ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-
“இஸ்லாத்தின் அழைப்பையும், அல்குர்ஆனின் போதனைகளையும் விட்டுத் தாண்டி வம்சம், அல்லது ஊர், அல்லது இனம், அல்லது மத்ஹப், அல்லது (தாமாக உருவாக்கிக்கொண்ட பிழையான) வழிமுறை ஆகியவற்றைக்கொண்டு பிடிவாதம் காட்டப்படும் ஒவ்வொன்றும் அறியாமைக்கால கூப்பாடேயாகும். ஏனெனில், ஒருமுறை மக்காவிலிருந்து மதீனாவில் வந்து அகதிகளாகக் குடியேறிய முஹாஜிரீன்களிலிருந்தும், மதீனாவாசிகளான அன்ஸாரிகளிலிருந்தும் இருவர் தமக்குள் தர்க்கப்பட்டுக்கொண்டனர். அப்போது, *“முஹாஜிரீன்களே! எனக்கு உதவுங்கள்!”* என மக்காவாசியும், *“அன்ஸாரிகளே! எனக்கு உதவுங்கள்”* என மதீனாவாசியும் அழைத்துக்கொண்டனர். அவ்வாறு, நபி (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் கடுமையாகக் கோபப்பட்டு, *“இதென்ன! ஜாஹிலிய்யாக்கால மக்களின் கூப்பாடு?”* ௭ன்று கூறி இரு குழுவினரையும் கண்டித்தார்கள்.
( நூல்: 'அஸ்ஸியாசா அஷ்ஷரஇய்யா', பக்கம்: 84 )
قال شيخ الإسلام إبن تيمية رحمه الله تعالى:-
« وكل ما خرج عن دعوة الإسلام والقرآن: من نسب أو بلد أو جنس أو مذهب أو طريقة فهو من عزاء الجاهلية. بل لمّا اختصم رجلان من المهاجرين والأنصار، فقال المهاجري: *"يا المهاجرين!"*، وقال الأنصاري: *"يا للأنصار!"*. قال النّبي صلّى الله عليه وسلم: *" مابال دعوى الجاهلية! "*، وغضب لذلك غضبا شديدا »
[ المصدر: 'السياسة الشرعية' لابن تيمية، ص - ٨٤ ]
➖➖👇👇👇👇👇👇➖➖
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரழியழ்ழாஹு அன்ஹு) அறிவிக்கிறார்கள்: “நாங்கள் 'ஒரு போரில்' அல்லது 'ஒரு படையில்' இருந்து கொண்டிருந்தோம். அப்போது, முஹாஜிர்களில் ஒருவர் அன்சாரிகளில் ஒருவரைப் பிட்டத்தில் அடித்துவிட்டார். அவ்வேளை (அடி வாங்கிய) அன்சாரித் தோழர், *'அன்சாரிகளே! (உதவுங்கள்!*)' என்று கூறினார். அந்த முஹாஜிர், *'முஹாஜிர்களே! உதவுங்கள்!'* என்று கூறினார்.
இந்தப் பேச்சை இறைத்தூதர் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் செவியேற்று, *'இது என்ன அறியாமைக் காலக் கூப்பாடு?' என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், இறைத்தூதர் அவர்களே! முஹாஜிர்களில் ஒருவர் அன்சாரிகளில் ஒருவரைப் பிட்டத்தில் அடித்துவிட்டார்' என்று கூறினர். அப்போது நபி(ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள், 'இத்தகைய கூப்பாடுகளைக் கைவிடுங்கள். (குலமோதல்களைத் தூண்டுகின்ற) இவை நாற்றம் பிடித்தவை!'* என்று கூறினார்கள்.
அப்போது (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் இப்னு உபை இதைக் கேட்டுவிட்டு 'இப்படியா அவர்கள் செய்துவிட்டார்கள்? அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் மதீனாவிற்குத் திரும்பிச் சென்றால், ( 'அன்ஸாரிகள்' எனும் எங்கள் இனத்தவர்களான) கண்ணியவான்கள், இழிந்தோ(ராகிய முஹாஜி)ர்களை அங்கிருந்து வெளியேற்றிவிடுவர்!' என்று (அன்சாரிகளுக்குப் பரிந்துகொண்டு) கூறினான். நபி (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்களுக்கு இந்தக் தகவல் எட்டியது. மேலும், (தகவலறிந்த) உமர்(ரழியழ்ழாஹு அன்ஹு) எழுந்து, *'என்னை விடுங்கள் இறைத்தூதர் அவர்களே! இந்த நயவஞ்சகனின் கழுத்தை வெட்டிவிடுகிறேன்'* என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள், *"அவரை விட்டு விடுங்கள்; முஹம்மது தம் தோழர்களையே கொலை செய்கிறார் என்று மக்கள் பேசிவிடக் கூடாது!”* என்று கூறினார்கள்.
( நூல்: புகாரி - 4905)
🌀➖➖➖➖➖➖➖➖🌀
*✍தமிழில்✍*
அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா