அல்லாமா இப்னுல் ஜவ்ஸீ (ரஹ்) அவர்கள் தனது மகன் அபுல் காசிம் என்பவருக்கு எழுதிய பிரபலமான வஸிய்யத்தில் வந்திருக்கிறது......
*“எனதருமை மகனே! இறையச்சம் எப்போது சரியாகி விடுமோ அப்போது அனைத்து நலவுகளையும் நீ கண்டு கொள்வாய். இறையச்சமுடைய ஒருவன், மனிதர்கள் பார்த்து பாராட்ட வேண்டும் என்பதற்காக வணக்க வழிபாடுகளைச் செய்யமாட்டான்; தனது மார்க்கத்துக்கு தொந்தரவு ஏற்படுத்துவதற்காகவும் அவன் செயல்படமாட்டான்; அல்லாஹ்வின் வரம்புகளைப் பேணி நடப்பவனை அல்லாஹ் பாதுகாக்கின்றான். நபி (ஸல்) அவர்கள் இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களுக்கு, 'அல்லாஹ்வின் கடமைகளை நீ பேணிப் பாதுகாத்துக் கடைப்பிடித்துக்கொள்; அவன் உன்னைப் பாதுகாப்பான்! அல்லாஹ்வின் கடமைகளை நீ பேணிப் பாதுகாத்துக் கடைப்பிடித்து வந்தால் உனக்கு முன்னால் அவனை நீ கண்டு கொள்வாய்!' என்று கூறினார்கள்.*
*என் அன்பு மகனே! நபி யூனுஸ் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் பாதுகாப்பு ஆயுதம் சிறந்ததாக இருந்தபோது அதன் மூலம் கடும் கஷ்டத்திலிருந்து அவர்கள் வெற்றி பெற்றார்கள் என்பதை நீ புரிந்து கொள்! இது குறித்து அல்லாஹ் கூறுகிறான்: '(நம்மைத்) துதிப்பவர்களில் அவர் இல்லாதிருந்திருப்பின், (மண்ணறையிலிருந்து உயிர் கொடுத்து) எழுப்பப்படும் நாள் வரை (மீன் ஆகிய) அதன் வயிற்றிலேயே அவர் தங்கியிருந்திருப்பார்!' (அல்குர்ஆன், 37:143,144)*
*பிர்அவ்னைப் பொறுத்தவரை, அவனின் பாதுகாப்பு ஆயுதம் நல்லதாக இல்லாதிருந்தபோது கஷ்டம் நிறைந்த அந்தக் கடும் ஆபத்தில் வைத்து அவனைப் பாதுகாக்கின்ற ஒன்றையும் அவனால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. அப்போது அவனுக்கு, 'இப்போதுதானா (நம்பிக்கை கொள்கிறாய்?) சற்று முன்னர் வரை நிச்சயமாக நீ மாறு செய்து, குழப்பம் விளைவிப்போரில் உள்ளவனாக இருந்தாய்' என்று கூறப்பட்டது.*(அல்குர்ஆன், 10:91)
*எனவே, உனக்கான நல்ல பாதுகாப்பு ஆயுதங்களை இறையச்சத்திலிருந்து நீ ஆக்கிக்கொள்; அப்போது அதன் தாக்கத்தை நீ பெற்றுக்கொள்வாய்!*
{ நூல்: 'லப்fததுல் கபிbத் இலா நஸீஹதில் வலத்' லிப்னில் ஜவ்ஸீ, பக்கம் : 33 }
❇➖➖➖➖➖➖➖➖❇
قال العلامة إبن الجوزي رحمه الله تعالى في وصيته المشهورة لابنه أبي القاسم:-
*[ يا بنيّ! ومتى صحت التقوى رأيت كل خير، والمتّقي لا يرائي الخلق ولا يتعرّض لما يؤذي دينه، ومن حفظ حدود الله حفظه الله، قال رسول الله صلى الله عليه وسلم لابن عباس رضي الله عنهما: « إحفظ الله يحفظك، إحفظ الله تجده أمامك »*
*واعلم يا بنيّ! أن يونس عليه السلام لمّا كانت ذخيرته خيرا نجا بها من الشّدّة. قال الله عزّ وجلّ: { فلولا أنه كان من المسبّحين للبث في بطنه إلى يوم يبعثون } «الصّافّات: ١٤٣،١٤٤»*
*وأما فرعون فلمّا لم تكن ذخيرته خيرا لم يجد في شدّته مخلّصا فقيل له: { آلآن وقد عصيت قبل وكنت من المفسدين } « يونس: ٩١ »*
*فاجعل لك ذخائر خير من التقوى تجد تأثيرها ]*
{ لفتة الكبد إلى نصيحة الولد لابن الجوزي، ص - ٣٣ }
❇➖➖➖➖➖➖➖➖❇
*✍தமிழில்✍*
அஷ்ஷெய்க்
N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா