🎯 இறைத்தூதர் முஹம்மத் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்களின் துணைவியார் அன்னை ஆயிஷா (ரழியழ்ழாஹு அன்ஹா) கூறு கிறார்கள்:
“நான் இறைத்தூதர் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்களிடம் கொள்ளை (கொலரா) நோய் குறித்துக் கேட்டேன். அப்போது இறைத்தூதர்(ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் என்னிடம், 'அது, தான் நாடியவர்களின் மீது அல்லாஹ் அனுப்பும் வேதனையாக இருந்தது. (ஆனால், இப்போது) அதை இறைநம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் கருணையாக ஆக்கிவிட்டான். எனவே, (இறைவனின்) அடியார் ஒருவர் கொள்ளைநோய் பரவும்போது தமக்கு அல்லாஹ் எழுதிய விதிப்படியே அல்லாமல் எந்த நோயும் தம்மைத் தீண்டாது என உறுதி பூண்டவராகத் *தம் ஊரிலேயே* பொறுமையுடன் (நிலை குலையாமல்) இருப்பாராயின் அவருக்கு அல்லாஹ்வின் பாதையில் போராடி மரணித்த உயிர்த் தியாகிக்குக் கிடைப்பது போன்ற நன்மை (மறுமையில்) கிடைக்கும்” எனத் தெரிவித்தார்கள்.
[ நூல்: புகாரி - 5734 ]
🔰 முஸ்னத் அஹ்மத் கிரந்தத்தில் பதிவாகியுள்ள கொலரா நோய் குறித்த நபிமொழியொன்று வருமாறு:
“இறைவிசுவாசியான ஒருவர் கொலரா (கொள்ளை) நோய் பரவும்போது தமக்கு அல்லாஹ் எழுதிய விதிப்படியே அல்லாமல் எந்த நோயும் தம்மைத் தீண்டாது என உறுதி பூண்டவராகத் *தம் வீட்டிலேயே* பொறுமையுடன் அல்லாஹ்விடம் நற்கூலியை எதிர்பார்த்தவராக தங்கியிருப்பாராயின் அவருக்கு அல்லாஹ்வின் பாதையில் போராடி மரணித்த உயிர்த் தியாகிக்குக் கிடைப்பது போன்ற நன்மை (மறுமையில்) கிடைக்கும்”.
[ நூல்: முஸ்னத் அஹ்மத் - 26139 ]
➖➖➖➖➖➖➖➖➖➖
“நோய் ஏற்படும்போதும் அது பரவுகின்றபோதும் அதிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்காக அல்லாஹ்வின் மீது முழுமையாக நம்பிக்கை (தவக்குல்) வைத்து ஆன்மீக ரீதியாக செயல்படுதுடன், நோய் சிகிச்சைக்காக புற ரீதியான காரணிகளைச் செய்ய வேண்டும் என்பதற்கு இந்நபிமொழி ஆதாரமாக இருக்கிறது. அத்தோடு, தொற்றுநோயிலிருந்து விலகியிருப்பதற்காக (அங்குமிங்கும் செல்லாது) வீட்டிலேயே தங்கியிருக்க வேண்டும் என்பதற்கும் இந்நபிமொழி ஆதாரமாக இருக்கிறது” என அஷ்ஷெய்க் கலாநிதி சுலைமான் அர்ருஹைலீ (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்.
[ கலாநிதி அவர்களின் உத்தியோகபூர்வ Twitter பக்கத்தில் ....
solyman 24@ ]
“கொலரா நோய் பரவலின் போது நபிமொழியில் கூறப்பட்டவாறு (பொறுமை, நிலைகுலையாமை, அல்லாஹ்விடம் நற்கூலி கிடைக்கும் என்ற உறுதியான எதிர்பார்ப்பு என்பன போன்ற) பண்புகளைக் கடைப்பிடித்து நடப்பவருக்கு அவர் மரணிக்காதுவிட்டாலும் உயிர்த் தியாகியின் கூலி கிடைக்கும் என்பதுதைத்தான் நபிமொழியின் வெளிப்படையான வார்த்தைப் பிரயோகம் தெரிவிக்கின்றது” என இமாம் இப்னு ஹஜர் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்.
