நோய்க்குப் பயந்து சுவையான உணவுகளைத் தவிர்க்கும் பலர், நரக நெருப்புக்குப் பயந்து பாவங்களைத் தவிர்ந்து கொள்ளாதிருக்கின்றனர்


          இஸ்லாமிய அறிஞர் அஷ்ஷெய்க் அப்துர்ரஸ்ஸாக் பின் அப்துல் முஹ்சின் அல்பத்ர் (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

          *“எம் சமூகத்திலுள்ள பலரின் நடைமுறை வாழ்க்கையை நன்றாக நீங்கள் சிந்தித்துப் பார்த்தால், அவர்களிலொருவர் ஆகுமான பலவகை உணவுகளை உண்ணாமல் தவிர்ந்துகொண்டு வருவதை உங்களால் கண்டுகொள்ள முடியும். இதைப்பற்றி அவரிடம் நீங்கள் கேட்டால், 'நோய்க்குப் பயந்து அவற்றை நான் தவிர்த்துக் கொள்கிறேன்!' என்று அவர் கூறுவார்.*

            *நோய்க்குப் பயந்து சுவையான உணவைக்கூட தவிர்ந்து கொள்பவனே! மறுமை நாளிலுள்ள அல்லாஹ்வின் நரக நெருப்புக்குப் பயந்து நடுங்கி பாவங்களைத் தவிர்ந்து  நடக்காமலிருக்க உனக்கு என்ன நேர்ந்தது?!!”*

{ 'கோடை உஷ்ணமும், நரக நெருப்பை நினைவூட்டலும்!' ௭ன்ற தலைப்பில் ஷெய்க் அவர்களால் ஹிஜ்ரி 20/05/1427 -ம் திகதியன்று நிகழ்த்தப்பட்ட ஜும்ஆ உரையிலிருந்து...)



           قال فضيلة الشيخ عبدالرزاق بن عبدالمحسن البدر حفظه الله تعالى:-

        *{ إنك عندما تتأمل في واقع كثير منا؛ تجد الواحد منا يتجنب أنواعا من الأطعمة المباحة، وإذا سألته عن ذلك قال: 'أتجنبها خشية الداء'.*

       *فيا من تتجنب لذيذ الطعام خشية الداء ما بالك لا تتجنب المعاصي خشية ومخافة نار الله يوم القيامة؟!!*

[ خطبة جمعة/ حرّ الصيف والتذكير بنار جهنم - بتاريخ  ١٤٢٧/٥/٢٠ هجري ]

📖📖👇👇👇👇👇👇📖📖

🎯 *“நம்பிக்கை கொண்டோரே! உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் நரகத்தை விட்டும் பாதுகாத்துக் கொள்ளுங்கள். மனிதர்களும் கற்களுமே அதன் எரிபொருட்களாகும். அதில், கடின சித்தம் கொண்ட பலசாலிகளான வானவர்கள் உள்ளனர். அவர்கள், அல்லாஹ் தமக்கு ஏவியதற்கு மாறு செய்யமாட்டார்கள்; தமக்கு ஏவப்பட்டதை அவர்கள் செய்வார்கள்!”* (அல்குர்ஆன், 66: 06)

🌄➖➖➖➖➖➖➖➖🌄

               *✍தமிழில்✍*

                     அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


Previous Post Next Post