முர்தத் விஷயத்தில் இஸ்லாமிய சட்டம்

1) முர்தத் என்ற வார்த்தையின் நேரடி அருத்தம் மாற்றுதல் இஸ்லாமிய வரலாற்றில் முர்தத் என்பது இஸ்லாமிய சிந்தனையில் பிறந்து அல்லது இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டதற்கு பிறகு இஸ்லாமிய மார்கத்தை விட்டு வெளியேறுபவனை முர்தத் என்று அழைக்கப்படும்.

முர்தத் (இஸ்லாமிய மார்க்கத்தை விட்டு வெளியேறுதல்) நான்கு வகைப்படும்:

1. கொள்கையின் (நம்பிக்கை) மூலம் முர்தத்

2. பேச்சின் மூலம் முர்தத்தாக மாறுதல்

3. செயல்களின் மூலம் முர்தத்

4. அல்லாஹ் கடமையாக்கிய செயல்களை மறுத்தல் அல்லது அல்லாஹ் தடுத்த விசயங்களை ஆகுமாக்குதல்.

(1) கொள்கையின் (நம்பிக்கை) மூலம் முர்தத்:

இஸ்லாத்தில் பிறந்து அல்லது இஸ்லாத்தை ஏற்றதற்கு பிறகு இஸ்லாமிய மார்க்கத்தை விட்டு வெளியேறி பிற மதத்தில் தன்னை இணைத்து கொள்ளுதல் அல்லது அல்லாஹ் இல்லை என்று நாத்திக கொள்கையில் தன்னை இணைத்தல்!

அல்லது ஈமானின் அடிப்படை நம்பிக்கையான அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் அவன் வானவர்கள் மீதும் வேதங்களின் மீதும் நபிமார்கள் மீதும் நன்மை தீமைகள் அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடைபெறுகிறது , மேற்கூறப்பட்ட ஆறு விசயங்களை முழுமையாகவே அல்லது ஆறில் ஒன்றை மறுத்தாலும் அவன் முர்தத் இஸ்லாமிய மார்க்கத்தை விட்டு வெளியேறிவிடுவான்!!

மேலும் அல்லாஹ்வின் தன்மைகள் பிறருக்கு உண்டு என்று யார் நம்பினாலும் அவனும் இஸ்லாமிய மார்க்கத்தை விட்டு வெளியேறிய முர்தத்தாக பாவிக்கப்படுவான்.

(உதாரணம்) அல்லாஹ் அல்லாதவர்களாலும் நமக்கு உதவி செய்ய முடியும், இன்னும் நமது கஸ்டங்கள் சிரமங்கள் நோய்கள் அனைத்தையும் அல்லாஹ்வால் படைக்கப்பட்ட படைப்புகளாலும் மாற்ற முடியும் என்று நம்புதல் அல்லது அல்லாஹ்விடம் கேட்டால் உதவி தாமதமாகவும் அவனின் படைப்புகள் (உதாரணம்) (இறைதூதர்கள் இறைநேசர்கள்) இவர்களிடம் கேட்டால் உடனடியாக உதவி வரும் என்று நம்புதல்,

அல்லாஹ் பார்ப்பதைப்போல் அல்லாஹ் கேட்பதை போல் அல்லாஹ்வின் படைப்புகளாலும் முடியும் என்று நம்புதல், அல்லாஹ்விற்கு இருக்கும் மறைவான அறிவு அவன் படைப்புகளுக்கும் உண்டு என்று நம்புதல் ,அல்லாஹ் நம்மை கண்காணிப்பதைப் போல் அல்லாஹ்வின் படைப்புகளும் நம்மை கண்காணிக்க முடியும் என்று நம்புதல்.

மேலும் அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட இறைதூதர்கள் அனைவரையும் அல்லது அந்த இறைதூதர்களில் ஒருவரை இறைதூதர் இல்லை என்று நம்பினால் அல்லது இறுதி இறைதூதரான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பிறகு மீண்டும் இறைதூதர்கள் வருவார்கள் என்று நம்பினால் அல்லது அல்லாஹ் கூறாத நபர்களை இறைதூதர் என்று நம்பினாலும்

மேலும் அல்லாஹ்வின் சட்டம் (குர்ஆன், ஹதீஸ்) நவீன காலத்திற்கு ஒத்துவராது என்று நம்புதல் அல்லது அல்லாஹ்வின் சட்டம் (குர்ஆன் ஹதீஸ்)ஸில் தவறுகள் இறுப்பதாக நம்புதல் அல்லது (குர்ஆன், ஹதீஸ்)ஸை விட மனிதன் இயற்றும் சட்டம் மிகவும் அழகானது என்று நம்புதல் மேற்கூறப்பட்ட நம்பிக்கையில் அனைத்தையும் அல்லது ஒன்றை நம்பினாலும் அவன் முர்தத் இஸ்லாத்தை விட்டு முழுமையாக வெளியேறிவிடுவான்.

(2) பேச்சின் மூலம் முர்தத்தாக மாறுதல்

அல்லாஹ்வை அல்லது அல்லாஹ்வின் வார்த்தையான குர்ஆனை நாவால் கேலிபண்ணுதல் அல்லது விமர்சித்தல் மேலும் (அல்லாஹ்வின் இறைதூதர்களை திட்டுதல் அவர்களின் தியாகத்தை கொச்சைப் படுத்துதல்) மேற்கூறப்பட்ட அனைத்தும் அல்லது ஒன்றை செய்தாலும் அவனும் முர்தத்தாக கருதப்படுவான்.

