கெட்டவனாக இருந்தாலும் அவனைத் திட்டி விடாதீர்கள்

 

         இஸ்லாமிய வரலாற்றில், 'மக்களுக்கு அநியாயம் செய்த கொடுங்கோல் ஆட்சியாளர்!' என அறியப்படுகின்ற _ஹஜ்ஜாஜ் பின் யூசுப்_ அவர்கள் மரணித்த பிறகு, இமாம் ஹஸன் அல்பஸரீ(ரஹ்) அவர்களது அவையில் இருந்த ஒருவர் அவரைத் திட்டி விட்டார். இதைச் செவிமடுத்த இமாமவர்கள், கோபமுற்றவராக அம்மனிதரை முன்னோக்கி வந்து:

"எனது சகோதரனின் மகனே! ஹஜ்ஜாஜ், தன் இரட்சகனிடம் சென்று விட்டார். அல்லாஹ்விடம் நீ செல்லும் வேளையில் ஹஜ்ஜாஜ் புரிந்த பெரும்பாவத்தை விட, உலகில் நீ புரிந்த  அற்பமான பாவமொன்றை மிகக் கடுமையானதாக உனக்கு நீயே கண்டு கொள்வாய்! (அந்நாளில்) உங்கள் இருவரில் ஒவ்வொருவருக்கும் மற்றவரை விட்டும் திசை திருப்பும் காரியம் உண்டு!

         ஹஜ்ஜாஜ் யாருக்கு அநியாயம் செய்தாரோ அவர்களுக்கு அல்லாஹ் அவரிடமிருந்து  பழிக்குப்பழியாக தண்டனையைக் கொடுப்பான்; அவ்வாறே, ஹஜ்ஜாஜுக்கு யார் அநியாயம் செய்தார்களோ அவர்களிடமிருந்தும் அவருக்கு அல்லாஹ் பழிக்குப்பழியாக தண்டனையைக் கொடுப்பான்! இதை நீ புரிந்து கொள் மகனே!

        இந்த நாளுக்குப் பிறகு எந்த ஒருவரையும் திட்டுகின்ற  வேலையில் உன்னை நீ ஈடுபடுத்திக் கொள்ளவே வேண்டாம்!!"

 _{ நூல்: 'ஹில்யதுல் அவ்லியா', 2/271 }_

🌿➖➖➖➖➖➖➖➖🌿

      قال الإمام الحسن البصري رحمه الله تعالى:-

وقد سمع أحد جلسائه يسب الحجاج بعد وفاته، فأقبل مغضبا وقال: "ياابن أخي! فقد مضى الحجاج إلى ربه، وإنك حين تقدم على الله ستجد إن أحقر ذنب إرتكبته فى الدنيا أشد على نفسك من أعظم ذنب اجترحه الحجاج، ولكل منكما شأن يغنيه.

        واعلم ياابن أخي! أن الله عز وجل سوف يقتص من الحجاج لمن ظلمهم، كما سيقتص للحجاج ممن ظلموه، فلا تشغلن نفسك بعد اليوم بسب أحد!"

 _{ حلية الأولياء، ٢/٢٧١ }_

🌿➖➖➖➖➖➖➖➖🌿

          ✍🌹தமிழில்🌹✍

              அஷ்ஷெய்க்

N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா

أحدث أقدم