மக்களின் பார்வையில் சிலர் அற்பமானவர்கள்! ஆனால், அல்லாஹ்விடம் அவர்களோ மரியாதைக்குரியவர்கள்!


           அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

           “முஸ்லிமை இழிவாகக் கருதுவது ஹராமாகும். வறுமையிலும், அறியாமையிலும் எவ்வளவுதான் மோசமான நிலையை அவன் அடைந்திருந்தாலும் அவனை நீ இழிவாகக் கருதி விடாதே!”

           நபி (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் கூறினார்கள்: *'(புழுதி படிந்த) பரட்டைத் தலையுடைய, (வீட்டு) வாசல்களில் தடுத்து நிறுத்தப்படக்கூடிய எத்தனையோ பேர், (அல்லாஹ்விடம் அந்தஸ்தால் உயர்ந்தவர்கள் ஆவார்கள்!.) அவர்கள் அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டு (எதையேனும்) கூறுவார்களானால், அல்லாஹ் அதை மெய்யாக்கி (நிறைவேற்றி) விடுவான்!'* (முஸ்லிம் - 5116, 5483)

*🔅(புழுதி படிந்த) பரட்டைத் தலையுடையவர் என்பதன் பொருள்:* “(தலைக்கு எண்ணெய் தேய்த்து, அதைச் சீவி) தன்னை சுத்தப்படுத்திக்கொள்ள முடியாத அளவுக்கு வறுமையில் இருப்பவர்” என்பதாகும்.

*🔅(வீட்டு) வாசல்களில் தடுத்து நிறுத்தப்படக்கூடியவர் என்பதன் பொருள்:* “(இவரின் தோற்றத்திற்காக வீடுகளில் நுழைவதற்கு) இவருக்குக் கதவு திறக்கப்படமாட்டாது; (இவர் தட்டியதற்காக) யாராவது ஒருவர் கதவைத் திறந்து, இன்னார்தான் (வந்திருக்கிறார்) என்று அவர் அறிந்துவிட்டால் கதவை மூடிவிட்டு, வாசலில் வைத்தே அவரைத் தடுத்து (விரட்டி) விடுவார்” என்பதாகும்.

         (இப்படி, மக்களிடம் அற்பமாகக் கருதப்படும் இவர், தனது இறையச்சத்தினாலும் நன்னடத்தையினாலும் அல்லாஹ்விடம் மதிப்புமிக்கவராக இருக்கின்ற காரணத்தினால்தான்) *“இவர் அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டு (எதையேனும்) கூறிவிட்டால், அல்லாஹ் அதை மெய்யாக்கி நிறைவேற்றி விடுவான்!”* என நபி (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் இங்கு குறிப்பிடுகின்றார்கள்.

          *எனவே, முஸ்லிமான உன் சகோதரனை எப்படி நீ இழிவாகக் கருத முடியும்?!*

{ நூல்: 'ஷர்ஹுல் அர்பbஈன் அந்நவவிய்யா', பக்கம்: 382 }

☘➖➖➖➖➖➖➖➖☘

         

         قال العلّامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:-

               [ يحرم إحتقار المسلم مهما بلغ في الفقر وفي الجهل فلا تحتقره! لأنّ النّبي صلّى الله عليه وسلم قال: *« ربّ أشعث مدفوع بالأبواب، لو أقسم على الله لأبرّه »* (المسلم -٥١١٦، ٥٤٨٣)

*🔅أشعث (أغبر):* لايستطيع أن ينظف نفسه.

*🔅مدفوع بالأبواب:* لايفتح له؛ وإذا فتح له أحد وعرف أنه فلان ردّ الباب عليه فدفعه بالباب.

🔅يقول النّبي صلّى الله عليه وسلم: *« لو أقسم على الله لأبرّه »*

       *فكيف تحتقر أخاك المسلم..... !*

{ شرح الأربعين النووية، ص - ٣٨٢ }

☘➖➖➖➖➖➖➖➖☘

               *✍தமிழில்✍*

                    அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


Previous Post Next Post