(3) செயல்களின் மூலம் முர்தத்:

அல்லாஹ்விற்கு மட்டும் செய்யப்படும் இபாபத் (வணக்க வழிபாடுகளை) அல்லாஹ்வால் படைத்த படைப்பினங்களுக்கு செய்யுதல் (உதாரணம்) சூரியன் மனிதர்கள் இறைநேசர்கள் கல் மண் போன்றபடைப்பினங்களுக்கு ஸஜ்தா செய்யுதல் அல்லது அறுத்து பலியிடுதல் நேர்ச்சை வைத்தல் அவர்களிடம் பிரார்த்தனை செய்தல் இவையாவும் (செயல் மூலம் முர்தத்) இஸ்லாத்தை விட்டும் ஒருவனை வெளியாக்கும்.

(4) அல்லாஹ் கடமையாக்கிய செயல்களை மறுத்தல் அல்லது அல்லாஹ் தடுத்த விசயங்களை ஆகுமாக்குதல்:

அல்லாஹ்வால் கடமையாக்கப்பட்ட செயல்களை மறுத்தல். 
(உதாரணம்) தொழுகை மற்றும் நோன்பு, ஹஜ், ஸகாத், ஜிஹாத் போன்ற வணக்க வழிபாடுகள் அனைத்தையும் அல்லது ஒன்றை மறுத்தல்

அல்லாஹ்வால் தடைசெய்யப்பட்ட செயல்களை ஆகுமாக்குதல் (உதாரணம்) மது, வட்டி, விபச்சாரம், திருட்டு, தற்கொலை, ஆபாசம் இது போல் அல்லாஹ்வால் தடைசெய்யப்பட்ட அனைத்தும் அல்லது ஒன்றை ஆகுமாக்கினாலும் அவனும் முர்தத்தாக இஸ்லாமிய மார்க்கத்தை விட்டு வெளியேறிவிடுவான்.

முர்தத் விசயத்தில் குர்ஆனின் எச்சரிக்கை:

وَمَن يَرْتَدِدْ مِنكُمْ عَن دِينِهِ فَيَمُتْ وَهُوَ كَافِرٌ فَأُولَٰئِكَ حَبِطَتْ أَعْمَالُهُمْ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ ۖ وَأُولَٰئِكَ أَصْحَابُ النَّارِ ۖ هُمْ فِيهَا خَالِدُونَ ﴿2:217﴾

2:217. ( உங்களில் எவரேனும் ஒருவர் தம்முடைய மார்க்கத்திலிருந்து திரும்பி, காஃபிராக (நிராகரிப்பவராக) இறந்துவிட்டால் அவர்களின் நற்கருமங்கள் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் (பலன் தராமல்) அழிந்துவிடும்; இன்னும் அவர்கள் நரகவாசிகளாக அந்நெருப்பில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.”

(3)إِنَّ الَّذِينَ اشْتَرَوُا الْكُفْرَ بِالْإِيمَانِ لَن يَضُرُّوا اللَّهَ شَيْئًا وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ ﴿3:177﴾

3:177. யார் (தங்கள்) ஈமானை விற்று (பதிலாக) குஃப்ரை விலைக்கு வாங்கிக் கொண்டார்களோ, அவர்கள் அல்லாஹ்வுக்கு ஒரு தீங்கும் செய்துவிடமுடியாது – மேலும் அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையும் உண்டு.

إِنَّ الَّذِينَ كَفَرُوا بَعْدَ إِيمَانِهِمْ ثُمَّ ازْدَادُوا كُفْرًا لَّن تُقْبَلَ تَوْبَتُهُمْ وَأُولَٰئِكَ هُمُ الضَّالُّونَ ﴿3:90﴾

3:90. எவர் ஈமான் கொண்ட பின் நிராகரித்து மேலும் (அந்த) குஃப்ரை அதிகமாக்கிக் கொண்டார்களோ நிச்சயமாக அவர்களுடைய தவ்பா – மன்னிப்புக்கோரல் – ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது; அவர்கள் தாம் முற்றிலும் வழி கெட்டவர்கள்.

كَيْفَ يَهْدِي اللَّهُ قَوْمًا كَفَرُوا بَعْدَ إِيمَانِهِمْ وَشَهِدُوا أَنَّ الرَّسُولَ حَقٌّ وَجَاءَهُمُ الْبَيِّنَاتُ ۚ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ ﴿3:86﴾

3:86. அவர்களிடம் தெளிவான ஆதாரங்கள் வந்து நிச்சயமாக (இந்தத்) தூதர் உண்மையாளர்தான் என்று சாட்சியங் கூறி ஈமான் கொண்ட பிறகு நிராகரித்து விட்டார்களே அந்தக் கூட்டத்திற்கு அல்லாஹ் எப்படி நேர்வழி காட்டுவான்! அல்லாஹ் அநியாயக்கார கூட்டத்திற்கு நேர்வழி காட்ட மாட்டான்.

أُولَٰئِكَ جَزَاؤُهُمْ أَنَّ عَلَيْهِمْ لَعْنَةَ اللَّهِ وَالْمَلَائِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ ﴿3:87﴾

3:87. நிச்சயமாக அவர்கள் மீது அல்லாஹ், மலக்குகள், மனிதர்கள் அனைவரின் சாபமும் இருக்கின்றது என்பது தான் அவர்களுக்குரிய கூலியாகும்.

خَالِدِينَ فِيهَا لَا يُخَفَّفُ عَنْهُمُ الْعَذَابُ وَلَا هُمْ يُنظَرُونَ ﴿3:88﴾

3:88. இ(ந்த சாபத்)திலேயே அவர்கள் என்றென்றும் இருப்பார்கள்; அவர்களுடைய வேதனை இலேசாக்கப்பட மாட்டாது; அவர்களுக்கு (வேதனை) தாமதப்படுத்தப் படவும் மாட்டாது.

إِنَّ الَّذِينَ آمَنُوا ثُمَّ كَفَرُوا ثُمَّ آمَنُوا ثُمَّ كَفَرُوا ثُمَّ ازْدَادُوا كُفْرًا لَّمْ يَكُنِ اللَّهُ لِيَغْفِرَ لَهُمْ وَلَا لِيَهْدِيَهُمْ سَبِيلًا ﴿4:137﴾

4:137. நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு, பின்னர் நிராகரித்து, பின்னர் ஈமான் கொண்டு, பின்னர் நிராகரித்து, பின்னர் நிராகரிப்பை அதிகரித்துக் கொண்டனரோ, அவர்களை அல்லாஹ் மன்னிப்பவனாகவும் இல்லை; மேலும் அவர்களுக்கு (நேர்)வழியைக் காட்டுகிறவனாகவும் இல்லை.

مَن كَفَرَ بِاللَّهِ مِن بَعْدِ إِيمَانِهِ إِلَّا مَنْ أُكْرِهَ وَقَلْبُهُ مُطْمَئِنٌّ بِالْإِيمَانِ وَلَٰكِن مَّن شَرَحَ بِالْكُفْرِ صَدْرًا فَعَلَيْهِمْ غَضَبٌ مِّنَ اللَّهِ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ ﴿16:106﴾

16:106. எவர் ஈமான் கொண்டபின் அல்லாஹ்வை நிராகரிக்கிறாரோ அவர் (மீது அல்லாஹ்வின் கோபம் இருக்கிறது) – அவருடைய உள்ளம் ஈமானைக் கொண்டு அமைதி கொண்டிருக்கும் நிலையில் யார் நிர்ப்பந்திக்கப்படுகிறாரோ அவரைத் தவிர – (எனவே அவர் மீது குற்றமில்லை) ஆனால் (நிர்ப்பந்தம் யாதும் இல்லாமல்) எவருடைய நெஞ்சம் குஃப்ரைக்கொண்டு விரிவாகி இருக்கிறதோ – இத்தகையோர் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகும்; இன்னும் அவர்களுக்குக் கொடிய வேதனையும் உண்டு.

إِنَّ الَّذِينَ ارْتَدُّوا عَلَىٰ أَدْبَارِهِم مِّن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمُ الْهُدَى ۙ الشَّيْطَانُ سَوَّلَ لَهُمْ وَأَمْلَىٰ لَهُمْ ﴿47:25﴾

47:25. நிச்சயமாக, எவர்கள் நேர்வழி இன்னதென்று அவர்களுக்குத் தெளிவானபின், தம் முதுகுகளைத் திருப்பிக் கொண்டு போகிறார்களோ, (அவ்வாறு போவதை) ஷைத்தான் அழகாக்கி, (அவர்களுடைய தவறான எண்ணங்களையும்) அவர்களுக்குப் பெருக்கி விட்டான்.

ذَٰلِكَ بِأَنَّهُمْ قَالُوا لِلَّذِينَ كَرِهُوا مَا نَزَّلَ اللَّهُ سَنُطِيعُكُمْ فِي بَعْضِ الْأَمْرِ ۖ وَاللَّهُ يَعْلَمُ إِسْرَارَهُمْ ﴿47:26﴾

47:26. இது ஏனெனில் அவர்கள் எதை அல்லாஹ் இறக்கிவைக்கிறானோ, அதை வெறுப்பவர்களிடம், “நாங்கள் சில காரியங்களில் உங்களையே பின்பற்றி நடப்போம்” என்று கூறியதனாலேயாம். ஆனால், அல்லாஹ் அவர்களுடைய இரகசியங்களை அறிகிறான்.

فَكَيْفَ إِذَا تَوَفَّتْهُمُ الْمَلَائِكَةُ يَضْرِبُونَ وُجُوهَهُمْ وَأَدْبَارَهُمْ ﴿47:27﴾

47:27. ஆகவே, அவர்களுடைய முகங்களிலும், அவர்களுடைய முதுகுகளிலும் அடித்து (உயிர்களைக் கைப்பற்றும்) மலக்குகள் அவர்களை மரணமடையச் செய்யும் போது (அவர்கள் நிலைமை) எப்படியிருக்கும்,

ذَٰلِكَ بِأَنَّهُمُ اتَّبَعُوا مَا أَسْخَطَ اللَّهَ وَكَرِهُوا رِضْوَانَهُ فَأَحْبَطَ أَعْمَالَهُمْ ﴿47:28﴾

47:28. இது ஏனெனில்: நிச்சயமாக இவர்கள் அல்லாஹ்வுக்குக் கோபமூட்டுவதையே பின்பற்றி, அவனுடைய திருப்தியை வெறுத்தமைதான்; ஆகவே அவர்களுடைய செய்கைகளை அவன் பயனில்லாதவையாக ஆக்கி விட்டான்.

