இஸ்லாமியப் பேரறிஞர், இமாம் இப்னுல் கைய்யிம் (ரஹ்) கூறுகின்றார்கள்:
“எவருடைய நேரம் அல்லாஹ்வின் விருப்புக்குரியதாக இருக்கவில்லையோ அவர், வாழ்வதைவிட செத்து மடிவதே அவருக்குச் சிறந்ததாகும்“.
{நூல்: 'அத்தாஉ வத்தவாஉ' ,பக்கம்:186 }
قال الإمام العلامة إبن القيم رحمه الله تعالى:
[ من لم يكن وقته لله ، فالموت خير له من الحياة!" ]
{ الداء والدواء ، ص - ١٨٦ }
➖➖➖➖➖➖➖➖➖➖
🌟👉🏿 அஷ்ஷெய்க் அஸ்ஹர் சுனைகரா (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-
“ பலநூறு மில்லியன் பணம் மதிப்புள்ள கைக்கடிகாரம் ஒருவனுடைய கையில் கட்டப்பட்டிருக்கும்! அதைப்பற்றி அவன் மற்றவர்களிடம் பெருமிதமாகப் பேசிக்கொண்டும் இருப்பான். பின்னர், இத்தகைய அவனை,நேரத்திற்கென ஓர் பெறுமானத்தை வழங்காதவனாக நீ பார்ப்பாய்! இது, உள்ளங்கள் செத்துப்போய்விட்டதைத் தெரிவிக்கும் ஆச்சரியமான விடயங்களில் உள்ளதாகும்!!”
{அஷ்ஷெய்க் அஸ்ஹர் சுனைகரா அவர்களின் முகநூல் பக்கம் }
قال الشيخ أزهر سنيقرة حفظه الله تعالى:-
"من غرائب الأمور الدالة على موت القلوب، تجد الواحد منهم في يده ساعة قيمتها مئات الملايين! ويتباهى بها على العباد، ثم لا تجده يقيم للوقت وزنا !!"
{ الشيخ أزهر سنيقرة حفظه الله تعالى في فيس بوك }
➖➖➖👇👇👇👇➖➖➖
👉🏿 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
*“மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட்கொடைகள் விடயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி விடுகின்றனர். 1-ஆரோக்கியம் 2-ஓய்வு நேரம் ”*.
{ நூல்: புகாரி, ஹதீஸ் இலக்கம் - 6412 }
🌸➖➖➖➖➖➖➖➖🌸
✍தமிழில்✍
அஷ்ஷெய்க்
N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா