ஒரு தடவை இமாம் அர்ரபீbஃ பின் ஹுஸைம் (ரஹ்) அவர்கள், இஸ்லாத்தின் ஆரம்ப விடயங்கள் போதிக்கப்படும் 'குர்ஆன் மத்ரசா' வில் கல்வி பயின்று அழுதுகொண்டிருந்த சிறுவர்கள் சிலருக்குப் பக்கத்தில் நடந்து சென்றார்கள். அப்போது அவர் அவர்களிடம், *“சிறுவர்களே! உங்களுக்கு என்ன நேர்ந்தது? (ஏன் அழுகின்றீர்கள்?)”*௭ன்று கேட்டார்கள். அதற்கவர்கள், *“இன்று வியாழக்கிழமை! (எமது) பதிவேட்டுப் புத்தகம் ஆசிரியரிடம் சமர்ப்பிக்கப்படும் நாள்; ஆதலால், அவர் எங்களுக்கு அடிப்பார் என்று நாம் பயப்படுகின்றோம்!”*என்றனர்.
இதைக்கேட்ட மாத்திரத்தில் அழுது விட்ட இமாம் அர்ரபீbஃ அவர்கள், *“அடக்கியாளும் சர்வ வல்லமையுடைய அல்லாஹ்விடம் (மனிதர்களின் நன்மை, தீமை உள்ளடங்கிய) பதிவேட்டுப் புத்தகம் சமர்ப்பித்துக் காட்டப்படும் அந்த நாள் எப்படி இருக்கும்?!”*என தன் ஆன்மாவை விழித்துச் சொல்லிக் கொண்டார்கள்.
{ நூல்: 'சியருஸ் ஸலப்f' லில் அஸ்பbஹானீ, பக்கம்: 257 }
عن الرّبيع بن خثيم رحمه الله تعالى:
*[ أنّه مرّ على صبيان فى الكتّاب يبكون، فقال: ما بالكم يا معشر الصبيان؟ »*
قالوا: *« إنّ هذا يوم الخميس، يوم عرض الكتاب على المعلّم فنخشى أن يضربنا »*
فبكى الرّبيع، وقال: *« يا نفس! كيف بيوم عرض الكتاب على الجبّار ]*
{ سير السّلف للأصبهاني ، ص - ٢٥٧ }
👇👇👇👇⚜⚜👇👇👇👇
❇👉🏿 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
*“ஒவ்வொரு வியாழக்கிழமையும் திங்கட்கிழமையும் (மனிதர்களின்) செயல்கள் (அல்லாஹ்விடம்) சமர்ப்பிக்கப்படுகின்றன. அன்றைய தினத்தில் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், தனக்கு எதையும் இணைவைக்காத ஒவ்வொரு மனிதருக்கும் மன்னிப்பு வழங்குகின்றான்; தமக்கும் தம் சகோதரருக்குமிடையே பகைமை உள்ள ஒரு மனிதரைத் தவிர. அப்போது, 'இவ்விருவரும் சமாதானமாகிக்கொள்ளும் வரை இவர்களை விட்டு வையுங்கள்! இவ்விருவரும் சமாதானமாகிக்கொள்ளும் வரை இவர்களை விட்டு வையுங்கள்!' என்று கூறப்படுகிறது”*
{ நூல்: முஸ்லிம், ஹதீஸ் இலக்கம் - 5014 }
🌻➖➖➖➖➖➖➖➖🌻
*✍தமிழில்✍*
அஷ்ஷெய்க்
N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா