பயனுள்ள கல்விக்காக உள்ளத்தை சுத்தப்படுத்திக்கொள்ளல் வேண்டும்!


 இமாம் இப்னு ஜமாஆ (ரஹ்)கூறுகின்றார்கள்:- 

           *“அறிவைப் பெற்று அதைப் பாதுகாத்துக் கொள்ள வசதியாக இருப்பதற்காகவும், அதன் கருத்துக்களின் நுணுக்கங்களை, அதன் மறைமுக யதார்த்தங்களை அறிந்து கொள்வதற்காகவும் மோஷடி, அழுக்கு, குரோதம், பொறாமை, மோசமான கொள்கை, தீய குணம் போன்ற அனைத்திலிருந்தும் உள்ளத்தை சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டியது கல்வித் தேடலில் ஈடுபடுபவருக்குக் கட்டாயமானதாகும்.*

          *பயிர்ச் செய்கைக்காக பூமி தூய்மைப்படுத்தப்பட்டால் எப்படி அதில் பயிர் வளர்ந்து நல்ல வளர்ச்சியை அது  அடையுமோ அதேபோல், கல்விக்காக உள்ளம் தூய்மைப்படுத்தப்படுகின்றபோது அக்கல்வியின்  அருள்வளம் வெளிப்பட்டு அது வளர்ச்சியையும் அடையும்... !”*

          ஹதீஸிலும் இப்படி வந்துள்ளது: *“.... அறிந்து கொள்ளுங்கள்! உடலில் ஒரு சதைத் துண்டு இருக்கிறது. அது சீர்பெற்று விட்டால் உடல் முழுவதும் சீர்பெற்று விடும்! அது சீர்குலைந்து விட்டால் முழு உடலும் சீர்குலைந்து விடும். புரிந்து கொள்ளுங்கள்! அதுதான் உள்ளமாகும்!”.*

          சஹ்ல் என்பவர் கூறுகின்றார்: *“அல்லாஹ் வெறுக்கும் ஒன்று இருக்கின்ற உள்ளத்தில் (அவன் காட்டும்) ஒளி போய் நுழைந்து கொள்வது அவ்வுள்ளத்திற்கு ஹராமாகும்!”* .

{ நூல்: 'தத்கிரதுஸ் ஸாமிஃ வல்முதகல்லிம்', பக்கம்: 67 }

🕌➖➖➖➖➖➖➖➖🕌


           قال الإمام إبن جماعة رحمه الله تعالى:- 

*[ على طالب العلم أن يطهّر قلبه من كل غشّ ودنس وغلّ وحسد، وسوء عقيدة وخلق، ليصلح بذلك لقبول العلم وحفظه، والإطلاع على دقائق معانيه وحقائق غوامضه.*

            *وإذا طيّب القلب للعلم ظهرت بركته ونما، كالأرض إذا طيّبت للزرع نما زرعها وزكا. وفى الحديث: " ألا، وإن فى الجسد مضغة، إذا صلحت صلح الجسد كله، وإذا فسدت فسد الجسد كله: ألا وهي القلب "*.

            وقال سهل: *حرام على قلب أن يدخله النور وفيه شيء ممّا يكره الله عزّ وجلّ ]*.

{ تذكرة السامع والمتكلم ،  ص - ٦٧ }

🕌➖➖➖➖➖➖➖➖🕌

               *✍தமிழில்✍*

                 அஷ்ஷெய்க்

N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


أحدث أقدم