ஒருவன் முர்தத் இஸ்லாத்தை விட்டு வெளியேறினால் அவனின் தண்டனை:

(1)   ودليل قتل المرتد هو قول النبي صلى الله عليه وسلم : ” من بدل دينه فاقتلوه ” رواه البخاري (2794)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் எவன் இஸ்லாமிய மார்க்கத்தை விட்டு வெளியேறி பிற கொள்கையை தேர்வு செய்வானோ அவன் கொலை (மரண தண்டனை )கொடுக்கப்பட வேண்டும் (நூல்: புகாரி 2794)

இக்ரிமா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அறிவித்தார்; அலீ ரளியல்லாஹு அன்ஹு   அவர்களிடம், இஸ்லாத்திலிருந்து வெளியேறிய சிலர் கொண்டு வரப்பட்டனர். அவர்களை அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் எரித்து (விடுமாறு உத்தர)விட்டார்கள். இச்செய்தி இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள், “நானாக இருந்திருந்தால் அவர்களை எரித்திருக்கமாட்டேன். ஏனெனில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “அல்லாஹ் அளிக்கிற (நெருப்பின்) வேதனையை அளித்து (எவரையும்) தண்டிக்காதீர்கள்“ என்று கூறினார்கள். மாறாக, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “தம் மார்க்கத்தை மாற்றிக் கொள்கிறவருக்கு மரணதண்டனை அளியுங்கள்“ என்று சொன்னதற்கேற்ப நான் அவர்களுக்கு மரணதண்டனை அளித்திருப்பேன்“ என்றார்கள். (நூல் புகாரி 6922)

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ”அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. நான் அல்லாஹ்வின் தூதராவேன்” என உறுதிமொழி கூறிய முஸ்லிமான எந்த மனிதரையும் மூன்று காரணங்களில் ஒன்றை முன்னிட்டே தவிர வேறெதற்காகவும் கொலை செய்ய (மரண தண்டனையளிக்க) அனுமதி இல்லை. அவை: 1. திருமணமானவன் விபசாரம் செய்வது. 2. ஒரு மனிதரைக் கொலை செய்ததற்குப் பதிலாகக் கொலை செய்வது. 3. ”ஜமாஅத்” எனும் சமூகக் கூட்டமைப்பை விட்டு வெளியேறி, தமது மார்க்கத்தைக் கைவிட்ட (மார்க்க விரோதம் செய்த)வன். இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் 3463)

அபூமூசா அல்அஷ்அரீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: , நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னை யமன் நாட்டிற்கு அனுப்பிவைத்தார்கள். பிறகு என்னைப் பின்தொடர்ந்து முஆத் பின் ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை யமன் நாட்டிற்கு அனுப்பிவைத்தார்கள்.

முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் என்னிடம் வந்தபோது ”வாகனத்திலிருந்து இறங்குங்கள் (இதில் அமருங்கள்)” என்று கூறிவிட்டு, (அவர்களைக் கண்ணியப்படுத்தும் விதமாக) அவர்களுக்குத் தலையணை ஒன்றை எடுத்து வைத்தேன். அப்போது எனக்கு அருகில் ஒரு மனிதர் கட்டப்பட்டிருப்பதைக் கண்ட முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், ”இவர் யார்?” என்று கேட்டார்கள்.

நான், ”இவர் யூதராயிருந்து இஸ்லாத்தைத் தழுவினார். அதற்குப் பிறகு (இஸ்லாத்தை விட்டு வெளியேறி) தமது பழைய துன்மார்க்கத்திற்கே திரும்பிச் சென்றுவிட்டார்; யூதராகிவிட்டார்” என்று சொன்னேன். அதற்கு முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், ”அல்லாஹ்வுடையவும் அவனுடைய தூதருடையவும் தீர்ப்புப்படி இவருக்கு மரண தண்டனை அளிக்கப்படாதவரை நான் அமரமாட்டேன்” என்று கூறினார்கள்.

பிறகு மீண்டும் ”சரி, அமருங்கள்” என்றேன். முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், ”அல்லாஹ்வுடையவும் அவனுடைய தூதருடையவும் தீர்ப்புப்படி இவருக்கு மரண தண்டனை அளிக்கப்படாத வரை நான் அமரமாட்டேன்” என்று கூறினார்கள். இவ்வாறு மூன்று முறை நடந்தது. எனவே, அவருக்கு மரணதண்டனை அளிக்கும்படி நான் உத்தரவிட அவ்வாறே அவர் கொல்லப்பட்டார். பிறகு நாங்கள் இருவரும் இரவுத்தொழுகை குறித்துப் பேசிக்கொண்டோம்.

அப்போது எங்களில் ஒருவர், (அதாவது) முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், ”நான் இரவில் சிறிது நேரம் உறங்குகிறேன். சிறிது நேரம் நின்று வணங்குகிறேன். நின்று வணங்குவதற்கு (இறைவனிடம்) நான் பிரதிபலனை எதிர்பார்ப்பதைப் போன்றே என் உறக்கத்திற்கும் நான் பிரதிபலனை எதிர்பார்க்கிறேன்” என்று சொன்னார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் 3728)

(குறிப்பு: முர்தத் இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்களுக்கு மரண தண்டனை என்ற சட்டம் இஸ்லாமிய ஆட்சியாளருக்கு மட்டுமே பொருந்தும் அல்லது இஸ்லாமிய ஆட்சியாளரால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு மட்டுமே பொருந்தும் தனி நபர்கள் அல்லது தனி கூட்டத்தார்கள் மார்க்கத்தை விட்டு வெளியேறிய முர்தத்தை கொலை செய்வதற்கு இஸ்லாமிய மார்க்கம் அனுமதிக்கவில்லை)

(2) முர்தத் மார்க்கத்தை விட்டு வெளியேறியவனுக்கு தவ்பா செய்து மீளுவதற்கு அவகாசம் கொடுக்கப்படுமா???

இஸ்லாமிய அறிஞர்களுக்கு மத்தியில் இது சம்பந்தமாக கருத்து வேறுபாடு காணப்படுகிறது .சில மார்க்க அறிஞர்கள் அவன் மார்க்கத்தை விட்டு வெளியேறிய உடனே அவனுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு கொடுத்தார்கள் .இந்த கருத்தில் ஹஸன் பஸரீ ரஹ்மதுல்லாஹி அலைஹி, இப்னு முன்திர் ரஹ்மதுல்லாஹி அலைஹி.

பெரும் பகுதி மார்க்க அறிஞர்களின் கருத்து மூன்று நாட்கள் அவனுக்கு அவகாசம் கொடுத்து மார்க்கத்தை பற்றி உபதேசம் செய்யப்பட வேண்டும் அவன் தவ்பா செய்து மீண்டு விட்டால் அவனை விட்டுவிட வேண்டும் அவன் தவ்பா செய்ய மறுத்து தனது வழிகெட்ட கொள்கையில் பயணம் செய்தால் மூன்று நாட்களுக்கு பிறகு அவனுக்கு மரண தண்டனை ஆட்சியாளர் விதிக்க வேண்டும்.

فَإِن تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ فَخَلُّوا سَبِيلَهُمْ ۚ إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ ﴿9:5﴾

ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் – நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். (அல் குர்ஆன் 9-5)

إِلَّا الَّذِينَ تَابُوا مِن بَعْدِ ذَٰلِكَ وَأَصْلَحُوا فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ ﴿3:89﴾

எனினும், இதன்பிறகு (இவர்களில்) எவரேனும் (தம் பாவங்களை உணர்ந்து) மன்னிப்புக் கோரித் தங்களைச் சீர்திருத்திக் கொள்வார்களானால், (மன்னிப்புக் கிடைக்கக் கூடும்;) நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்போனாகவும், அளப்பெருங் கருணையுள்ளவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 3-89)

உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அம்ர் இப்னு ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டார்கள் முர்தத் மார்க்கத்தை மாற்றியவனை மூன்று நாட்கள் பிடித்து வைத்து அவனுக்கு உணவும் கொடுத்து வாருங்கள் மூன்று நாட்களுக்குள் மனம் திருந்தி தவ்பா செய்து விட்டால் அவனை விட்டுவிடுங்கள் இல்லாவிட்டால் மூன்று நாட்களுக்கு பிறகு அவனுக்கு மரண தண்டனை கொடுங்கள்.நூல் :முஅத்தா மாலிக் 2/280

முர்தத் மார்க்கத்தை விட்டு வெளியேறியவனிடம் ஒரு முஸ்லீம் நட்பு பாராட்டுதல் பழகுதல் மற்றும் உலக விசயங்களில் தொடர்பை ஏற்படுத்துதல் அவர்களுக்கு உதவி செய்யுதல் இவை அனைத்தையும் இஸ்லாம் தடை செய்துள்ளது

காரணம் இறை மறுப்பாளர்கள் இவர்கள் வேறு முர்தத்(மார்க்கத்தை மாற்றுபவன்) வேறு

இறைமறுப்பாளன் பிறக்கும் போதே இறைமறுப்பாளனாக பிறந்து அதில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். இஸ்லாத்தை எதிர்காத இறைமறுப்பாளர்களிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வியாபார தொடர்பு, கொடுக்கல் வாங்கல், உலக உதவிகள் செய்திருக்கிறார்கள்.

ஆனால் முர்தத் மார்க்கத்தை விட்டு வெளியேறியவன் பிறக்கும் போது முஸ்லிமாக அல்லது இஸ்லாத்தை புரிந்து ஏற்றதற்கு பிறகு இதை விட்டு வெளியேறுகிறான் என்றால் அவன் இஸ்லாமிய எதிரியாகவே பாவிக்கப்படுவான். இந்த எதிரியிடத்தில் இஸ்லாம் எதிரியாகவே நடக்கு மாறு கட்டளை இடுகிறது .

لَّا تَجِدُ قَوْمًا يُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ يُوَادُّونَ مَنْ حَادَّ اللَّهَ وَرَسُولَهُ وَلَوْ كَانُوا آبَاءَهُمْ أَوْ أَبْنَاءَهُمْ أَوْ إِخْوَانَهُمْ أَوْ عَشِيرَتَهُمْ ۚ أُولَٰئِكَ كَتَبَ فِي قُلُوبِهِمُ الْإِيمَانَ وَأَيَّدَهُم بِرُوحٍ مِّنْهُ ۖ وَيُدْخِلُهُمْ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا ۚ رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ ۚ أُولَٰئِكَ حِزْبُ اللَّهِ ۚ أَلَا إِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْمُفْلِحُونَ ﴿58:22﴾

58:22. அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பும் சமூகத்தினர், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பகைத்துக் கொண்டவர்களை நேசிப்பவர்களாக (நபியே!) நீர் காணமாட்டீர். அவர்கள் தங்கள் பெற்றோராயினும் தங்கள் புதல்வர்களாயினும் தங்கள் சகோதரர்களாயினும் தங்கள் குடும்பத்தினராயினும் சரியே; (ஏனெனில்) அத்தகையவர்களின் இதயங்களில், (அல்லாஹ்) ஈமானை எழுதி(ப் பதித்து) விட்டான்; மேலும் அவன் தன்னிடமிருந்து (அருள் என்னும்) ஆன்மாவைக் கொண்டு பலப்படுத்தியிருக்கிறான்; சுவர்க்கச் சோலைகளில் என்றென்றும் இருக்கும்படி அவர்களைப் பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டு இருக்கும். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான்; அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டார்கள். அவர்கள்தாம் அல்லாஹ்வின் கூட்டத்தினர்; அறிந்துகொள்க: நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர் தாம் வெற்றி பெறுவார்கள்.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا آبَاءَكُمْ وَإِخْوَانَكُمْ أَوْلِيَاءَ إِنِ اسْتَحَبُّوا الْكُفْرَ عَلَى الْإِيمَانِ ۚ وَمَن يَتَوَلَّهُم مِّنكُمْ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ ﴿9:23﴾

9:23. ஈமான் கொண்டவர்களே! உங்கள் தந்தைமார்களும் உங்கள் சகோதரர்களும், ஈமானை விட்டு குஃப்ரை நேசிப்பார்களானால், அவர்களை நீங்கள் பாதுகாப்பாளர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்களில் யாரேனும் அவர்களை பாதுகாப்பாளர்களாக எடுத்துக் கொண்டால், அவர்கள் தான் அநியாயக்காரர்கள் ஆவார்கள்.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَوَلَّوْا قَوْمًا غَضِبَ اللَّهُ عَلَيْهِمْ قَدْ يَئِسُوا مِنَ الْآخِرَةِ كَمَا يَئِسَ الْكُفَّارُ مِنْ أَصْحَابِ الْقُبُورِ ﴿60:13﴾

60:13. ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ் எவர்கள் மீது கோபம் கொண்டிருக்கிறானோ, அந்தச் சமூகத்தாருடன் நேசம் கொள்ளாதீர்கள்;

قَدْ كَانَتْ لَكُمْ أُسْوَةٌ حَسَنَةٌ فِي إِبْرَاهِيمَ وَالَّذِينَ مَعَهُ إِذْ قَالُوا لِقَوْمِهِمْ إِنَّا بُرَآءُ مِنكُمْ وَمِمَّا تَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ كَفَرْنَا بِكُمْ وَبَدَا بَيْنَنَا وَبَيْنَكُمُ الْعَدَاوَةُ وَالْبَغْضَاءُ أَبَدًا حَتَّىٰ تُؤْمِنُوا بِاللَّهِ وَحْدَهُ ﴿60:4﴾

60:4. இப்றாஹீமிடமும், அவரோடு இருந்தவர்களிடமும், நிச்சயமாக உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது; தம் சமூகத்தாரிடம் அவர்கள், “உங்களை விட்டும், இன்னும் அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குகிறவற்றைவிட்டும், நாங்கள் நிச்சயமாக நீங்கிக் கொண்டோம்; உங்களையும் நாங்கள் நிராகரித்து விட்டோம்; அன்றியும் ஏகனான அல்லாஹ் ஒருவன் மீதே நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை, நமக்கும் உங்களுக்குமிடையில் பகைமையும், வெறுப்பும் நிரந்தரமாக ஏற்பட்டு விட்டன” என்றார்கள்.

இமாம் ஷைகுல் இஸ்லாம் இப்னு தைய்மிய்யா ரஹ்மதுல்லாஹி அலைஹி கூறிகிறார்கள் இறைமறுப்பாளனான காஃபிரை விடவும்! இஸ்லாத்தை விட்டு வெளியேறிய முர்தத் மிகவும் கேவலமானவன் நூல் :மஜ்மூஉல் ஃபதாவா ( 2 / 193 )

கணவன் மனைவியாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது இருவரில் ஒருவர் முர்தத் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விட்டால் இஸ்லாமிய திருமணம் அந்த இருவருக்கு மத்தியில் ரத்து செய்யப்படும்.

முர்தத் மார்க்கத்தை விட்டு வெளியேறியவருடன் சேர்ந்து வாழ்வது ஹராம் தடுக்கப்பட்ட செயல்:

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا جَاءَكُمُ الْمُؤْمِنَاتُ مُهَاجِرَاتٍ فَامْتَحِنُوهُنَّ ۖ اللَّهُ أَعْلَمُ بِإِيمَانِهِنَّ ۖ فَإِنْ عَلِمْتُمُوهُنَّ مُؤْمِنَاتٍ فَلَا تَرْجِعُوهُنَّ إِلَى الْكُفَّارِ ۖ لَا هُنَّ حِلٌّ لَّهُمْ وَلَا هُمْ يَحِلُّونَ لَهُنَّ ۖ وَآتُوهُم مَّا أَنفَقُوا ۚ وَلَا جُنَاحَ عَلَيْكُمْ أَن تَنكِحُوهُنَّ إِذَا آتَيْتُمُوهُنَّ أُجُورَهُنَّ ۚ وَلَا تُمْسِكُوا بِعِصَمِ الْكَوَافِرِ وَاسْأَلُوا مَا أَنفَقْتُمْ وَلْيَسْأَلُوا مَا أَنفَقُوا ۚ ذَٰلِكُمْ حُكْمُ اللَّهِ ۖ يَحْكُمُ بَيْنَكُمْ ۚ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ ﴿60:10﴾

