சிறுவர் மனங்களில் இஸ்லாத்தின் அடிப்படைகளை விதைப்போம்!

சவூதி அரேபியாவின் பிரதம முப்fதியாக இருந்த அல்லாமா அப்துல் அஸீஸ் பின் அப்துல்லாஹ் பின் பாஸ் (ரஹ்) அவர்கள், முஸ்லிம் சிறுவன் ஒருவனைச் சந்தித்துவிட்டால், *“உனது இரட்சகன் யார்? உனது மார்க்கம் என்ன? உனது நபி யார்?”*என்று கேட்கக்கூடியவர்களாக இருந்தார்கள். சிறுவர் மனங்களில் இவற்றை ஆழமாகப் பதிய வைக்க வேண்டும் என்பதற்காகவே அவர்கள் இவ்வாறு நடந்து கொண்டார்கள்.

            ஒவ்வொரு முஸ்லிமும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய மூன்று அடிப்படைகள்தான் இந்தக் கேள்விகள்! மரணித்து, மண்ணறையில் வைக்கப்பட்டவுடன் மனிதனிடம் கேட்கப்படும் முதல் கேள்வியும் இதுதான்!

          எமது சிறார்களிடம், “இந்தப் பாடல் உனக்குப் பாடமா? அந்தப் பாடல் உனக்குப் பாடமா?” என்று கேட்பதற்குப் பதிலாக, இஸ்லாத்தின் அடிப்படைக் கேள்விகளை அவர்களிடம் நாம் கேட்பதே அழகானதாகும்.

{ முகநூலில் - محمد فتحي عسوس


                     [ كان الإمام العلامة إبن باز رحمه الله تعالى إذا قابل طفلا سأله: "من ربّك؟ ما دينك؟ من نبيك؟" ليؤصل ذلك في نفوس الأطفال.

         وهذه الأسئلة هي الأصول الثلاثة التي يجب على العبد معرفتها؛ وهي أول ما يسأل عنه العبد إذا وضع في قبره.

            فجميل أن نسأل أطفالنا هذه الأسئلة بدلا من " اتحفظ أنشودة كذا وكذا.... " ] .

{ محمد فتحي عسوس في فيس بوك }

               மரணித்தவன்,மண்ணறையில் வைக்கப்பட்ட உடனேயே உலகில் அவன் பெற்றுக்கொண்ட கலைமானி (B.A.), முதுமானி(M.A.), கலாநிதி(Phd) ஆகிய பட்டங்கள் எல்லாம் பறந்து போய் விடும்! *“உனது இரட்சகன் யார்? உனது மார்க்கம் என்ன? உனது நபி யார்?”*என்ற ஆரம்பப்பள்ளி, முதலாம் வகுப்புப் பாடம்தான் எஞ்சியிருக்கும்!!

                   தமிழில்

                அஷ்ஷெய்க்

N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


Previous Post Next Post