பாவங்கள் மூலம் ஆன்மாவை அசிங்கப்படுத்தாமல், இறைவழிபாட்டின் மூலம் அதைத் தூய்மைப்படுத்துவோம்!


         *“ஆன்மாவின் மீதும், அதை ஒழுங்குற அமைத்தவன் மீதும் சத்தியமாக! பின்னர், அவன் அதற்கு அதன் தீமையையும் நன்மையையும் உணர்த்தினான்.*

           *அதைத் தூய்மைப்படுத்தியவன் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டான். அதைக் களங்கப்படுத்தியவன் நிச்சயமாக நஷ்டமடைந்துவிட்டான்!”* (அல்குர்ஆன், 91: 07 - 10)

           *ஆன்மாவைத் தூய்மைப்படுத்துதல், அதைக் களங்கப்படுத்துதல் எப்படி?* என்பது குறித்து  அல்லாமா இப்னுல் கைய்யிம் அல்ஜவ்ஸிய்யா (ரஹ்) அவர்கள் பின்வருமாறு விளக்கமளிக்கின்றார்கள்:-

           *“அல்லாஹ்வுடைய வழிபாட்டின் மூலம் அதைப் பெருமைப்படுத்தி, அதை மேலோங்க வைத்து, அதன் மகத்துவத்தை வெளிப்படுத்தி உயர்த்தியவனே நிச்சயமாக வெற்றி பெற்று விட்டான்! அல்லாஹ்வுக்கு மாறு செய்ததன் மூலம் அதன் மகத்துவத்தை மறைத்து, அதைக் கேவலப்படுத்தி, அதைச் சிறுமைப்படுத்தியவனே சத்தியமாக நஷ்டமடைந்துவிட்டான்!”*

{ நூல்: 'அத்dதாஉ வத்dதவாஉ' , பக்கம்: 189 }

🔹➖➖➖➖➖➖➖➖🔹

             قال الله تعالى *:{ونفس وما سوّاها،فألهمها فجورها وتقواها، قد أفلح من زكّاها وقد خاب من دسّاها}* (سورة الشمس : ٧ - ١٠)

            قال العلّامة إبن القيم الجوزية رحمه الله تعالى:-

            *[ والمعنى: قد أفلح من كبّرها وأعلاها بطاعة الله وأظهره. وقد خسر من أخفاها وحقرها وصغرها بمعصية الله! ]*

{ الداء والدواء ، ص - ١٨٩ }

🔹➖➖➖➖➖➖➖➖🔹

               *✍தமிழில்✍*

                  அஷ்ஷெய்க்

*N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


Previous Post Next Post