[ நூல்: 'பfத்ஹுல் பாbரீ', 10/194 ]
➖➖➖➖➖➖➖➖➖➖
🎯 حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنَا حَبَّانُ حَدَّثَنَا دَاوُدُ بْنُ أَبِي الْفُرَاتِ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ عَنْ يَحْيَى بْنِ يَعْمَرَ عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ *{ أَنَّهَا أَخْبَرَتْنَا أَنَّهَا سَأَلَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الطَّاعُونِ فَأَخْبَرَهَا نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ كَانَ عَذَابًا يَبْعَثُهُ اللَّهُ عَلَى مَنْ يَشَاءُ فَجَعَلَهُ اللَّهُ رَحْمَةً لِلْمُؤْمِنِينَ فَلَيْسَ مِنْ عَبْدٍ يَقَعُ الطَّاعُونُ فَيَمْكُثُ فِي بَلَدِهِ صَابِرًا يَعْلَمُ أَنَّهُ لَنْ يُصِيبَهُ إِلَّا مَا كَتَبَ اللَّهُ لَهُ إِلَّا كَانَ لَهُ مِثْلُ أَجْرِ الشَّهِيدِ }*
] صحيح البخاري، رقم الحديث - 5734 ]
🎯 رَوى الإمامُ أحمدُ بإسنادٍ صحيحٍ أنَّ النَّبيَّ -صلى الله عليه وسلم- قال عن الطاعون: *(فَليسَ مِن رَجُلٍ يَقَعُ الطَّاعونُ فَيمكثُ في بَيتهِ صَابراً مُحتَسِباً يَعلمُ أَنَّهُ لا يُصيبُه إِلا مَا كَتبَ اللهُ لَه إلَّا كان لهُ مِثلُ أَجرِ الشَّهيدِ)*
[ مسند الإمام أحمد - 26139 ]
قال الشيخ الدكتور سليمان الرحيلي - وفقه الله - :
"فهذا الحديثُ أصلٌ في فِعلِ الأَسْبَابِ الحِسِّيَّة مَعَ التَّوَكُلِ عَلى اللهِ، كَما أنَّه أصلٌ في المُكثِ في البَيتِ تَجنبًا للْوَبَاءِ".
◄ المصدر: حساب الشيخ الرسمي، تويتر، @solyman24.
🌟 قال الإمام إبن حجر العسقلاني رحمه الله تعالى:
« اقتضى منطوقه أن من اتصف بالصفات المذكورة يحصل له أجر الشهيد وإن لم يمت »
[ فتح الباري، 10/194 ]
🌻➖➖➖➖➖➖➖➖🌻
*'இல்லங்களில் தங்கியிருங்கள்' என்ற அறிவுரை இறுதித்தூதரின் போதனைகளில் ஒன்றாகும்!*
➖➖➖📚🌟🌟📚➖➖➖
🎯 *« الزم بيتك »*
*يراها بعض الجهال عيبا، وهو لا يدري أنها أحد وصايا النّبي صلّى الله عليه وسلم في الفتن!*
[ atawhid.com ]
*'உங்கள் இல்லங்களில் நீங்கள் தங்கியிருங்கள்'* என்ற இவ்வறிவுரையை அறிவீனர்களில் சிலர் ஒரு குறையாகப் பார்க்கின்றார்கள். ஆனால், இது குழப்பங்கள் மற்றும் சோதனைகளின் போது கடைப்பிடித்து நடக்குமாறு போதித்த இறைத்தூதர் முஹம்மத் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்களின் போதனைகளில் ஒன்று என்பதை இவர்கள் அறியாமல் இருக்கின்றார்கள்”.
{ atawhid.com }
🍂➖➖➖➖➖➖➖➖🍂
*✍🏻தமிழில்✍🏻*
அஷ்ஷெய்க் N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா.