உள்ளம் மரணித்துப் போவதை விட்டும் அல்லாஹ் மாதுகாப்பானாக!


          அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

          “உயிரில்லாதிருக்கும் உள்ளமே மரணித்த உள்ளமாகும். உள்ளம் மரணித்துவிட்டவன் தன் இரட்சகனை அறிந்து கொள்ளமாட்டான்; அல்லாஹ்வின் கட்டளையைக்கொண்டும், அவன் விரும்பி திருப்திகொள்ளும் விடயங்களைக்கொண்டும் அவனை வணங்கமாட்டான்; தன் இரட்சகனின் வெறுப்பும் அவன் கோபமும் இருந்தாலும் தனது மனோ விருப்பங்கள் மற்றும் ஆசைகளுடனேயே இவன் நின்றுகொண்டிருப்பான்; தனது மனோ ஆசையைக்கொண்டு வெற்றி பெற்றுவிட்டாலும் தன் இரட்சகன் பொருந்திக்கொண்டானா? கோபித்துக்கொண்டானா? என்றெல்லாம் பொருட்படுத்தமாட்டான்; தான் ஒன்றை நேசித்தாலும் தன் மனோ ஆசைக்காகவே அதை நேசிப்பான்; கோபித்தாலும் தன் மனோ ஆசைக்காகவே கோபிப்பான்; தான் கொடுத்தாலும் தன் மனோ விருப்பத்திற்காகவே கொடுப்பான்; கொடுக்காது தடுத்து வைத்துக்கொண்டாலும்  தன் மனோ விருப்பத்திற்காகவே தடுத்து வைத்துக்கொள்வான்; தன் இரட்சகனின் திருப்தியைக் காட்டிலும் தன் மனோ ஆசைதான் இவனிடம் அதிக முன்னுரிமைக்குரியதாகவும், அதிக விருப்புக்குரியதாகவும் இருக்கும்.

           உபதேசம் செய்பவருக்கு இவன் பதிலளிக்கமாட்டான்; முரட்டு சுபாவம் கொண்ட ஒவ்வொரு ஷைத்தானையும் இவன் பின்பற்றுவான். இந்த மனோ ஆசைதான் இவனை செவிடனாக்கி குருடனாக்குகிறது..! இதனால்தான், *“தமது உடல் மரணித்துவிடும் என அழக்கூடிய மனிதர்கள், இதைவிடக் கடுமையானதாக இருக்கும் தமது உள்ளம் மரணித்து விடுவது குறித்து அழாதவர்களாக இருப்பது ஆச்சரியமாகவே இருக்கிறது!”* என நல்லவர்களில் ஒருவர் கூறினார்.

        இந்த உள்ளத்தை உடையவனுடன் இரண்டறக் கலந்திருப்பது நோயாகும்; இவனோடு உறவாடுவது விஷமாகும்; இவனுடன் உட்கார்ந்திருப்பது அழிவாகும்!”.

( நூல்:'அல்முஹ்தார் லில்ஹதீஸி fபீ ஷஹ்ரி ரமழான்', பக்கம்: 287 )



          قال العلاّمة محمد بن صالح العثيمين رحمه الله:-

         { القلب الميّت: وهو الذي لا حياة به، فهو لا يعرف ربّه، ولا يعبده بأمره وما يحبّه ويرضاه. بل هو واقف مع شهواته ولذّاته ولو كان فيها سخط ربّه وغضبه. فهو لا يبالي إذا فاز بشهوته رضي ربّه أم سخط، إن أحبّ أحبّ لهواه؛ وإن أبغض أبغض لهوا؛ وإن وأعطي أعطي لهواه؛ وإن منع منع لهواه، فهواه آثر عنده وأحبّ إليه من رضا مولاه.

           لا يستجيب للنّاصح، ويتّبع كل شيطان مريد.  والهوى يصمّه ويعميه. قال أحد الصالحين:  *«ياعجبا من النّاس يبكون على من مات جسده ولا يبكون على من مات قلبه وهو أشد »*

         فمخالطة صاحب هذا القلب سقم ومعاشرته سمّ ومجالسته هلاك }

[ المصدر: 'المختار للحديث في شهر رمضان'، ص - ٢٨٧ ]

🌹➖➖➖➖➖➖➖➖🌹

               *✍தமிழில்✍*

                 அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா

Previous Post Next Post