முஅத்தின் ஸாலிஹ்' மூதேவியாகிப்போன வரலாறு


        அல்லாமா இப்னுல் ஜவ்ஸீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

         “ஈராக்கின் பக்தாத் நகரத்தில் வாழ்ந்த ஒரு மனிதர் குறித்த செய்தி எனக்குக் கிடைத்தது. 'முஅத்தின் ஸாலிஹ்' ௭ன்று அவர் அழைக்கப்படுகின்றார். நாற்பது ஆண்டுகளாக  அதான் சொல்லிக்கொண்டிருந்த அவர், ஸாலிஹான நல்ல மனிதர் என்றும் அறியப்படுகின்றார். 

            ஒருநாள், பாங்கு சொல்வதற்காக 'மனாரா'வுக்கு ஏறிய அவர்,  கிறிஸ்தவொருவரின் மகளைக் கண்டுவிட்டார். அந்தக் கிறிஸ்தவரின் வீடு பள்ளிவாசலுக்குப் பக்கத்திலேயே இருந்தது. உடனே அப்பெண் மீது காம மோகம் கொண்டு, அவள் வீட்டுக் கதவைப் போய் தட்டினார். உள்ளே இருந்து 'யார் நீங்கள்!' என்று அவள் கேட்க, 'நான் முஅத்தின் ஸாலிஹ்!' என்று அவர் கூறினார். அவருக்காக அவள் கதவைத் திறந்ததும் உள்ளே சென்ற அவர், அவளைத் தன் பக்கம் இழுத்து இறுக அணைத்துக்கொண்டார். அப்போது அவள், “நீங்களெல்லாம் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள்; அப்படியிருக்க ஏன் இந்த நம்பிக்கைத் துரோகம்?” என்று கேட்டாள். “என் ஆசைக்கு நீ இணங்க வேண்டும்; இல்லாவிட்டால், உன்னைக் கொன்று விடுவேன்!” என்றார் அவர். “இல்லை; அப்படியெல்லாம் நீங்கள் செய்துவிட வேண்டாம். உங்கள் மார்க்கத்தை விட்டுவிட்டு மதம் மாறிவிடுங்கள்!” என்று அவள் கூறியதும் உடனே அவர், “நான் இஸ்லாத்திலிருந்தும், நபியவர்கள் கொண்டு வந்த போதனைகளிலிருந்தும் நீங்கி விட்டேன்” என்று  கூறினார். அதற்கு அவள், “உங்கள் குறிக்கோளை நிறைவேற்றத்தான் இதை நீங்கள் கூறியுள்ளீர்கள்; பின்னர் உங்கள் மார்க்கத்திற்கே திரும்பிச் சென்றுவிடுவீர்கள்! (நீங்கள் உண்மையாளராக இருந்தால், இந்த) பன்றி இறைச்சியைச் சாப்பிடுங்கள்!” என்றதும் அவர் சாப்பிட்டார்; “சாராயத்தைக் குடியுங்கள்!” என்றதும் அவர் குடித்தார். போதை அவரில் ஊடுருவியபோது அவளிடம் அவர் நெருங்கினார். அப்போது அவள்  வீட்டிற்குள் சென்று கதவைச் சாத்திக்கொண்டு, “வீட்டின் மேல் மாடிக்கு ஏறிக்கொள்ளுங்கள்; என் தந்தை வந்ததும் என்னை உங்களுக்குத் திருமணம் முடித்துத் தருவார்” என்று கூறினாள். உடனே அவர் மேல் மாடிக்கு ஏறினார்; கீழே விழுந்தார்; மரணித்துப் போனார்.

          வெளியே வந்த அவள் ஆடையொன்றுக்குள் அவரைச் சுற்றினாள். தன் தந்தை வந்ததும் நடந்த சம்பவத்தை அவருக்குத் தெரிவித்தாள். இரவு நேரத்தில் அவர் உடலை வெளியே கொண்டு வந்த அவள் தந்தை, அதைத் தெருவில் வீசிவிட்டார். குப்பைத் தொட்டியில் வீசப்பட்டுக் கிடந்த அவரின் செய்தி உடனே மக்களுக்குத் தெரிய வந்தது.

{ நூல்: 'தம்முல் ஹவா' லிப்னில் ஜவ்ஸீ, பக்கம்:409 }



       قال العلّامة إبن الجوزي رحمه الله تعالى: 

        { بلغني عن رجل كان ببغداد يقال له: صالح المؤذّن، أذّن أربعين سنة، وكان يعرف بالصلاح. أنه صعد يوما إلى المنارة ليؤذّن، فرأى بنت رجل نصرانيّ كان بيته إلى جانب المسجد، فافتتن بها.

      فجاء فطرق الباب، فقالت: من؟ قال: *أنا صالح المؤذّن*، ففتحت له، فلمّا دخل ضمّها إليه. فقالت: أنتم أصحاب الأمانات فما هذه الخيانة؟ فقال: إن وافقتني على ما أريد وإلّا قتلتك! فقالت: لا؛ إلّا أن تترك دينك. فقال: أنا بريئ من الإسلام وممّا جاء به محمد صلّى الله عليه وسلم، ثم دنا إليها. فقالت: إنّما قلت هذا لتقضي غرضك ثم تعود إلى دينك! فكل من لحم الخنزير، فأكل؛ قالت: فاشرب الخمر، فشرب؛ فلمّا دبّ الشراب فيه دنا إليها. فدخلت بيتا وأغلقت الباب، وقالت: اصعد إلى السطح حتى إذا جاء أبي زوّجني منك، فصعد فسقط فمات.

          فخرجت فلفّته في ثوب، فجاء أبوها فقصّت عليه القصّة، فأخرجه في الليل فرماه في السّكّة، فظهر حديثه، فرمي في مزبلة }.

[ المصدر: 'ذمّ الهوى' لابن الجوزي ، ص - ٤٠٩ ]

💢➖➖➖➖➖➖➖➖💢

               *✍தமிழில்✍*

                  அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


أحدث أقدم