பிழையை பிழை என்று ஏற்றுக்கொள்வதால் கண்ணியம் குறைந்துபோய் விடுவதில்லை!


          அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

           *“சத்தியத்தை எங்கிருந்து மனிதன் பெற்றுக்கொண்டாலும், அதனிடம் வந்து சரணடைந்து விடவேண்டிய கட்டாயக் கடமை அவனுக்கு இருக்கிறது. அவனது கூற்று அதற்கு முரண்பட்டாலும் அதனிடமே அவன் வந்து சேர்ந்து கொள்ளட்டும்! இதுதான்,  அல்லாஹ்விடத்தில் அதிக கண்ணியத்தையும், மனிதர்களிடத்தில் நல்ல கெளரவத்தையும் அவனுக்குப் பெற்றுக்கொடுப்பதோடு அவனது பொறுப்பு நீங்கி,  நல்ல பாதுகாப்பையும் ஏற்படுத்தக்கூடியதாகும்;அவனுக்கு இது தீங்கை ஏற்படுத்திவிடாது. எனவே, (பிழையான) உன் கூற்றை விட்டு விட்டு சரியான நிலைப்பாட்டிற்கு நீ திரும்பி விட்டால், மனிதர்களிடத்தில் உனது அந்தஸ்து இறங்கி விடும் என்றெல்லாம் நீ நினைத்து விடாதே; மாறாக, உனது அந்தஸ்தை அது உயர்த்தியே விடுகிறது!*

         *தனது பிழையான கருத்தில் பிடிவாதத்துடன் இருந்துகொண்டு சத்தியத்தை மறுப்பவனைப் பொறுத்தவரை அவன் ஓர்  பெருமைக்காரனாவான். அல்லாஹ்தான் பாதுகாக்க வேண்டும்! கல்வியைத் தேடுவோர் வரை மனிதர்கள் சிலரிடம் இருந்துகொண்டிருக்கும் நிலைப்பாடு இந்த இரண்டாம் வகைதான்!. ஆய்வுக்குப் பின்னரான தெளிவுக்குப் பின்பு சரியானது இதுதான் என்று இவனுக்குத் தெளிவாகின்றது; என்றாலும் இவன் தனது (பிழையான) கருத்திலேயே நிலைத்திருக்கிறான். 'சரியான கருத்துக்கு வந்துவிட்டால் மக்கள் தன்னை இழிவாகக் கருதுவதோடு, இவன் எல்லாவற்றையும் சரி காணும் மனிதன்; ஒவ்வொரு நாளைக்கும் இவனுக்கு ஒவ்வொரு கருத்து உண்டு!' என்றெல்லாம் இவர்கள் பேசுவார்கள் என்று ஷைத்தான் இவனுக்குப் பிழையான சிந்தனையைப் போட்டு விடுவான். சரியான கருத்துக்கு நீ வந்துவிட்டால் இதெல்லாம் தீங்கு எதையும் ஏற்படுத்தப் போவதில்லை.*

         *ஆதலால், நேற்று நீ கூறிய உனது (பிழையான) கூற்றுக்கு மாற்றமாக இன்று நீ கூறும் (சரியான) கூற்று இருந்து விடட்டும்! மார்க்க விவகாரம் ஒன்றில் கண்ணியத்திற்குரிய இமாம்களிடம் பலவிதமான கருத்துக்கள் இருந்திருக்கிறதுதானே!!*

{ நூல்: 'ஷர்ஹு ரியாழிஸ் ஸாலிஹீன்', 03/537 }

🏖➖➖➖➖➖➖➖➖🏖

               

                     *{ والواجب أن يرجع الإنسان للحق حيثما وجده، حتى لو خالف قوله فليرجع إليه، فإن هذا أعزّ له عند الله وأعزّ عند الناس، وأسلم لذمته وأبرأ ولا يضرّه. فلا تظن أنك إذا رجعت عن قولك إلى الصواب أن ذلك يضع منزلتك عند الناس؛ بل هذا يرفع منزلتك!*

          *أما الذي يعاند ويبقى على ما هو عليه ويردّ الحق فهذا متكبر والعياذ بالله...! وهذا الثاني يقع من بعض الناس - والعياذ بالله - حتى من طلبة العلم، يتبيّن له بعد المناقشة وجه الصواب وأن الصواب خلاف ما قاله بالأمس، ولكنه يبقى على رأيه، يملي عليه الشيطان أنه إذا رجع إستهان الناس به وقالوا: 'هذا إنسان إمعة، كل يوم له قول' ، وهذا لا يضرّ إذا رجعت إلى الصواب.*

          *فليكن قولك اليوم خلاف قولك بالأمس! فالائمة الأجلة كان لهم في المسألة الواحدة أقوال متعددة }*.

[ شرح رياض الصالحين، باب تحريم الكبر والإعجاب - ٣/٥٣٧ ]

🏖➖➖➖➖➖➖➖➖🏖

               *✍தமிழில்✍*

                    அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


Previous Post Next Post