அல்லாமா ஸாலிஹ் பfவ்ஸான் அல்பfவ்ஸான் (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-
*“இஸ்லாத்தின் தாராளத் தன்மையை மோசமாகப் பயன்படுத்த விரும்பும் சிலர் மனிதர்களில் இருக்கவே செய்கிறார்கள்! இதனால், 'மார்க்கம் எளிதானது!' எனக் கூறிக்கொண்டு தடுக்கப்பட்டவற்றைச் செய்வதையும், கடமைகளை விட்டு விடுவதையும் தனக்குத்தானே ஒருவன் ஆகுமாக்கிக்கொள்கிறான். ஆம்; 'மார்க்கம் எளிதானது!' என்ற இவ்வார்த்தைப் பிரயோகம் உண்மையானதே. என்றாலும், இதன்மூலம் (இவர்களால்) நாடப்படுகின்ற கருத்துத்தான் தவறானதாகும்.*
*மார்க்கத்தின் இலகுத் தன்மையும், அதன் தாராளத் தன்மையும் என்பது அல்லாஹ்வின் கடமைகளிலிருந்து ஒதுங்கி ஓடுதல் என்பதோ, அவன் தடுத்தவைகளைச் செய்தல் என்பதோ அதனுடைய அர்த்தம் கிடையாது. மாறாக, கஷ்டமான வணக்க வழிபாட்டிலிருந்து இலகுவான வணக்கத்திற்கு ஒரு அடியானை நகர்த்திச் செல்லல் என்பதுதான் அதன் பொருளாகும். பூரணமான அமைப்பில் தொழ வேண்டிய தொழுகையை சுருக்கித் தொழும் நிலைக்கு பிரயாணியை நகர்த்திச் செல்லல், பிரயாண நாட்களில் விடுபட்ட ரமழான் நோன்பை வேறு நாட்களில் நோற்பதற்கு அவரை நகர்த்திச் செல்லல், தண்ணீரைக் கொண்டு உழூ செய்வதிலிருந்து மண்ணைக்கொண்டு தயம்மும் செய்வதற்குக் கொண்டு செல்லல் என்பவற்றை உதாரணங்களாகக் குறிப்பிடலாம்”*.
{ நூல்: 'அல்ஹுதபுbல் மிம்பரிய்யா', 01/14 }
🏵➖➖➖➖➖➖➖➖🏵
قال العلّامة صالح فوزان الفوزان حفظه الله تعالى:-
*[ من الناس من يريد أن يستغل سماحة الإسلام إستغلالا سيّئا، فيبيح لنفسه فعل المحرمات وترك الواجبات ويقول: 'الدّين يسر'. نعم، الدّين يسر؛ لكنّها كلمة حق أريد بها باطل!*
*فليس معنى يسرية الدّين وسماحته التّفلّت من واجباته وارتكاب محرماته، وإنما: الإنتقال بالعبد من العبادة الشّاقّة إلى العبادة السهلة كالإنتقال بالمسافر من الصلاة التّامّة إلى الصلاة المقصورة والإنتقال به من الصيام في أيام السفر إلى الصيام في أيام أخر والإنتقال من الطهارة بالماء إلى الطهارة بالتراب ]*
{ الخطب المنبرية، ١/١٤ }
🏵➖➖➖➖➖➖➖➖🏵
*✍தமிழில்✍*
அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா