பித்அத் , காலத்துக் காலம் ஒவ்வொரு வடிவில் வரலாம் . அதன் பெயர்கள் மாறலாம் . அதனால் , அது பித்அத் என்ற நிலையிலிருந்து மாறுபட முடியாது .
உதாரணமாக , "கவாரிஜ்கள்" , பெரும்பாவம் செய்தவன் காபிர் (تكفير مرتكب الكبيرة) எனக் கூறினார்கள் . அது நவீனகாலத்தில் " ஹாகிமிய்யா الحاكمية (ஆட்ச்சியாளர்களையும், அவர்களுக்கு கட்டுப்படும் மக்களும் காபிர்கள் என்று கூறும் சித்தாந்தம்) என்ற வடிவத்தை எடுத்துள்ளது .
தெட்டத்தெளிவான பித்அத்தும் , கிறிஸ்மஸ் என்ற கிறிஸ்த்தவ கலாச்சாரத்துக்கு ஒப்பான " மீலாதுன் நபி கொண்டாட்டம்" ,ஸீரத்துன் நபி , தாரீகுன் நபி என்ற வடிவங்களைப் பெற்றுள்ளது . இதைக் கண்டு ஏமாறக் கூடாது .
சிலர், நிகழ்வு பித்அத் என்றாலும் , நாம் அங்கு சென்று நல்லதைச் சொல்வோம் எனக் கூறலாம் . இதுவும் ஏமாற்றும் தந்திரமாகும் . நல்லது சொல்வதற்க்கு , தற்க்காலத்தில் பல வழிகள் உள்ளன. நல்லதை "குறிப்பிட்ட காலத்தில்தான்" சொல்லவேண்டும் என்ற கட்டாயம் கிடையாது .
இன்னும் சிலர் , அரசாங்கத்தால் ஒழுங்குபடுத்தப்படும் மீலாது நிகழ்வுகளில் கலந்து கொள்வதின் மூலம் , மக்களை "கவரலாம்" எனக் கூறலாம் . இதுவும் கொள்கைவாதிகளை குழியில் தள்ளிவிடும் ஒருவகைத் தந்திரமாகும் . அரசாங்க நிகழ்வுகள் , தஃவா களம் அல்ல . வெறும் சமூக நிகழ்வுகளே அன்றி வேறில்லை .
قال الله تعالى : أَفَمَنْ زُيِّنَ لَهُ سُوءُ عَمَلِهِ فَرَآهُ حَسَنًا فَإِنَّ اللَّهَ يُضِلُّ مَنْ يَشَاءُ وَيَهْدِي مَنْ يَشَاءُ سورة فاطر : 8
"ஒருவர் , அவரின் கெட்ட செயல், அவருக்கு அழகுபடுத்திக் காண்பிக்கப்பட்டு , அவர், அதை நல்லதாகக் காண்கிறாரா ?! அல்லாஹ் நாடியவர்களை வழிகெடுப்பான் . நாடியவர்களை நேர்வழிப்படுத்துவான் (பாதிர்)