இமாம் அஹ்மதின் பணிவும், அதில் நாம் பெற வேண்டிய அறிவும்


     இமாம் யஹ்யா பின் மஈன் (ரஹ்) கூறுகின்றார்கள்:-

        “ இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்களைப் போன்ற ஒருவரை நான் கண்டதில்லை! ஐம்பது வருடங்கள் அவரோடு் சேர்ந்து நாம் பழகியிருக்கின்றோம். சீர்திருத்தம், நலவு எல்லாம் அவரிடமிருந்து ம் அதில் எந்தவொன்றைக் கொண்டும் எமக்கெதிராக அவர் பெருமை பாராட்டியதில்லை! *“நாங்கள் ஏழைக் கூட்டம்!”*என்றுதான் அவர்கள் சொல்லக்கூடியவர்களாக இருந்தார்கள்.

            நாங்கள் இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்களைப் பார்த்தோம்! அப்போது அவர் பக்தாத் நகர கடைத்தெருவில் இறங்கி, விறகுக் கட்டொன்றை விலைக்கு வாங்கி, அதைத் தன் தோழில் வைத்துக்கொண்டு வந்தார்கள். இதை மக்கள் அறிந்து கொண்டபோது, வர்த்தக நிலைய சொந்தக்காரர்களெல்லாம் தமது வர்த்தக நிலையங்களையும்  கடைக்காரர்களெல்லாம் தமது கடைகளையும் விட்டு விட்டு, பாதசாரிகள் தமது பாதைகளில் நின்று கொண்டு இமாம் அஹ்மதுக்கு சலாம் கூறினார்கள். *“உங்களுக்காக இவ்விறகுக் கட்டை நாம் சுமந்து கொண்டு வந்து தருகிறோம்!”*என்றும் கூறினர்.

         அப்போது, இமாம் அஹ்மதின் கை நடுங்கியது; அவர் முகமும் சிவந்தது; அவர் கண்களிரண்டும் கண்ணீர் வடித்தன. *“நாங்கள் ஏழைக் கூட்டம்; எமது குற்றங் குறைகளை அல்லாஹ் மறைக்கவில்லையென்றால் நாம் கேவலப்பட்டிருப்போம்!”*என்று கூறினார்கள்.

{ நூல்: 'ஹில்யதுல் அவ்லியா' , 9/181 }

🌸➖➖➖➖➖➖➖➖🌸

قال الإمام يحي بن معين رحمه الله تعالى:-

        ما رايت مثل أحمد بن حنبل، صحبناه خمسين سنة ما افتخر علينا بشيء مما كان فيه من الصلاح والخير، وكان رحمه الله يقول: نحن قوم مساكين...

       وقد رأينا الإمام أحمد نزل الي سوق بغداد، فاشتري حزمة من الحطب، وجعلها على كتفه. فلما عرفه الناس ترك أهل المتاجر متاجرهم، وأهل الدكاكين دكاكينهم وتوقف المارة في طرقهم، يسلمون عليه ويقولون: نحمل عنك الحطب!

فهز يده، واحمر وجهه،  ودمعت عيناه، وقال: *"نحن قوم مساكين، لولا ستر الله لا فتضحنا!"*

{ حلية الأولياء،  ٩/ ١٨١ }

🌸➖➖➖➖➖➖➖➖🌸

                 ✍தமிழில்✍

                 அஷ்ஷெய்க்

N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


Previous Post Next Post