முஃமினைப் பலப்படுத்தும் முத்தான உபதேசம்


            இமாம் சுfப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

            அலீ இப்னுல் ஹஸன் அஸ்ஸுலமீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் எனக்குச் செய்த உபதேசத்தில் இருந்த விடயங்கள் வருமாறு:

👉🏿 குறைவாகப் பேசுவதை நீ கடைப்பிடித்துக்கொள்; அப்போது உன் உள்ளம் மென்மையடையும்!

👉🏿 (வீண் பேச்சுக்களைப் பேசாது) அதிகம் மெளனமாக இருப்பதை நீ கடைப்பிடித்துக்கொள்; அப்போது, பேணுதலை நீ பெற்றுக்கொள்வாய்!

👉🏿 உலகத்தின் மேல் பேராசை கொள்பவனாக நீ இருக்கவே வேண்டாம்.

👉🏿 பொறாமைக்காரனாகவும் நீ இருக்காதே! அப்போது நீ விரைவாகப் புரிந்துகொள்பவனாக இருப்பாய்.

👉🏿 அதிகம் திட்டித் தீர்ப்பவனாகவும் நீ இருக்காதே! அப்போதுதான், மக்கள் நாவுகளிலிருந்து நீ தப்புவாய்.

👉🏿 இரக்கமுள்ளவனாக நீ இருந்துகொள்! அப்போது நீ, மக்களிடம்  நேசிக்கப்படுபவனாக இருப்பாய்.

👉🏿 வாழ்வாதாரத்தில் உனக்கெனப் பிரித்துத் தரப்பட்டதைக்கொண்டு திருப்திகொள்! அப்போது நீ, செல்வந்தனாக இருப்பாய்.

👉🏿 அல்லாஹ்வின் மீதே உறுதியாக நம்பிக்கை கொண்டு பொறுப்பை நீ சாட்டு! பலசாலியாக நீ இருப்பாய்.

👉🏿 (உலகை நேசிக்கும்)  உலகவாதிகளுடன், அவர்களது உலக விவகாரங்கள் குறித்து நீ முரண்பட்டுக்கொள்ளாதே! அப்போது,  அல்லாஹ்வும் உன்னை நேசிப்பான்; பூமியில் உள்ளவர்களும் உன்னை நேசிப்பார்கள்.

👉🏿 பணிவுள்ளவனாக நீ இரு! அப்போது, நல்ல காரியங்கள் எல்லாமே பூரணத்துவம் பெறும்.

👉🏿 ஆரோக்கியத்தின் மூலம் நீ பணியாற்று! உனக்கு மேலால் இருந்து உன்னிடம் ஆரோக்கியம் வரும்.

{ நூல்: 'ஹில்யதுல் அவ்லியா', 08/83 }


           قال الإمام سفيان الثوري رحمه الله تعالى فيما أوصى به علي بن الحسن السّلمي:-

🔅عليك بقلّة الكلام يلين قلبك!

🔅وعليك بطول الصّمت تملك الورع!

🔅ولا تكوننّ حريصا على الدّنيا!

🔅ولا تكن حاسدا تكن سريع الفهم!

🔅ولا تكن طعّانا تنج من ألسن النّاس!

🔅وكن رحيما تكن محببا إلى النّاس

🔅وارض بما قسّم لك من الرّزق تكن غنيّا!

🔅وتوكّل على الله تكن قويّا!

🔅ولا تنازع أهل الدّنيا في دنياهم يحبّك الله، ويحبّك أهل الأرض!

🔅وكن متواضعا تستكمل أعمال البرّ!

🔅إعمل بالعافية تأتك العافية من فوقك!

[ المصدر: حلية الأولياء، ٨/٨٢ ]

📚➖➖➖➖➖➖➖➖📚

               *✍தமிழில்✍*

                  அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


Previous Post Next Post