பூ' எனப் பொருள்படும் 'زهرة' என்ற வார்த்தையை, உலக இன்பத்திற்கு ஏன் அல்லாஹ் பயன்படுத்துகிறான்?


        *“(நபியே!) இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரமாக அவர்களில் பல தரப்பினருக்கு, அதில் அவர்களைச் சோதிப்பதற்காக நாம் வழங்கிய வசதிகளின்பால் உமது கண்கள் இரண்டையும் நீர் செலுத்தாதீர்!”* (அல்குர்ஆன், 20:131) என்ற இந்த வசனத்திற்கு அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) அவர்கள் பின்வருமாறு விளக்கமளிக்கின்றார்கள்:

            *“உலகவாதிகளையும், அவர்களுக்கு வசதிகளாக அளிக்கப்பட்டுள்ள வாகனங்கள், ஆடைகள், வீடுகள் போன்ற இன்னோரன்ன இன்பங்களையும் நீங்கள் பார்க்காதீர்கள். இவையனைத்தும் உலகத்தின் அலங்காரங்களே!.*

         *அலங்காரம்* என்ற கருத்தில் மேற்படி  வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடும் *زهرة*  எனும் வார்த்தைக்கு *'பூ'* என்றும் அரபு மொழியில் பொருள் சொல்லப்படும். வாடி வதங்கி, காய்ந்து, காணாமல் அழிந்து போகும் நிலையே (அலங்காரமாகக் காட்சி தரும்) பூவினுடைய இறுதி நிலையாகும். மரத்தின் இலைக்கூறுகளில் மிகக்கெதியாகவே வாடி வதங்கிக் காணாமல் அழிந்துபோய் விடக்கூடியது இந்தப் பூவுதான்!. செழிப்பு, கவர்ச்சி, அழகு, வாசமுடையதாக இருப்பின் வாசம் ஆகியவற்றில் இது அழகுமிக்க பூதான்!. இருந்தாலும், இது மிகச் சீக்கிரமாகவே வாடிவிடக்கூடியது.          உலகமும்

இவ்வாறுதான்; மிகச் சீக்கிரமாகவே வாடிவிடக்கூடிய ஓர் பூவாகும்!

         *(நற்கூலியிலும், இன்பத்திலும்) எமக்கான பங்கை நிறைவாக ஆக்கித்தரும்படி   அல்லாஹ்விடம் நாம் கேட்போம்.*

{ நூல்: 'ஷர்ஹு ரியாழிஸ் ஸாலிஹீன்', 03/45 }

🌸➖➖➖➖➖➖➖➖🌸

          قال الله تعال: *{ولا تمدّنّ عينيك إلى ما متّعنا به أزواجا مّنهم زهرة الحياة الدنيا }* (سورة طه: الآية - ١٣١ )

             قال العلّامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:-

      *[ أي: لا تنظر إلى أهل الدنيا وما متّعوا به من النعيم، من المراكب والملابس والمساكن وغير ذلك..... فكل ذلك زهرة الدنيا.*

          *والزهرة آخر مآلها الذبول واليبس والزوال، وهي أسرع أوراق الشجرة ذبولا وزوالا. وهي زهرة حسنة في رونقها وجمالها وريحها إن كانت ذات ريح. ولكنها سريعة الذبول، وهكذا الدنيا، زهرة تذبل سريعا!*

*نسأل الله أن يجعل لنا حظا ونصيبا في الآخرة! ]*

{ شرح رياض الصالحين، ٣/٤٥ }

🌸➖➖➖➖➖➖➖➖🌸

               *✍தமிழில்✍*

                  அஷ்ஷெய்க்

*N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


Previous Post Next Post