வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவுவது சுன்னாவாகும்


         அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

          *“கணவன் தன்  வீட்டிலே இருக்கின்றபோது உதாரணமாக தேனீர் தயார்படுத்திக்கொள்ளவோ, உணவு சமைக்கவோ தனக்குத் தெரியுமாக இருந்தால் அதை அவரே சுயமாகச்  செய்துகொள்வதும், கழுவுவதற்குத் தேவைப்படுகின்றவற்றை அவர் கழுவிக்கொடுப்பதும் நபிவழியாகும். இவையெல்லாமே சுன்னாவில் உள்ளதுதான்! (கணவராக இருக்கும்) நீர் இதைச் செய்கின்றபோது அல்லாஹ்வுக்காகப் பணிந்து நடந்து, ரசூல் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்களைப் பின்பற்றியதன் மூலம் சுன்னாவைக் கடைப்பிடித்ததற்கான கூலியை நீர் கொடுக்கப்படுகின்றீர். இது, உமக்கும் உமது மனைவிக்குமிடையில் நிச்சயம் அன்பை உண்டாக்கும்.*

          *(ஒன்றோ, அல்லது  இரண்டோ, அல்லது மூன்றோ, அல்லது நான்கோ மனைவிமார்கள் உமக்கு இருந்து) அவர்களின் வேலைகளில் அவர்களுக்கு நீர் உதவி செய்கின்றீர் என்று அவர்கள் உணர்ந்துவிட்டால் உம்மை அவர்கள் நேசிப்பார்கள்; உமது பெறுமதியும் அவர்களிடம் அதிகரிக்கும்; இதனால், பெரியதோர் நலவு இதில் இருந்துகொண்டிருக்கும்!”*

{ நூல்: 'ஷர்ஹு ரியாழிஸ் ஸாலிஹீன்',03/529 ]


           قال العلاّمة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:-

          *« الإنسان إذا كان في بيته فمن السّنّة أن يصنع الشّاي مثلا بنفسه ويطبخ إذا كان يعرف، ويغسل ما يحتاج إلى غسله. كلّ هذا من السّنّة! أنت إذا فعلت ذلك تثاب عليه ثواب سنّة إقتداء بالرّسول عليه الصّلاة والسّلام وتواضعا للّه عزّ وجلّ. ولأنّ هذا يوجد المحبّة بينك وبين أهلك (زوجتك).*

          *إذا شعر أهلك أنّك تساعدهم في مهنتهم أحبّوك، وازدادت قيمتك عندهم، فيكون في هذا مصلحة كبيرة »*

[ شرح رياض الصالحين، ٣/٥٢٩ ]

💢➖➖➖➖➖➖➖➖💢

               *✍தமிழில்✍*

                  அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


Previous Post Next Post