-உஸ்தாத் SM . இஸ்மாயில் நத்வி
கீழ் காணும் ஆதாரங்களின் அடிப்படையில் இறை உவப்பை பெற்று கொள்ளுவதே நாம் நபிகளாரின் மீது வைத்திருக்கும் நேசத்திற்கு ஓர் அளவுகோள் என்பதனையும் நினைவில் கொள்ள கடமை பட்டி9:24ருகின்றோம் ,
قُلْ اِنْ كَانَ اٰبَآؤُكُمْ وَاَبْنَآؤُكُمْ وَاِخْوَانُكُمْ وَاَزْوَاجُكُمْ وَعَشِيْرَتُكُمْ وَ اَمْوَالُ ۨاقْتَرَفْتُمُوْهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَ مَسٰكِنُ تَرْضَوْنَهَاۤ اَحَبَّ اِلَيْكُمْ مِّنَ اللّٰهِ وَرَسُوْلِهٖ وَ جِهَادٍ فِىْ سَبِيْلِهٖ فَتَرَ بَّصُوْا حَتّٰى يَاْتِىَ اللّٰهُ بِاَمْرِهٖ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الْفٰسِقِيْنَ
(நபியே!) நீர் கூறிவிடுவீராக: “உங்கள் தந்தையர், உங்கள் பிள்ளைகள், உங்கள் சகோதரர்கள், உங்கள் மனைவியர், உங்களுடைய உறவினர்கள், நீங்கள் சம்பாதித்த செல்வங்கள் மற்றும் தேக்கநிலை ஏற்பட்டுவிடுமோ என நீங்கள் அஞ்சுகின்ற உங்களுடைய வணிகம் மற்றும் உங்களுக்கு விருப்பமான இல்லங்கள் ஆகியவை அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும்விட அவன் வழியில் போராடுவதைவிட உங்களுக்கு நேசமானவையாயிருந்தால், அல்லாஹ் தன்னுடைய தீர்ப்பினை (உங்களிடம்) செயல்படுத்தும் வரை நீங்கள் எதிர்பார்த்திருங்கள்! அல்லாஹ் தீய சமுதாயத்துக்கு நேர்வழி காட்டுவதில்லை.”
(அல்குர்ஆன் : 9:24)
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிகின்றார்கள் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக:-
"உங்களில் ஒருவர் யார் தன்னுடைய குழந்தைகள் இன்னும் பெற்றோர் அனைவரையும் விட என்னை
நேசனாக ஆக்காத வரை அவர் இறைநம்பிக்கையாளராக ஆக மாட்டார் "
-ஸஹீஹுல் புஹாரி (15)
صحيح البخاري ( 15 )
صحيح مسلم ( 44 )
سنن النسائي ( 5013, 5014 )
سنن ابن ماجه ( 67 )
سنن الدارمي ( 2783 )
مسند أحمد ( 12814, 13911 )
நபிகளாரின் மீதுள்ள நமது நேசம் மார்கம் நமக்கு காட்டி தந்திருக்கும் வழிகாட்டுதலுடனும் அதற்குறிய விழுமியங்களுடனும் நம்மை இட்டு சென்றால் அது நேர்வழியாகும் ,அதே நேரத்தில் வரம்பு மீறிய நேசமும் ,முறை கேடான மார்கம் காட்டிதராத வழிமுறைகளினால்,
நபிகளாரின் மீது நாமும் அன்பு செலுத்துகின்றோம் என்ற போலியான கட்டமைப்பு நம்மை வழிகேட்டில் கொண்டு சேர்த்து விடும் என்ற ஒரு அடிப்படையான விழிப்புணர்வை நாம் பெற்றாக வேண்டும் என்று இஸ்லாமிய ஆய்வாளர் சகோதரர் அப்துர் ரஊப் உஸ்மான் தங்களின்
முனைவர் பட்டபடிப்பிற்காக அவர்
சமர்பித்த ஆய்வு நூலாகிய
" இறைதூதரின் நேசம் பின்பற்றுவதற்கும் பித்அத் (அனாச்சாரம்) செய்வதற்கும் மத்தியில் "
-محبة الرسول بين اتباع و ابتداع என்ற புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்,
நபிகளாரின் மீது நமக்கு
நேசம் ஏற்படுகிற அதே நேரத்தில் வரம்பு மீறிய ,இஸ்லாம் காட்டிதராத
நபியவர்களோ அவர்களின் சத்திய சஹாபக்களோ செய்யாத இந்த மீலாது பண்டிகை(பிறந்த நாள்) இன்னும் அதன் தொடரில் ஓதப்படும் மவ்லிதும் ,இன்னும் பற்பல அனாசாரங்களும் ஒரு தவறான வழிகாட்டுதலே ஆகும்,
இந்திய போன்ற நாடுகளில் அழைப்பு பணிக்காக இந்த தினங்களை பயன்படுத்தி முஸ்லீம் அல்லாதவர்களுக்கு நபியவர்களின் அறிமுகத்தை செய்வது உகந்தது என்றிருந்தாலும் அது இறுதியாக நபி அவர்களின் பிறந்த தின விழாவை மையமாகதான் கொண்னாடபட்டதாக மக்களிடம் கருத்து பொய் சேரும் ,
இறை தூதர் (ஸல்) அவர்கள் ரபீயுல் அவ்வள் மாதம் 12 ல் பிறந்தார்களா ?
நபியவர்களின் பிறந்த தினம் குறித்து வரலாற்று அறிஞர்களிடம் கருத்து வேறுபாடுகள் உள்ளன,ஆனால் இவர்களின் இறந்த தினம் ரபீயுல் அவ்வல் 12 என்பதில் ஏகோபித்த கருத்து உள்ளது ,
அவர்களின் உறுதி செய்யப்படாத பிறந்த தினத்தை முன் வைத்தா? அல்லது உறுதி செய்யபட்ட இறந்த தினத்தை முன் வைத்தா ?
பிறகு நாம் எதை முன்வைத்து சந்தோஷமாக கொண்டாடுகின்றோம்?
அல்லாமா இப்னு கதீர் (ரஹ் )
அவர்கள்
தங்களின் புத்தகமாகிய அல்பிதாயா வன் னிஹாயாவில் ,
நபியவர்கள் பிறந்த நாள் 2 ரபீயுள் அவ்வள் ,17 ரபீயுள் அவ்வள்,என்று குறிப்பிடுகின்றார்கள் ,ரமலான் மாதமும் பிறந்த தினமாக கூறப்படுவதும் கூட் ஆச்சிரியத்தை அளிக்கின்றது என்று இஸ்லாமிய வரலாற்று ஆசிரியர் இப்னு கதீர்
கூறுகின்றார்கள்.
பார்க்க -
*அஸ்ஸீரதுன் நபவிய்யா -இப்னு ஹிஷாம் ,பக்கம் -128
*அத்தபகாத் -இப்னு ஸஃத் ,பக்கம் -47
ابن كثير في البداية والنهاية ذكر جميع هذه الأقوال في تحديد هذا اليوم ومنها 2 ربيع الأول- 17 ربيع الأول – وقيل ولد في شهر رمضان أيضاً واستغربه ابن كثير؛ وينظر : ابن هشام، السيرة النبوية، ص128؛ ابن سعد، الطبقات، ص 47.
பாதிமியாக்கள் தான் முதன் முதலில் (எகிப்து ,ஷாம் தேசத்தின் ஷியாக்களின் ஒரு பிரிவு ,அப்பாஸி கிலாபத்தை வீழ்த்தியவர்கள் ) நான்கு வகையான பிறந்த தினங்களை கொண்டாடியவர்கள்-
1-நபிகளாரின் (ஸல்) பிறந்த தினம்
2-அலி பின் அபீதாலிப் (ரலி)
பிறந்த தினம்
3-அவர்களின் இரு புதல்வர்கள்
ஹசன் ,ஹுசைன் பிறந்த தினங்கள் .
இவர்கள்தான் முதலில் இந்த அனாசாரங்களை ஏற்படுத்தியவர்கள் என்று அல்முக்ரிஸி என்ற அறிஞர் கூறுகின்றார் ,
பாதிமிகளின் அரசரான முஸ்தஃலா பில்லாஹி உடைய அமைச்சர் பத்ருல் ஜமாலி என்பவர் அமைச்சராக பதிவியேற்கும் வரை இந்த பித்அதான மீலாது பண்டிகை நடந்தேறியது ,ஏனென்றால் இந்த அமைச்சர் நபிவழியை (சுன்னாவை ) பின்பற்றுவதில் மிகவும் கவணமானவராக இருந்தார்,ஆட்சி பொருப்பில் வந்தவுடன் ,முதலில் இந்த அனைத்து பிறந்த தின விழாகளை
இரத்து செய்தார்,இவருடைய மரனதிற்க்கு பின் மீண்டும் இந்த மீலாது விழா அனாசாரங்கள் தொடர்ந்தது ,மாவீரர் மன்னர் ஸலாஹுத்தீன் அல் அய்யூபி (ரஹ்) (பாலஸ்தீனத்தில் கைபற்றபட்ட பைதுல் முகத்திஸை யூதர்களின் கரத்திலிருந்து முஸ்லீம்களுக்கே மீட்டு கொடுத்த குர்திய மாவீரர் ) அவர்கள். மிகவும் சுன்னாவை பேணுபவராக இருந்தார்கள் ,தங்கள் முழு அய்யூபிய அரசாங்கத்தின் கீழ் இருக்கும் இராஜியங்களில் இந்த மீலாதுகளை ரத்து செய்து உத்தரவிட்டார்,ஆனால் அவரின் தங்கையின் கணவர் அரசர் முஸப்பர் மட்டும் ஏற்க மறுத்தது மட்டுமல்ல,அவருடைய நாட்டில்
மீலாது விழா லுஹருலிருந்து மருநாள் பஜர்
வரை நடத்தப்பட்டது அதில் பல ஸூபிகள் கலந்து கொண்டனர் ,
அதில் அவர் மூன்று இலட்சம் பொற்காசுகள் செலவு செய்தார் .
