நல்லவர்கள் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர்


          ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- 

           *“அல்லாஹ்வை அஞ்சி நடக்கும் பயபக்தியாளர்களிடமிருந்தும், இவர்கள் போன்ற ஏனையவர்களிடமிருந்தும் பாவம் ஏற்படமாட்டாது என்பது நிபந்தனை கிடையாது. தவறிலிருந்தும்,  பாவங்களிலிருந்தும் இவர்கள்  பாதுகாக்கப்பட்டவர்களும் அல்லர்! இவர்களிடமிருந்து தவறே வராது என்றவாறு இவ்விடயம் இருக்குமாக இருப்பின், இறைபக்தியாளராக சமூகத்தில் எவருமே இருக்க முடியாது போய்விடும். மாறாக, எவர் தனது பாவங்களிலிருந்து விடுபட்டு மன்னிப்புக்கோரி திருந்திவிட்டாரோ அவர் இறைபக்தியாளர்களுக்குள் வந்துவிடுவார்;  தனது பாவங்களை அழிக்கும் பரிகாரத்தைச் செய்தவரும் இறைபக்தியாளர்களில் சேர்ந்து விடுவார்!”*

{ நூல்: 'மின்ஹாஜுஸ் ஸுன்னா', 07/82 }


          قال شيخ الإسلام إبن تيمية رحمه الله تعالى:-

            *{ ليس من شرط المتقين ونحوهم أن لا يقع منهم ذنب، ولا أن يكونوا معصومين من الخطأ والذنوب! فإن هذا لو كان كذلك لم يكن في الأمة متّق. بل من تاب من ذنوبه دخل في المتقين؛ ومن فعل ما يكفر سيئاته دخل في المتقين! }*

[ منهاج السنة، ٧/٨٢ ]

🏵🏵👇👇👇👇👇👇🏵🏵

*🔅“எவர்கள் பாவங்களைச் செய்துவிட்டு, அதன் பின் மன்னிப்புக்கோரி நம்பிக்கையும் கொள்கிறார்களோ அவர்களை நிச்சயமாக உமது இரட்சகன் அதன்பின் மிக்க மன்னிப்பவன்; (அவர்களுடன்) நிகரற்ற அன்புடையவன்”* (அல்குர்ஆன், 07: 153)

*🔅“எனினும், யார் பாவமன்னிப்புக்கோரி, நம்பிக்கை கொண்டு, நற்செயலும் புரிகின்றார்களோ அவர்களுக்கு, அவர்களின் தீமைகளை நன்மைகளாக அல்லாஹ் மாற்றுவான். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும் நிகரற்ற அன்புடையவனாகவும் இருக்கின்றான் ”* (அல்குர்ஆன், 25 : 70)

🏵➖➖➖➖➖➖➖➖🏵

               *✍தமிழில்✍*

                    அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


أحدث أقدم