பாவங்கள், உள்ளத்தை பலவீனப்படுத்தி இறைத்தொடர்பைத் துண்டித்து விடும்!


             இஸ்லாமியப் பேரறிஞர் இமாம் இப்னுல் கைய்யிம் (ரஹ்) கூறுகின்றார்கள்:

           “அல்லாஹ்வின் பக்கமும், மறுமை வீட்டின் பக்கமும்  சென்றுகொண்டிருக்க வேண்டிய  உள்ளத்தின் பயணத்தை பாவங்கள் பலவீனப்படுத்தி விடுகின்றன; அல்லது அதற்குத் தடையை ஏற்படுத்தி விடுகின்றன; அல்லது செல்ல விடாமல் அதைத் தடுத்து நிறுத்தி  விடுகின்றன; மனிதனை அல்லாஹ்வின்பால் ஒர் எட்டுக்கூட எடுத்து வைக்க விடாமல் செய்து விடுகின்றன.

            ஏனெனில், உள்ளம் பலமடைந்திருக்கின்ற போதுதான் அது அல்லாஹ்வின் பக்கம் பயணிக்க முடியும்! பாவங்கள் மூலம் அது நோயுற்றுவிட்டால், அவனிடம் கொண்டு செல்லும் அப்பலமும் பலவீனமடைந்து விடும். அப்பலம் முழுமையாக இல்லாமல் போய்விட்டால், அதன் பின்னர் பாவமன்னிப்புக் கேட்பதே கஷ்டமாகிப் போய்விடும் அளவுக்கு அல்லாஹ்வின் தொடர்பை விட்டும் அவனை முற்றாகவே துண்டித்து விடும். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்!.

          ஒன்றில், பாவம் உள்ளத்தை மரணிக்க வைக்கும்; அல்லது பயப்படும் அளவிற்கு அதை நோயாக்கி விடும்; அல்லது உள்ளத்தின் பலத்தை அது பலவீனமாக்கும். இது நடக்கவே செய்யும்! முடிவில், இந்த உள பலவீனம் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரிய *துக்கம், கவலை, இயலாமை, சோம்பல், கோழைத்தனம், கஞ்சத்தனம், கடன் சுமை, பிற மனிதர்களின் அடக்குமுறை*ஆகிய எட்டு விடயங்களைச் செய்யும் அளவுக்குக் கொண்டு போய் முடிக்கும்!”

{ நூல்: 'அல்ஜவாபுbல் காபீf', பக்கம்: 112 }

🌿➖➖➖➖➖➖➖➖🌿

               قال الإمام العلامة إبن القيم الجوزية رحمه الله تعالى: [ المعاصي تضعف سير القلب إلى الله والدار الآخرة، أو تعوقه، أو توقفه وتقطعه عن السير، فلا تدعه يخطو إلى الله خطوة.

          والقلب إنما يسير إلى الله بقوته، فإذا مرض بالذنوب ضعفت تلك القوة التي تسيره، فإن زالت بالكلية إنقطع عن الله إنقطاعا يبعد تداركه ( أي يصعب التوبة بعده)، والله المستعان!

             فالذنب إما أن يميت، أو يمرضه مرضا مخوفا، أو يضعف قوته ولا بد. حتى ينتهي ضعفه إلى الأشياء الثمانية التي إستعاذ منها النبي صلى الله عليه وسلم، وهي: *" الهمّ والحزن والعجز والكسل والجبن والبخل وضلع الدين وغلبة الرّجال"*]

{ الجواب الكافي،  ص - ١١٢ }

🌿➖➖➖➖➖➖➖➖🌿


                  ✍தமிழில்✍

                  அஷ்ஷெய்க்

N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


أحدث أقدم