பெண் பிள்ளைகளைப் பாக்கியமாகக் கருதுங்கள்! பாவிகளாகப் பார்க்காதீர்கள்!


      _இமாம் யஃகூப் இப்னு பஹ்தான் (ரஹ்) கூறுகின்றார்கள்:-_ 

        "ஏழு பெண் குழந்தைகள் எனக்குப் பிறந்தார்கள். பெண் குழந்தை எனக்குப் பிறந்த போதெல்லாம், இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்களிடம் நான் சென்றேன். அப்போது அவர்கள் எனக்கு, *" யூசுபின் தந்தை யஃகூபே! நபிமார்களும் பெண் பிள்ளைகளுக்குத் தந்தைமார்கள்தான்!"*என்று சொன்னார்கள்.

         இமாம் அஹ்மதின் இக்கூற்று, என் கவலையைப் போக்கிவிட்டதாக  இருந்தது!"

       இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்களுடைய மகன் ஸாலிஹ் (ரஹ்) கூறுகின்றார்கள்: என் தந்தையவர்களுக்கு  பெண் குழந்தையொன்று பிறந்து விட்டாலும், _"நபிமார்கள் பெண் குழந்தைகழுக்குத் தந்தைமார்களாக இருந்தனர்!"_ என்று சொல்லக்கூடியவர்களாக இருந்தார்கள்.

 _{ நூல்: 'துஹ்பfதுல் மவ்தூத் பிb அஹ்காமில் மவ்லூத்' லிப்னில் கைய்யிம், பக்:19 }_

💢➖➖➖➖➖➖➖➖💢

    _قال يعقوب بن بختان رحمه الله تعالى:-_ 

        [ ولد لي سبع بنات، فكنت كلما ولد لي إبنة دخلت على أحمد بن حنبل، فيقول لي: *"يا أبا يوسف! الأنبياء آباء بنات"*، فكان يذهب قوله همي. ]

 _وقال صالح بن أحمد:_"كان أبي إذا ولد له إبنة يقول: الأنبياء كانوا آباء بنات."

{ تحفة المودود بأحكام المولود لابن القيم،  ص ـ ١٩ }

💢➖➖➖➖➖➖➖➖💢

              ✍தமிழில்✍

               அஷ்ஷெய்க்

N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


Previous Post Next Post