நோயாளியை நேரடியாகச் சென்று நலம் விசாரிப்பதே அதி சிறப்புக்குரியது!


          அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

          *“தொலைபேசி வழியாக நோயாளியை நலம் விசாரிக்கின்ற விடயத்தில் நோயாளியின் உள்ளத்தில் திருப்தியை ஏற்படுத்துவதும், அவருக்கு மகிழ்ச்சியை உண்டாக்குவதும் இருக்கத்தான் செய்கிறது! என்றாலும்,  நோயாளியை ஒருவர் நேரடியாகச் சென்று நலம் விசாரித்தல் போன்று அது இருக்கமாட்டாது.  நோயாளியை நேரடியாகச் சென்று  நலம் விசாரிக்கின்றபோது ஏற்படுகின்ற மகிழ்ச்சிக்காக நலம் விசாரித்தவரை அந்நோயாளி மறந்து விடவேமாட்டார். இதனால்தான், நோயில் தான் இருந்தபோது தன்னை வந்து நலம் விசாரித்த அம்மனிதரை அந்த நோயாளி நினைவுபடுத்திக்கொண்டிருப்பதை உன்னால் கண்டுகொள்ள முடிகின்றது!”*

{ நூல்: 'அத்தஃலீகு அலா ஸஹீஹ் முஸ்லிம்', 02/408 }



           يقول العلّامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:-

            *[ عيادة المريض عن طريق الهاتف فيها تطييب لقلب المريض وإدخال السرور عليه! لكنها ليست كما لو ذهب الإنسان بنفسه لعيادته. ولعيادة المريض طعما لاينساه المريض، فتجده يتذكر عيادة هذا الرجل له في مرضه ]*

{ التعليق على صحيح مسلم ، ٢/٤٠٨ }

➖➖👇👇👇👇👇👇➖➖

❇👉🏿 நபி (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் கூறியதாக ஸவ்fபான் (ரழியழ்ழாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

          *“நோயாளியை நலம் விசாரித்துக்கொண்டிருப்பவர், திரும்பி வரும்வரை சுவர்க்கத்தின் கனிகளைப் பறித்துக்கொண்டிருக்கிறார்!”*

{ நூல்: முஸ்லிம் - 5017 }

🌹➖➖➖➖➖➖➖➖🌹

               *✍தமிழில்✍*

                     அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


Previous Post Next Post