மகிழ்ச்சியான குடும்ப வாழ்வு; அத்திவாரம் நல்ல மனைவிதான்


      கல்வியியல்  ஆலோசகர் சகோதரி *ஈமான் அல்வகீல் (M.A.)* கூறுகின்றார்கள்:-

          “நல்ல மனைவி மகிழ்ச்சியான குடும்ப வாழ்வின் அத்திவாரமாவாள். மகிழ்ச்சியின் திறவுகோல் நீதான் பெண்ணே! அல்லாஹ்வின் அச்சத்திற்குப் பின்னர் உன் கணவனின் இலக்கும், நோக்கும், நாடப்படுகின்ற பயனும் உன்னைத் தவிர அவருக்கு வேறெதுவுமில்லை. உன்னை அவர் பார்த்துக்கொண்டிருப்பதுதான் அவருடைய மகிழ்ச்சியாகும்; உன் மூலம்தான் ஷைத்தானிலிருந்து அவர் பாதுகாப்புப் பெறுகிறார்; இச்சையின் தீங்குகளையும் தடுத்துக்கொள்கிறார்; பார்வையைத் தாழ்த்தி, தன் வெட்கஸ்தலத்தையும் அவர் பாதுகாத்துக்கொண்டு, மனதுக்கு  நிம்மதியையும் பெற்றுக்கொள்கின்றார்.

          நல்ல மனைவி வெற்றிக்கான பாதுகாப்புக் கருவியாவாள். மனிதர்களின் மகிழ்ச்சிக்காகவும், அவர்களை விட்டும் தீங்கையும் கெடுதியையும் நீக்குவதற்காகவுமே இஸ்லாமிய மார்க்கமும் வந்திருக்கிறது. வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் இது இருக்கிறது. குடும்ப மகிழ்ச்சியும், சந்தோசமும் அந்தத் துறைகளில் ஒன்றாகும்.   அன்பு, இரக்கம், மனநிம்மதி ஆகிய இவற்றை குடும்ப  மகிழ்ச்சிக்கான அடிப்படைகளாக அல்லாஹ்வே அமைத்துத் தந்துவிட்டான். அன்பு, மனநிம்மதி, ஒருவருக்கொருவர் கொள்ளும் இரக்கம் ஆகியவை இல்லாமல் மகிழ்ச்சி என்பது  இருக்கவே முடியாது. அல்லாஹ் கூறுகிறான்: *“மனைவிமார்களிடம் நீங்கள் அமைதி பெறுவதற்காக உங்களிலிருந்தே உங்களுக்காக அவர்களை அவன் படைத்திருப்பதும், உங்களுக்கிடையே அன்பையும் இரக்கத்தையும் அவன் ஏற்படுத்தியிருப்பதும் அவனது அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நிச்சயமாக இதில் சிந்திக்கும் சமூகத்திற்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன”*. (அல்குர்ஆன், 30:21)

         நபிகள் நாயகம் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் கூறியதாக சஃத் பின் அபீ வக்காஸ் (ரழியழ்ழாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்: *“நான்கு விடயங்கள் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் நற்பாக்கியங்களாகும்:*

*01) நல்ல மனைவி.*

*02) (தேவைக்கேற்ற அளவுகொண்ட) விசாலமான வீடு.*

*03) நல்ல அண்டை வீட்டார்.*

*04) நிம்மதியான நல்ல வாகனம்.*

( நூல்: 'ஸஹீஹ் இப்னு ஹிப்பான்' - 1232, 'அஸ்ஸில்ஸிலா அஸ்ஸஹீஹா' லில்அல்பானீ - 282 )

          மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் கூறினார்கள்: *“இவ்வுலகம் (முழுவதும்) பயனளிக்கும் செல்வங்களே; பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே!”*

( நூல்: 'ஸஹீஹ் முஸ்லிம் - 2911 )

[ 'அல்fபுர்கான்' அறபு சஞ்சிகை, இதழ் - 782 , திகதி 07/07/2014, 'குடும்ப மகிழ்ச்சி' எனும் தலைப்பு ]


           

قالت الأخت *إيمان الوكيل* ( إستشارية تربوية - ماجستير في الدراسات التربوية ) :-

            { المرأة الصالحة أساس السعادة الزوجية. أنت مفتاح السعادة، وليس لزوجك بعد تقوى الله عزّ وجلّ من مطلب وغاية إلا أنت؛ سروره أن ينظر إليك، بك يتحصن من الشيطان، ويدفع غوائل الشهوة، ويغض البصر، ويحفظ الفرج، ويروح النفس. 

            فالمرأة الصالحة طوق للنجاة؛ والدين جاء لسعادة البشر ولانتفاء الشّرّ عنهم والضرر. وذلك في كلّ جوانب الحياة. ومن تلك الجوانب سعادة الأسرة فقد بناها على مقومات السعادة وهي المودّة والرحمة والسكن؛ فلا سعادة بلا مودّة وسكينة وتراحم. قال الله تعالى: *« ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لّتسكنوا إليها وجعل بينكم مودّة وّرحمة »* (سورة الروم، الآية - ٢١ ). 

            عن سعد بن أبي وقاص رضي الله عنه أن رسول الله صلّى الله عليه وسلم قال: *«أربع من السعادة: المرأة الصالحة، والمسكن الواسع، والجار الصالح،والمركب الهنيء»* (رواه ابن حبان في صحيحه - ١٢٣٢ ، وصححه الألباني في السلسلة الصحيحة - ٢٨٢)

           وقال صلّى الله عليه وسلم: *« الدّنيا متاع وخير متاع الدّنيا المرأة الصالحة »* ( رواه مسلم - ٢٩١١ )

[ مجلة الفرقان، العدد : ٧٨٢ ، التاريخ ٧/٧/٢٠١٤ ، الموضوع : "السعادة الزوجية" ]

💐➖➖➖➖➖➖➖➖💐

               *✍தமிழில்✍*

                  அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


أحدث أقدم