வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவியாக இருப்பது கணவனுக்கு இழுக்கு அல்ல!


          நவீன கால ஹதீஸ் கலை அறிஞர், கண்ணியத்திற்குரிய இமாம், அல்லாமா நாஸிருத்தீன் அல்பாbனீ (ரஹ்) அவர்களின் மனைவி 'உம்முல் புfழைல்' அவர்கள் தனது கணவர் குறித்து இப்படிச் சொல்கிறார்கள்:- 

            *“நான் வெட்கப்படுகின்ற அளவுக்கு வீட்டு வேலைகளில் எனக்கு அதிகம் உதவி செய்து தருபவர்களாக எனது கணவர் இருந்தார்கள்! எந்த அளவுக்கென்றால், ஒரு தடவை குப்பை கொட்டும் தொட்டியை என்னுடன் சேர்ந்து அவர் கழுவி துப்புரவு செய்து கொண்டிருந்தார். அப்போது நான் அவரிடம், 'கணவரே! பக்கத்து வீட்டார் முன்னிலையில் எங்களை நீங்கள் கேவலப்படுத்தாதீர்கள்; இவர், தன் மனைவிக்கு வேலை செய்து கொடுக்கின்றார் என்றெல்லாம் மக்கள் (கேவலமாகப்) பேசிக்கொள்வார்கள்!' என்று சொன்னேன். அப்போது என்னிடம் அவர்கள், 'இது ஒரு கேவலம் அல்ல! நபி (ஸல்) அவர்கள் தனது மனைவியருக்கு வீட்டு வேலை செய்து கொடுக்கும் பணியில் ஈடுபடக்கூடியவர்களாக இருந்தார்கள் என்பது உமக்குத் தெரியாதா?!' என்று கேட்டார்கள்.”*

{ முகநூலில்   محمد كحول என்பவர் }


         أم الفضيل - زوجة الشيخ العلامة ناصر الدين الألباني رحمه الله - وهي تتحدث عن زوجها العالم الجليل:

       *[ كان كثيرا ما يعينني في شؤون المنزل حتى أخجل منه في ذلك، حتى انه مرة كان* *يشطف البرندة معي، فقلت له: يا شيخ! لا تفضحنا أمام الجيران، فيقولوا هذا يعمل عن امرأته!!*

*قال: هذه ليست فضيحة، ألا تعلمين أن النبي صلى الله عليه وسلم كان يقوم بمهنة أهله؟! ]*

{ الأخ/ محمد كحول في فيس بوك }

➖➖➖➖➖➖➖➖➖➖

❇👉🏿  இமாம் இப்னு கஸீர் (ரஹ்) கூறுகின்றார்கள்:- 

            “நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழகிய முறையில் குடும்ப வாழ்க்கை நடத்துபவர்களாகவும், எப்போதும் முகமலர்ச்சி உடையவர்களாவும் இருந்தார்கள். அத்தோடு அவர்கள் தமது குடம்பத்தாருடன் நகைச்சுவையாகப் பேசி விளையாடுபவர்களாவும், அவர்களோடு இரக்க சுபாவத்துடன் மென்மையாக நடப்பவர்களாவும், தான் கொடுக்க வேண்டிய குடும்பச் செலவை அவர்களுக்குத் தாராளமாகக் கொடுப்பவர்களாகவும் காணப்பட்டதோடு தனது மனைவிமார்களுடன் சேர்ந்து சிரித்து மகிழ்பவர்களாகவும் இருந்தார்கள். எந்த அளவுக்கென்றால் 'முஃமின்களின் தாய்' ஆயிஷா (ரழி) அவர்களுடன் ஓட்டப் போட்டியிலும் பங்குபற்றினார்கள்.

 இதன்மூலம் அவர்களுடன் நபியவர்கள் நேசமாக இருந்தார்கள். இவையெல்லாம், அன்னாரின் நற்குணங்களில் உள்ளவைகளாக இருந்தன!”.

{ நூல்: 'தப்ஸீர் இப்னு கஸீர்', 1/466 }


              قال الإمام العلامة إبن كثير رحمه الله تعالى: *[ وكان من أخلاقه صلى الله عليه وسلم أنه جميل العشرة دائم البشر، يداعب أهله ويتلطّف بهم، ويوسّعهم نفقته، ويضاحك نساءه، حتى إنه كان يسابق عائشة أم المؤمنين يتودّد إليها بذلك ]*

{ تفسير إبن كثير  ، ١/٤٦٦ }

⚜➖➖➖➖➖➖➖➖⚜ 

               *✍தமிழில்✍*

                 அஷ்ஷெய்க்

N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


أحدث أقدم