மார்க்கத்தைப் படிக்க நீங்கள் ஒதுக்கும் நேரம் எவ்வளவு?


      _இமாம் அலீ இப்னு ஹஸன் இப்னு ஷகீக் (ரஹ்) கூறுகின்றார்கள்:_

        "குளிர் நிறைந்த மாரி கால இரவொன்றில் இமாம் அப்துல்லாஹ் இப்னுல் முபாரக் (ரஹ்) அவர்களுடன் பள்ளிவாயலில் நான் இருந்து கொண்டிருந்தேன். பின்னர் நாம் பள்ளிவாயலை விட்டு வெளியேறிச் செல்வதற்காக  எழுந்து விட்டோம். அப்போது பள்ளிவாயலின் வாசலில் வைத்து, இமாம் இப்னுல் முபாரக் (ரஹ்) அவர்கள் ஹதீஸ் ஒன்றை எனக்கு ஞாபகப்படுத்தினார்கள்; அல்லது ஹதீஸ் ஒன்றை அவர்களுக்கு நான் ஞாபகப்படுத்தினேன். முஅத்தின் வந்து சுப்ஹ் தொழுகைக்கு அதான் சொல்கின்ற வரைக்கும் அந்த ஹதீஸோடு தொடர்பான விளக்கங்களை அவருக்கு நான் ஞாபகப்படுத்த, அவரும் எனக்கு ஞாபகப்படுத்திக்கொண்டேயிருந்தார்!".

 _{ நூல்: 'அல்ஜாமிஃ லிஅஹ்லாகிர் ராவீ வ ஆதாபிஸ் ஸாமிஃ', 2/276 }_

🍁➖➖➖➖➖➖➖➖🍁

 _قال علي بن الحسن بن شقيق رحمه الله تعالى:_

          [ كنت مع عبد الله بن المبارك رحمه الله تعالى فى المسجد في ليلة شتوية باردة، فقمنا لنخرج فلما كان عند باب المسجد ذاكرني بحديث أو ذاكرته بحديث، فما زال يذاكرني وأذاكره حتى جاء المؤذن فأذن لصلاة الصبح! ]

{ الجامع لأخلاق الراوي وآداب السامع،  ٢/ ٢٧٦ }

🍁➖➖➖➖➖➖➖➖🍁

               ✍தமிழில்✍

                அஷ்ஷெய்க்

N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா

أحدث أقدم