60:10. ஈமான் கொண்டவர்களே! முஃமினான பெண்கள் ஹிஜ்ரத் செய்து (நாடு துறந்தவர்களாக) உங்களிடம் வந்தால், அவர்களை நீங்கள் பரிசோதித்துக் கொள்ளுங்கள்;

அல்லாஹ் அவர்கள் ஈமானை நன்கறிந்தவன்; எனவே அவர்கள் முஃமினான (பெண்கள்) என நீங்கள் அறிந்தால், காஃபிர்களிடம் அவர்களைத் திருப்பியனுப்பி விடாதீர்கள்; ஏனெனில், அந்த பெண்கள் அந்த ஆண்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களில்லை. அந்த ஆண்கள் இந்தப் பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களில்லை.

(ஆனால், இப் பெண்களுக்காக) அவர்கள் செலவு செய்திருந்ததை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்; அன்றியும் நீங்கள் அப்பெண்களுக்குரிய மஹரை கொடுத்து அவர்களை விவாகம் செய்து கொள்வது உங்கள் மீது குற்றமில்லை;

மேலும் நிராகரித்துக் கொண்டிருக்கும் பெண்களின் விவாக பந்தத்தை நீங்கள் பற்றிப்பிடித்துக் கொள்ள வேண்டாம்; அன்றியும், நீங்கள் செலவு செய்திருந்ததை (அவர்கள் போய்ச் சேருவோரிடம்) கேளுங்கள்;

(அவ்வாறே ஈமான் கொண்டு உங்களிடம் வந்து விட்டோருக்காகத்) தாங்கள் செலவு செய்ததை அவர்கள் (உங்களிடம்) கேட்கலாம் – இதுவே அல்லாஹ்வுடைய கட்டளையாகும்; உங்களிடையே அவன் (இவ்வாறே) தீர்ப்பு வழங்குகிறான் – மேலும், அல்லாஹ் நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன்.

 

وَلَا تَنكِحُوا الْمُشْرِكَاتِ حَتَّىٰ يُؤْمِنَّ ۚ وَلَأَمَةٌ مُّؤْمِنَةٌ خَيْرٌ مِّن مُّشْرِكَةٍ وَلَوْ أَعْجَبَتْكُمْ ۗ وَلَا تُنكِحُوا الْمُشْرِكِينَ حَتَّىٰ يُؤْمِنُوا ۚ وَلَعَبْدٌ مُّؤْمِنٌ خَيْرٌ مِّن مُّشْرِكٍ وَلَوْ أَعْجَبَكُمْ ۗ أُولَٰئِكَ يَدْعُونَ إِلَى النَّارِ ۖ وَاللَّهُ يَدْعُو إِلَى الْجَنَّةِ وَالْمَغْفِرَةِ بِإِذْنِهِ ۖ وَيُبَيِّنُ آيَاتِهِ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ ﴿2:221﴾

2:221. (அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை-அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்; இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள்; அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு- அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்; இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும், ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன்; (நிராகரிப்போராகிய) இவர்கள், உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்; ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும், மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான்; மனிதர்கள் படிப்பினை பெறு வதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான்.

முர்தத் மார்க்கத்தை விட்டு வெளியேறியவனுக்கு சொத்து பங்கீடும் கிடையாது:

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்“ ஒரு முஸ்லிம் இறைமறுப்பாளருக்கு வாரிசாக மாட்டார். ஓர் இறைமறுப்பாளர் முஸ்லிமுக்கு வாரிசாகமாட்டார். என உசாமா இப்னு ஸைத் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார். (புகாரி 6764)

ஒட்டு மொத்த நபித்தோழர்கள் மற்றும் முந்திய பிந்திய அனைத்து மார்க்கக அறிஞர்களும் முர்தத் மார்க்கத்தை விட்டு வெளியேறியவனுக்கு முஸ்லீம் பொற்றோர்கள் விட்டு சென்ற சொத்தில் எதற்கும் முர்தத் வாரிசாக மாட்டான் என்றே தீர்ப்பு கொடுத்தார்கள்

மார்க்கத்தை விட்டு வெளியேறிய முர்தத் மரணித்தால் அவனை இஸ்லாமிய முறைப்பபடி குளிப்பாட்டி தொழுகை நடத்தி முஸ்லீம் அடக்கஸ்லத்தில் அடக்கம் செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது

مَا كَانَ لِلنَّبِيِّ وَالَّذِينَ آمَنُوا أَن يَسْتَغْفِرُوا لِلْمُشْرِكِينَ وَلَوْ كَانُوا أُولِي قُرْبَىٰ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمْ أَنَّهُمْ أَصْحَابُ الْجَحِيمِ ﴿9:113﴾

முஷ்ரிக்குகள் (இணைவைப்பவர்கள்) தம் நெருங்கிய உறவினர்களாக இருப்பினும், நிச்சயமாக அவர்கள் நரகவாதிகள் என்று தெளிவாக்கப்பட்ட பின் அவர்களுக்காக மன்னிப்புக்கோருவது நபிக்கும், ஈமான் கொண்டவர்களுக்கும் தகுதியானதல்ல. (அல்குர்ஆன் 9:113)

سَوَاءٌ عَلَيْهِمْ أَسْتَغْفَرْتَ لَهُمْ أَمْ لَمْ تَسْتَغْفِرْ لَهُمْ لَن يَغْفِرَ اللَّهُ لَهُمْ ۚ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ ﴿63:6﴾

