுன்னாவையும் மூலாதாரங்களாகக் கொண்டு, தூய்மையான சலபித்துவ வழிமுறையில் அறிவுடனும் தெளிவான சான்றுடனும் சத்தியத்திற்கு உதவி செய்வதில் பயணிக்கின்றபோது (இறைவிசுவாசியொருவர் தொல்லைக்கும், துன்புறுத்தலுக்கும் உள்ளாக நேரிடும்.) இவ்வாறு, அல்லாஹ்வின் விடயத்தில் துன்புறுத்தப்படுகின்ற ஒவ்வொருவருக்கும்  இவ்வசனத்தில் ஆறுதல் இருக்கவே செய்கிறது!”.

{ நூல்: 'கிதாபுல் இர்ஹாப் வ ஆதாருஹுஸ் ஸய்யிஆ', பக்கம்: 42 }


🎯 قال الله تعالى: *{ إنّا لننصر رسلنا والّذين آمنوا في الحياة الدنيا ويوم يقوم الأشهاد🔅يوم لا ينفع الظّالمين معذرتهم ولهم اللّعنة ولهم سوء الدّار }* ( سورة غافر، الآية: ٥١،٥٢ )

         قال العلاّمة الشيخ زيد المدخلي رحمه الله تعالى:-

         « والله أكبر، إن في هذه الآية لتسلية في كلّ من أوذي في الله، وهو ساع في نصرة الحق على علم وبصيرة ومنهج سلفي أصيل، مصدره كتاب الله العزيز وسنّة رسوله صلّى الله عليه وسلم ».

{ المصدر: كتاب الإرهاب وآثاره السّيّئة، ص - ٤٢ }

💢➖➖➖➖➖➖➖➖💢

               *✍தமிழில்✍*

                 அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


Previous Post Next Post