மிகச்சிறந்த முதலீட்டுக்குச் சொந்தக்காரர்


           இமாம் முஹம்மத்  பஷீர் அல்இப்ராஹீமீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

         *“கொள்கைகளைச் சீர்படுத்துதல், வணக்க வழிபாடுகளைச் சீர்செய்தல், நற்பண்புகளைச் சரி செய்தல், நபிகள் நாயகம் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் செய்து காட்டிய  ஒவ்வொன்றிலும், அவர்கள் விட்டுவிட்ட  ஒவ்வொன்றிலும் அவர்களின் வழிமுறையைப் பின்பற்றுதல், சுன்னாவைப் பேணிப் பாதுகாத்து நடப்பதோடு அதற்கு உதவியாக இருத்தல், சுன்னாவுக்கு முரணாக இருக்கும் நூதன அனுஷ்டானங்களான 'பித்அத்'களைத் தூக்கி எறிதல், பின்னர் இதற்கெல்லாம் நேரம்போக மிஞ்சியிருக்கும் மேலதிக நேரத்தை பயனுள்ள உலகியல் பணிகளுக்காகப் பயன்படுத்துதல்”* ஆகிய இவைதான் (அல்லாஹ்வை விசுவாசங்கொண்ட ஒருவர்) உலகத்தில்  செய்ய வேண்டிய (சிறந்த) முதலீடாகும். 

           ஏனெனில்,  விசுவாசங்கொண்டவராக இருக்கும் தனது அடியாரொருவர் கேவலமானவராகவோ, இழிவானவராகவோ இருப்பதை அல்லாஹ் திருப்திகொள்ளவோ, விரும்பவோமாட்டான். மாறாக, சரியான விசுவாசத்திற்குப் பின்னர் அவர் கண்ணியமானவராகவும் சிறப்புக்குரியவராகவும் இருந்து தனது மார்க்கத்திற்கும் உலகுக்கும் அவர் பணி செய்ய வேண்டும்; அத்தோடு, நன்மையான விடயத்தில் தனது சகோதரர்களுக்கு உதவியாளராக இருந்து அவர்களுக்கு உபதேசம் செய்பவராக அவர்  இருக்க வேண்டும்; மேலும், அவர்களில் பலவீனமானவரின் கரம்பிடித்து உதவுபவராக அவர் இருப்பதுடன் அவர்களுக்கு தனது கையாலும், தனது நாவாலும், தனது பட்டம், பதவி மற்றும் சொத்து செல்வங்களாலும் உபகாரம் செய்பவராகவும் அவர் இருக்க வேண்டும் என்றே அல்லாஹ் விரும்புகிறான்”.

{ நூல்: 'ஆதாருல் இமாம் முஹம்மத் அல்பஷீர் அல்இப்ராஹீமீ ', 01/406 }


قال الإمام محمد البشير الإبراهيمي رحمه الله تعالى:-

          *« أمّا رأس المال في الدين فهو تصحيح العقائد، وتصحيح العبادات، وتصحيح الأخلاق الصالحة، واتّباع سنّة نبيّنا صلّى الله عليه وسلم في كلّ ما فعل وترك، والمحافظة عليها والإنتصار لها، ونبذ البدع المخالفة لها، ثمّ صرف الوقت الزائد على ذلك في الأعمال النافعة في الدّنيا.*

        *فإنّ الله لايرضى لعبده المؤمن أن يكون ذليلا حقيرا، وإنّما يرضى له بعد الإيمان الصحيح أن يكون عزيزا شريفا عاملا لدينه ودنياه، معينا لإخوانه على الخير، ناصحا لهم، آخذا بيد ضعيفهم، محسنا لهم بيده ولسانه وبجاهه وماله »*.

{ المصدر: آثار الإمام محمد البشير الإبراهيمي، ١/٤٠٦ }

🌠➖➖➖➖➖➖➖➖🌠

               *✍தமிழில்✍*

                  அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


أحدث أقدم