பாவமன்னிப்புக்கான வாசல் திறந்திருக்கின்றது; அவசரமாக நுழைந்து கொள்ளுங்கள்


          அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

         “மரணம் வந்துவிட்டால் பாவமன்னிப்பு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. ஒவ்வொரு மனிதரையும் பார்த்து நான் கேட்கிறேன்: *“மரணம் எப்போது வரும் என்று யாருக்காவது தெரியுமா?”*

            யாருக்குமே தெரியாது! எனவே, பாவமன்னிப்புத் தேடிக்கொள்ள விரைந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். ஏனெனில், எந்நேரம் மரணம் உனக்கு வரும் என்பதை நீ அறியமாட்டாய்; மனிதர்களில் ஒருவர் தனது படுக்கையில் சுகமாகவும் ஆரோக்கியமாகவும் உறங்கியிருப்பார்..! பின்னர் அவரோ, தனது படுக்கையிலிருந்து குளிப்பாட்டும் கட்டிலுக்குத் தூக்கிச் செல்லப்பட்டிருப்பார். மனிதர்களில் இன்னுமொருவர் வேலை செய்யும் கதிரையில் இருந்துகொண்டு வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருப்பார்..! பின்னர் அவர்,  அவ்வேலைக் கதிரையிலுருந்து குளிப்பாட்டும் கட்டிலுக்குத் தூக்கிச் செல்லப்பட்டிருப்பார். இவையனைத்தும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இவை போன்ற திடீர் மரணங்கள் நிறையவே நடக்கின்றன! ஆகவே, பாவமன்னிப்பின் பக்கம் நாம் விரைய வேண்டியது கட்டாயமாகின்றது. எமக்கும், உங்களுக்கும் இதற்காக அல்லாஹ் உதவி புரிய வேண்டும் என அவனிடம் கேட்கின்றோம். வாசல்கள் அடைக்கப்பட முன்னர் பாவமன்னிப்புத் தேட விரைந்துகொள்ளுங்கள்!”.

{ நூல்: 'லிகாவுல் பாபில் மfப்தூஹ்', பக்கம்: 40 }

          அல்லாமா அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் வேறொரு இடத்தில் இவ்வாறு கூறுகின்றார்கள்:-

       “முஹம்மத் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்களின் சமூகமே! உங்களில் யாரிடம், தான்  பாவமன்னிப்புத் தேடும் வரைக்கும் தொழும் வரைக்கும் மரணம் வராது என்று மரணத்திலிருந்து பாதுகாப்பு உத்தரவாதம் இருக்கிறது..!? 

🔅மரணம் தனக்குக் காலையில் வருமா? அல்லது மாலையில் வருமா என்று தெரியாது அந்த மரணம் குறித்து  உங்களில் ஒவ்வொருவரும் பயப்படக்கூடியவர்களாக இல்லையா?

🔅மனிதர்கள் உணராதிருக்கும் நிலையில் திடீரென்று மரணம் அவர்களைப் பிடிக்கக்கூடிதாக இருக்கவில்லையா?

🔅தமது உலக விவகாரங்களில் மூழ்கியிருந்தபோது மனிதர்கள் சிலருக்கு மரணம் திடீரென்று வரவில்லையா?

🔅வீட்டிலிருந்து வெளியேறிச் சென்ற சில மனிதர்கள், அவர்கள் திரும்பி வராமலேயே மரணம் அவர்களுக்குத் திடீரென வரவில்லையா?

🔅இவர்கள் போன்றோரின் நிலை ஒருவருக்கு இருக்காது என்ற பாதுகாப்பு உத்தரவாதம் ஒன்று வழங்கப்பட்டவர் உங்களில் யார் இருக்கின்றார்?”.

{ நூல்: 'அழ்ழியாவுல் லாமிஃ மினல் ஹுதபில் ஜவாமிஃ',  பக்கம்: 299 }


             قال العلاّمة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:-

         *« إذا حضر الموت فإن التوبة لا تقبل، وأنا أسأل كلّ إنسان: هل يعلم متى يحضره الموت؟*

        *لا يعلم، إذا لا بدّ من المبادرة بالتوبة؛ لأنك لا تدري في أي وقت يحضرك الموت. فمن النّاس من نام على فراشه في صحة وعافية ثم حمل من فراشه إلى سرير التغسيل، ومن النّاس من جلس على كرسي العمل يعمل ثم حمل من كرسي العمل إلى سرير التغسيل... كلّ هذا واقع، وأمثال هذه المفاجأة كثير. فإذا يجب أن نبادر بالتوبة، نسأل الله أن يعيننا وإيّاكم على ذلك، بادروا بالتوبة قبل أن تغلق الأبواب! »*

{ لقاء الباب المفتوح، ص : ٤٠ }

      وقال في موضع آخر: « يا أمّة محمد صلّى الله عليه وسلم! من منكم عنده أمان من الموت حتى يتوب ويصلّي؟! 

🔅أليس كلّ واحد منكم يخشى الموت ولا يدري أيصبحه أم يمسيه؟

🔅ألم يكن الموت يأخذ النّاس بغتة وهم لا يشعرون؟

🔅أما هجم على أناس وهم في دنياهم غافلون؟

🔅أما بغت أناسا خرجوا من بيوتهم، ولم يرجعوا؟

🔅فمن منكم أعطي أمانا ألا يكون حاله كهؤلاء؟

{ المصدر: 'الضياء اللامع من الخطب الجوامع'، ص : ٢٩٩ }

📚➖➖➖➖➖➖➖➖📚 

               *✍தமிழில்✍*

                  அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


أحدث أقدم