பாம்பையும், தேனையும் போன்றது இவ்வுலகம்!


         இமாம் மாலிக் பின் தீனார் (ரஹ்) கூறுகின்றார்கள்:- 

          “விரண்டோடும் இடமாக இவ்வுலகையும், தங்குமிடமாக மறுமையையும் அல்லாஹ் ஆக்கி வைத்திருக்கின்றான். எனவே, விரண்டோடும் இடத்திலிருந்து தங்குமிடத்துக்குரியதை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்; உலகிலிருந்து உங்கள் உடல்கள் வெளியேற முன், உலகத்தை உங்கள் உள்ளங்களிலிருந்து நீங்கள் வெளியேற்றி விடுங்கள்! உங்கள் ரகசியங்களையெல்லாம் அறிந்து வைத்திருப்பவனிடம் உங்கள் திரைகளைக் கிழித்து அசிங்கப்பட்டுக்கொள்ளாதீர்கள். உலகத்தில் நீங்கள் வாழவைக்கப்பட்டீர்கள்; ஆனாலும், அதுவல்லாத வேறொரு உலகத்திற்காகவே நீங்கள் படைக்கப்பட்டிருக்கின்றீர்கள்!

         இவ்வுலகம் நஞ்சைப் போன்றது! இதன் அபாயத்தை அறியாதவன் அதைச்  சாப்பிட்டு விடுவான்; அறிந்தவனோ அதைத்  தவிர்ந்து கொள்வான்!

          இவ்வுலகம் பாம்பைப்  போன்றதாகும். அதைத் தொட்டுப் பார்ப்பது மென்மையானதாக இருப்பினும்; அதனுள் இருப்பதோ கொல்லும் விஷமாகும்! புத்திசாலிகள் இதுகுறித்து எச்சரிக்கையாக இருந்து கொள்வார்கள்; சிறுவர்கள்தான் தமது கைகளால் இதைப் பிடித்துக்கொள்ள விரைந்து செல்வார்கள்!”.

{ நூல்: 'ஸிபfதுஸ் ஸப்fவா' , 2/168 }


قال الإمام مالك بن دينار رحمه الله تعالى:- 

       "إن الله جعل الدنيا دار مفر ، والآخرة دار مقر ! فخذوا لمقركم من مفركم؛ وأخرجوا الدنيا من قلوبكم قبل أن تخرج منها ابدانكم، لا تهتكوا استاركم عند من يعلم اسراركم، ففي الدنيا حييتم ولغيرها خلقتم.

          إنما مثل الدنيا كالسم، أكله من لا يعرفه؛ واجتنبه من عرفه! *ومثل الدنيا مثل الحية*، مسها لين وفي جوفها السم القاتل! يحذرها ذوو العقول ويهوي إليها الصبيان بأيديهم".

{ صفة الصفوة، ٢/ ١٦٨ }

➖➖➖➖➖➖➖➖➖➖

💥👉🏿 “பூமியில் வடிந்து விழுந்து கிடந்த  தேன் துளியொன்றை அங்கு வந்த சிறிய எறும்பு ஒன்று சுவைத்துப் பார்த்தது. தேனின் சுவை அதை உச்சிக்குக் கொண்டு போக, மீண்டும் சென்று இன்னொரு துளியை எடுத்துச் சுவைத்தது....

பின்னர், முழுமையான சுகத்தை அனுபவிக்கும் எண்ணத்தில் தேனுக்குள் அது புதைந்தது.  அப்போது, அதிலிருந்து வெளியே வர அவ்வெறும்புக்கு முடியாமல் போயிற்று. பூமியுடன் அது ஒட்டிக்கொண்டது. சாகின்ற வரைக்கும் இதே நிலையிலேயே அது இருந்தது!”

          அறிஞர்கள் கூறுகின்றார்கள்: *“இவ்வுலகம் பெரியதோர் தேன் துளியாகும். அத்தேனில் சிறு துளியை எடுத்து போதுமாக்கிக் கொண்டவன் வெற்றி பெறுவான்; அத்தேன் கடலில் மூழ்கியவன் அழிந்து போவான்!”*

{ முகநூலில்: الشيخ عبدالسلام بلاسي}


        سقطت قطرة عسل على الأرض، فجاءت نملة صغيرة فتذوقت العسل، مذاق العسل راق لها فعادت وأخذت رشفة أخرى......

دخلت النملة فى العسل لتستمتع به، لكنها لم تستطع الخروج منه، والتصقت بالأرض وظلت على هذه الحال إلى أن ماتت.

          يقول الحكماء: "ماالدنيا إلا قطرة عسل كبيرة،  فمن اكتفى بارتشاف القليل من عسلها نجا، ومن غرق في بحر عسلها هلك!"

{ الشيخ عبد السلام بلاسي في فيس بوك }

🍀➖➖➖➖➖➖➖➖🍀

                  ✍தமிழில்✍

                  அஷ்ஷெய்க்

N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


أحدث أقدم