நூல் -அல்பிதாயா வன் நிஹாயா-
ஆசிரியர் -இமாம் இப்னு கதீர்
(ரஹ்)
பக்கம் -186,
வால்யம் -7
சம்பவம் -ஹிஜ்ரி 650 .
وقد احتفل الفاطميون بأربعة موالد : مولد النبي صلى الله عليه وسلم ، وعلي بن أبي طالب وولديه الحسن والحسين -رضي الله عنهم- جميعا . فهم أول من أحدث ذلك كما ذكر المقريزي وغيره . وظلت هذه البدعة يعمل بها حتى جاء ( بدر الجمالي ) الوزير الأول للخليفة الفاطمي ( المستعلي بالله ) وكان هذا الوزير شديد التمسك بالسنة ، فأصدر أمرا
بإلغاء هذه الموالد ، وما أن مات ( بدر الجمالي ) حتى عادت البدعة من جديد .
واستمر الأمر على هذا الحال حتى جاء عهد صلاح الدين الأيوبي ، وكان أيضا من المتمسكين بالسنة ، فألغى هذه الاحتفالات ، وتم تنفيذ هذا الإلغاء في كل أنحاء الدولة الأيوبية ، ولم يخالف في ذلك إلا الملك المظفر الذي كان متزوجا من أخت صلاح الدين .
وقد ذكر المؤرخون أن احتفالات الملك المظفر بالمولد كان يحضرها المتصوفة حيث يكون الاحتفال من الظهر إلى الفجر ، وكان ما ينفق في هذا الاحتفال يزيد عن ثلاثمائة ألف دينار(انظر البداية والنهاية-ابن كثير –ج7-ص186-حوادث سنة630 هـ) .
من مقال ( البدع وأثرها في انحراف التصور الإسلامي ) للدكتور الشيخ صالح بن سعد السحيمي حفظه الله تعالى.
نشر في مجلة البحوث الإسلامية - (15 / 157) (الجزء رقم : 16، الصفحة رقم: 160-161) نسخة المكتبة الشاملة
நம்முடைய சான்றோர்கள் பித்அத் (அனாசாரம்) விடயத்தில் மிகவும்
கவணமாகமும்,பேணுதலாகவும் இருந்தனர் ஆனால் இன்று வழிகெட்ட பரேல்விகள் இந்த தூய இஸ்லாதின் கொள்கை ,கோட்பாடுகளை குழி தோண்டி புதைப்பது மட்டுமின்றி அவர்களின் வழி கெட்ட கொள்கைகளை இஸ்லாமாக மாற்ற முயலுகின்றனர் ,இந்த உம்மதின் எழுச்சி இறை தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை பின்பற்றி வாழ்வதில் மட்டுமே இருக்கின்றது ,மன இச்சைகளை மார்கமாக ஆக்க முயன்றால் இவ்வுலகிலே இழிவையும் ,மறுமையில் வேதனையும் காண்போம் ,இறைவன் நம்மீது அருள் புரிவானாக ,
நபிகளாரின் மீது மார்கம் கற்று தந்திருகின்ற முறையில் ஸலவாத்துகளை ஓதுவோம் இந்த ரபீயுல் அவ்வல் மாத்தில் மட்டுமல்ல எப்பொழுதும் ஓதுவோம் ,நமது நேசம் நபியவர்களின் கட்டளைகளையும் ,சுன்னாகளையும் பின்பற்றுவதில் இருக்க வல்ல இறைவன் நம் மீது அருள் புரிவானாக.
மேலும், (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள், இன்னும், எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்,
(அல்குர்ஆன் -59:7)