உலக மோகத்தில் ஊறித் திளைத்தவனுக்கு உபதேசம் பயனளிக்காது


            இமாம் மாலிக் பின் தீனார் (ரஹ்) கூறுகின்றார்கள்:-

           *“உடல் நோயுற்று விட்டால் அதில் உணவோ, குடிபானமோ, தூக்கமோ, நிம்மதியோ எதுவித பயனையும் அளிக்காது!. இவ்வாறே, உள்ளத்தில் உலக மோகம் குடிகொண்டு விட்டால் அதில் உபதேசம் பயனளிக்காது!”*

{ நூல்: 'ஹில்யதுல் அவ்லியா', 02/363 }


           قال الإمام مالك بن دينار رحمه الله تعالى:-

         *[ إن البدن إذا سقم لم ينجع فيه طعام ولا شراب ولا نوم ولا راحة! وكذلك القلب إذا علقه حبّ الدنيا لم تنجع فيه الموعظة! ]*

{ حلية الأولياء ، ٢/٣٦٣ }

➖➖👇👇👇👇👇👇➖➖

❇👉🏿 உலக மோகத்தில் ஊறித்திளைத்திருந்த கோடீஸ்வரன் காரூனுக்கு, நன்மக்கள் செய்த உபதேசம் பயனளிக்காமல் போனதை அல்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகின்றது:

            “நிச்சயமாக காரூன், மூசாவின் சமூகத்தைச் சார்ந்தவனாக இருந்தான். அவன் அவர்கள் மீது வரம்பு மீறினான். மேலும், நாம் அவனுக்குப் பல பொக்கிஷங்களை வழங்கியிருந்தோம். நிச்சயமாக அவற்றின் திறவுகோல்கள் பலமான ஒரு குழுவினருக்கும் (சுமப்பதற்குப்) பழுவாக இருந்தன. *'நீ ஆணவம் கொள்ளாதே! நிச்சயமாக அல்லாஹ் ஆணவம் கொள்பவர்களை நேசிக்கமாட்டான்' என்று அவனது சமூகம் அவனுக்குக் கூறியதை (நபியே நீர் எண்ணிப்பார்ப்பீராக!)*

            *மேலும், 'அல்லாஹ் உனக்கு வழங்கியவற்றில் நீ மறுமை வீட்டைத் தேடிக்கொள்! இன்னும் இவ்வுலகில் உனது பங்கை நீ மறந்து விடவும் வேண்டாம். அல்லாஹ் உனக்கு உபகாரம் செய்தது போன்று நீயும் உபகாரம் செய்வாயாக! மேலும், நீ பூமியில் குழப்பத்தை நாடாதே! நிச்சயமாக அல்லாஹ் குழப்பம் விளைவிப்போரை நேசிக்கமாட்டான்' (என்றும் கூறினர்.)*

           *அ(தற்க)வன், 'இது எனக்கு வழங்கப்பட்டதெல்லாம் என்னிடமுள்ள அறிவின் மூலமேயாகும்!' எனக் கூறினான்”*. (அல்குர்ஆன், 28: 76 -78)

🍀➖➖➖➖➖➖➖➖🍀

               *✍தமிழில்✍*

                  அஷ்ஷெய்க்

*N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


Previous Post Next Post