அவர்களுக்காக நீர் பாவமன்னிப்புக் கோரினாலும் அல்லது பாவமன்னிப்புக் கோராவிட்டாலும் அவர்களுக்குச் சமமேயாகும்; அல்லாஹ் அவர்களுக்குப் பாவமன்னிப்பளிக்க மாட்டான் – பாவம் செய்யும் சமூகத்தாரை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான். (அல்குர்ஆன் 63:6)

اسْتَغْفِرْ لَهُمْ أَوْ لَا تَسْتَغْفِرْ لَهُمْ إِن تَسْتَغْفِرْ لَهُمْ سَبْعِينَ مَرَّةً فَلَن يَغْفِرَ اللَّهُ لَهُمْ ۚ ذَٰلِكَ بِأَنَّهُمْ كَفَرُوا بِاللَّهِ وَرَسُولِهِ ۗ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ ﴿9:80﴾

(நபியே!) நீர் இவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரினாலும் அல்லது இவர்களுக்காகப் பாவ மன்னிப்புக் கோராவிட்டாலும் சரியே! இவர்களுக்காக நீர் எழுபது தடவை பாவ மன்னிப்புக் கோரினாலும் – நிச்சயமாக அல்லாஹ் இவர்களை மன்னிக்க மாட்டான். ஏனென்றால் இவர்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நிராகரித்தார்கள் – இத்தகைய பாவிகளின் கூட்டத்தை அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான். (அல்குர்ஆன் 9:80)

وَلَا تُصَلِّ عَلَىٰ أَحَدٍ مِّنْهُم مَّاتَ أَبَدًا وَلَا تَقُمْ عَلَىٰ قَبْرِهِ ۖ إِنَّهُمْ كَفَرُوا بِاللَّهِ وَرَسُولِهِ وَمَاتُوا وَهُمْ فَاسِقُونَ ﴿9:84﴾

அவர்களில் யாராவது ஒருவர் இறந்து விட்டால் அவருக்காக நீர் ஒருக்காலும் (ஜனாஸா) தொழுகை தொழவேண்டாம்; இன்னும் அவர் கப்ரில் (பிரார்த்தனைக்காக) நிற்க வேண்டாம்; ஏனென்றால் நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நிராகரித்துப் பாவிகளாகவே இறந்தார்கள். (அல்குர்ஆன் 9:84)

முர்தத் மார்க்கத்தை விட்டு வெளியேறியன் அறுத்ததை சாப்பிடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது:

حُرِّمَتْ عَلَيْكُمُ الْمَيْتَةُ وَالدَّمُ وَلَحْمُ الْخِنزِيرِ وَمَا أُهِلَّ لِغَيْرِ اللَّهِ بِهِ وَالْمُنْخَنِقَةُ وَالْمَوْقُوذَةُ وَالْمُتَرَدِّيَةُ وَالنَّطِيحَةُ وَمَا أَكَلَ السَّبُعُ إِلَّا مَا ذَكَّيْتُمْ وَمَا ذُبِحَ عَلَى النُّصُبِ وَأَن تَسْتَقْسِمُوا بِالْأَزْلَامِ ۚ ذَٰلِكُمْ فِسْقٌ ۗ 5:3﴾

5:3. (தானாகச்) செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாததின் பெயர் அதன் மீது கூறப்பட்ட (அறுக்கப்பட்ட)தும், கழுத்து நெறித்துச் செத்ததும், அடிபட்டுச் செத்ததும், கீழே விழுந்து செத்ததும், கொம்பால் முட்டப் பட்டுச் செத்ததும், (கரடி, புலி போன்ற) விலங்குகள் கடித்(துச் செத்)தவையும் உங்கள் மீது ஹராமாக்கப் பட்டிருக்கின்றன; (அனுமதிக்கப்பட்டவற்றில்) எதை நீங்கள் (உயிரோடு பார்த்து, முறைப்படி) அறுத்தீர்களோ அதைத் தவிர; (அதை உண்ணலாம். அன்றியும் பிற வணக்கம் செய்வதற்காகச்) சின்னங்கள் வைக்கப் பெற்ற இடங்களில் அறுக்கப்பட்டவையும்; அம்புகள் மூலம் நீங்கள் குறி கேட்பதும் (உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளன) – இவையாவும் (பெரும்) பாவங்களாகும்;

(குறிப்பு) ஒட்டு மொத்த இஸ்லாமிய சமூகத்தால் காதியானிகள் மற்றும் அஹ்லே குர்ஆன் ஆகிய இரண்டு கூட்டத்தாரும் இஸ்லாத்தை விட்டு வெளியேறிய முர்தத் என்று தீர்ப்பு கொடுக்கப்பட்டுள்ளார்கள் .இந்த இரண்டு கூட்டத்தாரிடமும் முர்தத்தின் சட்டங்கள் பேணப்பட வேண்டும்.

முர்தத்துகளின் தீங்கை விட்டும் எம்மையும் எம் சமூகத்தையும் அல்லாஹ் பாதுகாக்கட்டும்.

رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً ۚ إِنَّكَ أَنتَ الْوَهَّابُ   ﴿3:8  ﴾   .

3:8. “எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்!” (என்று அவர்கள் பிரார்த்தனை செய்வார்கள்.)

ஆக்கம் : D:முஹம்மது ஹுசைன் மன்பஈ
أحدث أقدم